ஒட்ஸ் கோதுமை ரவா தோசை - Oats Wheat Rava Dosai

சுவையான சத்தான காலை நேர சிற்றுண்டி.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 2 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         ஒட்ஸ் – 3 கப்
·         கோதுமை ரவை – 2 கப்
·         உளுத்தம் பருப்பு – 1/2 கப்
·         வெந்தயம் – 1 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

செய்முறை :
·         உளுத்தமபருப்பு + வெந்தயம் சேர்த்து தண்ணீரில் குறைந்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
·         ஊறவைத்த பருப்பினை , மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும். உளுத்தம்பருப்பினை அரைக்கும் நேரம், ஒட்ஸினை 2 - 3 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

·         ஊறவைத்த ஒட்ஸினை மிக்ஸியில் போட்டு 1 நிமிடம் அரைக்கவும்.

·         அரைத்த உளுத்தமாவு + ஒட்ஸ் மாவு + கோதுமை ரவை + உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கரைத்து மாவினை 3 – 4 மணி நேரம் புளிக்கவிடவும்.

·         தோசை கல்லினை காயவைத்து, தோசைகளை சுடவும்.

·         ஒரு பக்கம் நன்றாக வெந்தபிறகு, அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.

·         சுவையான சத்தான தோசை ரெடி. இத்துடன் சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இதே மாதிரி இட்லியும் செய்யலாம்இட்லிக்கு அரைக்கும் பொழுது உளுத்தம்பருப்பின் அளவினை அதிகம் சேர்த்து கொள்ளவேண்டும்.

31 comments:

Chitra said...

Looks so good and crispy. :-)

Krishnaveni said...

super healthy breakfast, looks great

Mrs.Menagasathia said...

crispy & super dosa!!

Nithu Bala said...

very healthy dosa...Geetha, there is one giveaway hosted at my blog..try to participate.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தோசை ரொம்ப நல்லா இருக்கு.

RAKS KITCHEN said...

Sounds goos,really a nice idea, I would love to try this,bookmarked this!

srividhya Ravikumar said...

arumayana moru moru dosai...delicious.

சாருஸ்ரீராஜ் said...

romba nalla irukku geetha nan summa oru nal verum kothumai ravai & oats pattu seithen ivalavu crispya illa methunu irunthahtu , next time i will try in this method.

ஹுஸைனம்மா said...

கோதுமை ரவையை அரைக்க வேண்டாமா கீதா? இங்கே கொஞ்சம் பெரிய சைஸில்தான் கோதுமை ரவை கிடைக்கும்.

நட்புடன் ஜமால் said...

என் மனைவிக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

சசிகுமார் said...

சூப்பர் ஐடியா

கொயினி said...

ஐ நல்லா இருக்கு கீதா ...அந்த தட்டில் அழகா வெசிருக்கீங்க....

Akila said...

simply superb dear...

http://akilaskitchen.blogspot.com

Mahi said...

சூப்பர் தோசை கீதா!

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா...

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி மேனகா..

நன்றி நிது...

நன்றி புவனா...

GEETHA ACHAL said...

நன்றி ராஜி...

நன்றி ஸ்ரீவித்யா...

நன்றி சாரு அக்கா...அடுத்த முறை இந்த மாதிரி செய்து பாருங்க...
சூப்பராக வரும்..

நன்றி ஜமால் அண்ணா...செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...கோதுமை ரவையினை அரைக்க வேண்டாம்..

பெரிய சைஸாக இருந்தால் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்த
பிறகு கொரகொரவென அரைத்து மாவில் சேர்த்து கொள்ளவும்.

GEETHA ACHAL said...

நன்றி சசி...

நன்றி கொயினி...

நன்றி மகி...

Priya said...

Healthy and crispy dosa looks yummy..

சிங்கக்குட்டி said...

ஸ்ஸ்ஸ்ஸ்...தோசை சூப்பரு :-)

இந்த கையில் சமைத்துக்கொண்டே அந்த கையில் இடுகைக்கு எழுதுவீங்களா கீதா? :-)

ஒரு இடுகையை படிச்சு வீட்டுக்கு போய் கணினியை திறந்து ஒட்டு போட்டு பின்னூட்டம் கொடுக்க போனா அதுக்குள்ள அடுத்த இடுகை...!

உங்கள் வேகமும் நேரத்தை கையாளும் விதமும் என்னை வியக்க வைக்கிறது.

நன்றி!.

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு கீதா ...

Nithu said...

Lovely dosa.

Sadhana said...

Supera iruku geetha!!! paarthale saapidanumnu thonudhu...yummy!!!

ஸாதிகா said...

சூப்பர் தோசை

தேனம்மை லெக்ஷ்மணன் said...

டயபடிக் உள்ளவங்க தாராளமா சாப்பிடலாம்னு நினைக்கிறேன் கீதா..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

டயபடிக் உள்ளவங்க தாராளமா சாப்பிடலாம்னு நினைக்கிறேன் கீதா..


Dr.Sameena Prathap
said...

Hi,


Miha arumaiyaana dosai...

sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...நன்றி சிங்ககுட்டி....நன்றி கஞ்சனா...நன்றி நிது...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சதனா...நன்றி ஸாதிகா அக்கா...நன்றி தேனம்மை...நன்றி சமீனா....

அன்னு said...

கீதாக்கா,

அருமையான உணவு குறிப்புகள். இன்னிக்கு இதுல இட்லி செஞ்சு பாத்திடனும், இன்ஷா அல்லாஹ். அது போலவே...சின்ன குழந்தைகள் நல்லா உடம்பு தெம்பாக வளரவும் குறிப்புகள் போடவும், சத்தான விதத்துல நாம உடம்பை குறைக்கிற மாதிரியே சின்னப்பிள்ளைங்க ( 2 or 3 வயது) நல்லா புஷ்டியா வளரவும் குறிப்புகள் சொல்லுங்க ப்ளீஸ்.

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி அன்னு...

இதே மாதிரி இட்லியும் செய்து ஆருங்க...இது குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது...கண்டிப்பாக குழந்தைகளுக்காகவும் குறிப்புகள் தருகிறேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...