மெல்டிங் மைசூர்பாக் - Melting Mysorepak

வாங்க எல்லோரும் ஸ்வீட் எடுத்து கொள்ளுங்க….

மைசூர்பாக் என்றால் செய்வது ரொம்ப கஷ்டம்அதுவும் வீட்டில் செய்தால் கடையில் வாங்குற மாதிரி இருக்காது இந்த செய்முறையில் செய்து பாருங்கமைசூர்பாக் அருமையாக இருக்கும்நன்றி தெய்வசுகந்தி

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கடலைமாவு  - 1 கப்
·         சக்கரை – 1 1/2 கப்
·         எண்ணெய் – 1 1/2 கப்
·         நெய் – 1/2 கப்

செய்முறை :
·         நான்-ஸ்டிக் கடாயில் கடலைமாவினை போட்டு 2 – 3 நிமிடங்கள் நன்றாக வாசம் போகும் வரை வறுக்கவும்.

·         வறுத்த கடலைமாவினை சலித்து கொள்ளவும். கடலைமாவு + எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         நாண்-ஸ்டிக் கடாயில் 1/2 கப் தண்ணீர் + சக்கரை சேர்த்து சக்கரை பாகு வரும் வரை வைக்கவும்.

·         பாகு வந்தபிறகு கலந்து வைத்து இருக்கும் கடலைமாவு கலவையினை இதில் சேர்க்கவும்.

·         அடிக்கடி கிளறிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறவும் மிதமான தீயில் சுமார் 8 நிமிடங்கள் கிளறவும்.
·         நெய் தடவிய தட்டில் இதனை கொட்டி சமப்படுத்தி 5 நிமிடம் ஆறவிட்டு பிறகு விரும்பிய வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.

சுவையான மைசூர்பாக் ரெடி.

கவனிக்க:
மாவினை கண்டிப்பாக வறுத்த பிறகு மைசூர்பாக் செய்ய வேண்டும். அப்பொழுது தான் நன்றாக இருக்கும்.

அதே போல வறுத்த மாவினை சலித்து கொள்ளவும்.

தட்டில் கொட்டிய பிறகு உடனே கட் செய்யாமல் சிறிது நேரம் கழித்து வெட்டினால் நன்றாக வரும்

எண்ணெயிற்கு Vegetable Oil , சூரியகாந்தி எண்ணெய் அல்லது corn Oil சேர்த்து செய்தால் இந்த மைசூர்பாக் நன்றாக இருக்கும். இதனை தவிர இந்த மைசூர்பாக் செய்ய Olive oil, Canola Oil அல்லது நல்லெண்ணெய் உபயோகிக்க வேண்டாம்.

43 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா! யம்மியா இருக்கும் போலிருக்கே

-----------

யார்ன்னா முயற்சித்து சரியா வராட்டி எங்க வீட்டுக்கு பார்சல் செய்துடுங்க

எங்க அண்ணன் வீடு கட்டுறார்

srividhya Ravikumar said...

arumayana vayil karayum mysurpa ...romba nal achu geetha akka ungal recipe parthu.... yen?asayaga varum yengalai emathalama?

LK said...

thanks for the sweet geetha

சசிகுமார் said...

அருமை அக்கா என்ன ஒரே ஸ்வீட் மயமா இருக்கு ஏதேனும் விசேஷமா

Chitra said...

Vegetable oil வைத்து மைசூர்பாக் ..... புதுசா இருக்கு!

Sadhana said...

Romba supera irukku geetha. enakku konjam anuppi vainga.

வெங்கட் நாகராஜ் said...

படம் பார்க்கும்போதே வாயில எடுத்துப் போட்டுக்கணும்னு தோணுது! - இப்பத்திக்கு படத்தை/பதத்தை பார்த்து தேத்திக்க வேண்டியது தான் :)

வெங்கட்.

RAKS KITCHEN said...

Have not tried this at home,I love the melting mysore pak than the stiff one :)Looks sinfully delicious!

சாருஸ்ரீராஜ் said...

romba nalla irukku geetha try panniduren week end

koini said...

Hi geetha mmm appadiye naakkul neer ooruthu maisoor paakkai paarka....thanks....

Geetha kutti ponnu eppadi irukka???

vanathy said...

பார்க்கவே சூப்பரா இருக்கு.

Mrs.Menagasathia said...

பார்க்கும் போதே அப்படியே எடுத்து சாப்பிடனும் போல் இருக்கு,அருமை..விரைவில் செய்து பார்த்துடனும்...

Akila said...

looks delicious and mouthwatering paks dear...

http://akilaskitchen.blogpsot.com
DNSW: A Round up

ஜெய்லானி said...

சூப்பர் ஐட்டம்... !!!கையில கிடைக்காட்டி என்ன சொல்ல அவ்வ்வ்

Priya said...

Mysorepak pakkura pothey rendu yeduthu saapidalam pola irruku..Nigella seedsoda thamizh peru karun cheeragam (googlela kandupidichen), hope its helps u..

Krishnaveni said...

superb...superb.....superb.......

asiya omar said...

பார்க்கும் பொழுதே ஷ்ஷ்ஹ்ஹ்...வாயில் போட்டால் கரைந்து காணாமல் போய்விடும் போல...

தெய்வசுகந்தி said...

naanum ithee maathirithaan naanum seyveen.

Niloufer Riyaz said...

your version of mysore pak looks so easy n delicious too

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால் அண்ணா....

//யார்ன்னா முயற்சித்து சரியா வராட்டி எங்க வீட்டுக்கு பார்சல் செய்துடுங்க

எங்க அண்ணன் வீடு கட்டுறார்//இது எல்லாம் கொஞ்சம் ஒவராக தெரியவில்லையா அண்ணா...

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி வித்யா...எப்படி இருக்கின்றிங்க...அடிக்கடி குறிப்புகள் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்...இங்கே அக்ஷ்தா குட்டியினை பார்க்கவே இப்பொழுது எல்லாம் சரியாக இருக்கின்றது...அன்பான விசரிப்புக்கு மிகவும் நன்றி வித்யா...

GEETHA ACHAL said...

நன்றி கார்திக்...

நன்றி சசி...ஆமாம் இந்த வாரம் எங்களுடைய 5வது திருமணநாள்...

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா...செய்து பாருங்க...நல்லா இருக்கும்...

நன்றி சதானா....அனுப்பி விடுகிறேன்...

நன்றி வெங்கட் அண்ணா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

GEETHA ACHAL said...

நன்றி ராஜி...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி சாரு அக்கா...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

நன்றி கொயினி...இங்கே எல்லொரும் நலம்...அக்ஷ்தாவோடாவே டைம் இப்ப எல்லாம் சரியாக இருக்கின்றது...

நன்றி மேனகா...கண்டிப்பாக செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

நன்றி அகிலா..

நன்றி ஜெய்லானி...

நன்றி ப்ரியா...

நன்றி கிருஷ்ணவேனி...

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா..

நன்றி தெய்வசுகந்தி...இது உங்க குறிப்பு தான் சில மாறுதலுடன்...

நன்றி நிலோபர்...

Vijiskitchen said...

super yummy.

Anonymous said...

super recipe geetha ji ..thanks for sharing

Mahi said...

SKC மைசூர்பா மாதிரியே இருக்கு கீதா! கோவையை ஞாபகப்படுத்திட்டீங்க.

Devasena Hariharan said...

i never knew mysore pak can be made at home. you have explained it easily and clearly

தேனம்மை லெக்ஷ்மணன் said...

எண்ணெயும் உபயோகித்து மைசூர்பாக்கா .. செய்து பார்க்கிறேன் கீதா

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி விஜி....

நன்றி சந்தியா...

நன்றி மகி...

நன்றி தேனம்மை...ஆமாம் அக்கா எண்ணெய் சேர்த்து செய்து பாருங்க...சூப்ப்ராக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தேவசேனா....கண்டிப்பாக செய்து பாருங்க...அருமையாக இருக்கும்...

பாத்திமா ஜொஹ்ரா said...

ஈத் முபாரக்

Mano Saminathan said...

கீதா! வழக்கம்போல் டயட் ரெசிப்பி எல்லாம் இல்லாமல் ஒரு மாறுதலுக்கு மைசூர்பாக் வந்திருக்கிறது1 பார்க்கவே அருமையாக இருக்கிறது!

சிங்கக்குட்டி said...

கீதா! வழக்கம்போல் சூப்பர் :-)

அப்புறம் தங்கமணி நேற்று பேசும் போது நீங்கள் விசாரித்ததை சொன்னார்கள், உங்கள் அன்புக்கு மிக்க நன்றி :-)

GEETHA ACHAL said...

நன்றி பாத்திமா...

நன்றி மனோ ஆன்டி...ஆமாம் எப்படி பார்த்தாலும் டயட் என்றால் எல்லொருக்கும் போர் அடித்துவிடும்..அடிக்கடி இப்படி ஸ்வீட் கொடுக்க வேண்டுமே...

நன்றி சிங்ககுட்டி...குட்டிஸ் எப்படி இருக்காங்க...ராஜியினை கேட்தாக சொல்லவும்.

Premalatha Aravindhan said...

Never prepared mysore pak at home,really amazing.wanna try it out.

Jaleela Kamal said...

படிக்கும் போதே வாயில் போட்டு மெல்ட் ஆகியது போல் இருக்கு,நல்ல இருக்கு
எங்க இப்ப செய்ய முடியுது.
முன்பெல்லாம் அடிக்கடி இந்த நெய் ம்மைசூர் பாக் செய்வேன். (வாயில் போட்டா கரைவ்தால் அது பேர் நெய் மைசூர் பாக்)


வாரம் ஒரு வ்கை ஸ்வீட் டிர பண்ணுவது, இபப் சாப்பிட ஆளில்லை ஆகையால் எதுவும் செய்வதில்லை.

GEETHA ACHAL said...

நன்றி ப்ரேமலதா..கண்டிப்பாக செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா..ஆமாம் யாரவது வீட்டில் விரும்பி சாப்பிடுவதற்கு இருந்தால் நிறைய செய்யலாம்...எங்கள் வீட்டிலும் யாரும் ஸ்வீட்ஸ் விரும்பி சாப்பிடுவதில்லை..நண்பர்கள் வரும் பொழுது இதனை செய்வதுண்டு...

G.N.Senthil Kumar said...

ரொம்ப நன்றி கீதா ஆச்சல் அவர்களே.......

G.N.Senthil Kumar said...

ரொம்ப நன்றி கீதா ஆச்சல் அவர்களே...
இப்போ வீட்டில் நான் கூட செய்து பார்கிறேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...