ஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி - Oats Grits Idly - Indian Oats Recipe / Idly Varieties

சுவையான சத்தான காலை நேர சிற்றுண்டி…நீங்கள் செய்து பார்த்து உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவும்…


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         ஒட்ஸ் – 2 கப்
·         க்ரிட்ஸ் – 2 கப்
·         உளுத்தம்பருப்பு – 3/4 கப்
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         உளுத்தம்பருப்பினை 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

·         மிக்ஸியில் உளுத்தம்பருப்பினை போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·         ஒட்ஸினை சிறிது தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து அதனையும் அரைத்து கொள்ளவும்.

·         உளுத்தம்பருப்பு மாவு + அரைத்த ஒட்ஸ் மாவு + க்ரிட்ஸ் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து மாவினை குறைந்தது 4 – 5 மணி நேரம் புளிக்கவிடவும்.

·         இட்லி தட்டில், மாவினை ஊற்றி வேகவிடவும்.

·         சுவையான சத்தான இட்லி ரெடி. இதனை சாம்பார், சட்னி, பொடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
க்ரிட்ஸினை தனியாக ஊறவைக்கவோ அல்லது அரைக்கவோ தேவையில்லை.

அரைத்த மாவுடன் சேர்த்து க்ரிட்ஸினை கலந்து ஊறவைத்தாலே போதும்.

க்ரிட்ஸினை போலவே ரவை அல்லது கோதுமை ரவையும் சேர்த்து இதே போல செய்யலாம்.

அதே மாதிரி உளுத்தம்பருப்பினை சேர்க்காமல் அதற்கு பதில், இத்துடன் 2 கப் தயிர் சேர்த்து கலந்து மாவினை 1 மணி நேரம் ஊறவைத்த பிறகு இட்லி செய்தால் அருமையாக இருக்கும்.

31 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

சாப்பிடத் தூண்டுகிறது.

Jay said...

This dish is just amazing and healthy...! wonderful presentation dear..:)

Premalatha Aravindhan said...

hi geetha,

Just now i come know about the grits,really usefull for me.Idly luks very soft.Adding of oats and grits really amazing.Thanks for the wounderfull recipe.

சசிகுமார் said...

அக்கா எப்பவும் போல சூப்பர் வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

மருத்துவர்கள் உங்களுக்கு எதிரா ஒரு இயக்கமே துவங்கினாலும் துவங்களாம்,

பேஷண்ட் குறைஞ்சிடும் ...

ஹுஸைனம்மா said...

போற போக்கில, “வித விதமான இட்லிகள்”னு ஒரு புத்தகமே போடலாம்போல, அந்தளவுக்கு, இட்லி ஸ்பெஷலிஸ்ட் ஆகிட்டு வர்றீங்க நீங்க!! வாழ்த்துகள்!!

Mrs.Menagasathia said...

அருமையாக இருக்கு..உங்கள் ப்ளாக்கில் விதவிதமான இட்லி,தோசை குறிப்புகள் நிறைய இருக்கு..பாராட்டுக்கள்!!

ஸாதிகா said...

மேனகா பிளாக்கில் ஓட்ஸில் உப்புமா.இங்கே இட்லி.ஓட்ஸ் தயாரிப்பாளர்களுக்கு வியாபாரம் பிய்த்துக்கொண்டு போய்விடும் போலும்.

Akila said...

grits is really new to me dear... new n innovative one n idly paakka romba mridhuva iruku...

asiya omar said...

பார்க்கவே சாப்பிடத்தூண்டுது.

Chitra said...

It looks tempting...

ஸ்வர்ணரேக்கா said...

கீதா...
தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்...

அவசியம் எழுதவும்....

Pushpa said...

Great awesome healthy recipe....

Pushpa @ simplehomefood.com

GEETHA ACHAL said...

நன்றி புவனா...

நன்றி ஜெய்...

நன்றி ப்ரேமலதா...

நன்றி சசி...

GEETHA ACHAL said...

// ஹுஸைனம்மா said...
போற போக்கில, “வித விதமான இட்லிகள்”னு ஒரு புத்தகமே போடலாம்போல, அந்தளவுக்கு, இட்லி ஸ்பெஷலிஸ்ட் ஆகிட்டு வர்றீங்க நீங்க!! வாழ்த்துகள்!!//

தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஹுஸைனம்மா...ஆமாம் சீக்கிரமாக புத்தகம் போட்டுவிட்டால் போச்சு...

GEETHA ACHAL said...

// Mrs.Menagasathia said...
அருமையாக இருக்கு..உங்கள் ப்ளாக்கில் விதவிதமான இட்லி,தோசை குறிப்புகள் நிறைய இருக்கு..பாராட்டுக்கள்!//

தங்கள் கருத்துக்கும் பாராட்டிக்கும் மிகவும் நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

நன்றி அகிலா...

நன்றி ஆசியா அக்கா...

நன்றி சித்ரா...

நன்றி ஸ்வர்ணரேகா...

நன்றி புஷ்பா...

Krishnaveni said...

idly looks great, asathureenga geetha

Kanchana Radhakrishnan said...

arumai Geetha.

Mahes said...

So many good recipes, Geetha. Good job, keep it up.

GEETHA ACHAL said...

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி கஞ்சனா...

நன்றி மகேஷ்...

Devasena Hariharan said...

very healthy one Geetha! Actually I have been trying to follow some healthy eating pattern, but not sucessfull.

this will help me.

தெய்வசுகந்தி said...

நல்ல காம்பினேஷன்!!!

தெய்வசுகந்தி said...

நல்ல காம்பினேஷன்!!!

vanathy said...

நல்லா இருக்கு இட்லி. நல்ல சத்தானதும் கூட.

GEETHA ACHAL said...

நன்றி தேவசேனா...இந்த ப்ளாகில் இருக்கும் பெரும்பாலான குறிப்புகள் அனைத்துமே டயட் சம்மந்தமான குறிப்புகள் தான்...செய்து பாருங்க...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி வானதி..

Priya said...

Soft idlies pakkave assaiya irruku saapidanam pola..

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

Padhu said...

Dear geetha
what is grits??

Suma said...

What is grits ? mean

GEETHA ACHAL said...

சுமா, க்ரிட்ஸிற்கு பதிவிலேயே லிங்க கொடுத்துவுள்ளேன்...பாருங்கள்...நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...