ஒட்ஸ் வடை - Oats Vadai


நேற்று இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது அக்ஷ்தா வடை வேண்டும் என சொன்னா…அதுக்கு மேல எனக்கு உளுந்து ஊறவைக்க பொறுமை கிடையாது…சரி…இட்லிக்கு அரைந்த உளுத்தமாவில் சிறிது எடுத்து வடை சுடலாம் என்று நினைத்தேன்..

ஆனா இட்லிக்கு அரைந்த உளுத்தமாவு சிறிது தண்ணியாக இருந்ததால் ஒட்ஸினை பொடித்து இதில் சேர்த்து வடை சுட்டேன்…எண்ணெயினை அதிகம் குடிக்காமல் வடை மிகவும் அருமையாக வந்தது….

சாதரண வடையிற்கும் இந்த ஒட்ஸ் வடையிற்கும் பெரியதாக எந்த வித்தியசமும் இருக்காது…நம்மால சொன்னால் தான் தெரியும்…..நீங்களும் செய்து பார்த்து உங்களுடைய கருத்தினை சொல்லுங்க….

படத்தினை பார்த்து இது வடையா இல்ல போண்டாவா என்று எல்லாம் கேட்க கூடாது...என்ன சரியா...இப்படி செய்தால் தான் அக்ஷ்தாவிற்கு பிடிக்கும்...நீங்கள் உங்களுக்கு விருப்பம் போல செய்து தட்டி போட்டு வடையினை சுடுங்க....

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         உளுத்தம்ப்பருப்பு – 1/2 கப்
         ஒட்ஸ் – 1/2 கப் பொடித்தது
         உப்பு – தேவையான அளவு
         மிளகுதூள் – 1/2 தே.கரண்டி
         கொத்தமல்லி - சிறிதளவு
         எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை :
      உளுத்தம்ப்பருப்பினை 1 மணி நேரம் ஊறவைத்து மைய அரைத்து கொள்ளவும்.      ஒட்ஸினை பொடித்து வைக்கவும்.

         அரைத்த உளுத்தம்ப்பருப்பு + ஒட்ஸ் + மிளகு + உப்பு + கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

      கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் வடைகளை தட்டி போட்டு பொரிக்கவும்.       சுவையான சத்தான வடை ரெடி.

கவனிக்க :
விரும்பினால் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளலாம்….

அதே போல், வடை மாவு தண்ணியாக இருந்தால் அரிசி மாவு கலந்து கொண்டால் வடை நன்றாக வரும்…

25 comments:

Chitra said...

உங்கள் பொண்ணுக்கு நன்றி சொல்லணும். அருமையான healthy ரெசிபிக்கு காரணம் அவள்தானே! :-)

மகி said...

கரெக்ட்டா டீ-டைம்ல போஸ்ட் பண்ணிருக்கீங்க,அப்படியே அந்த ப்ளேட்ட எடுத்துக்கறேன்.:)

prabhadamu said...

கீதா அக்கா சூப்பர். ஆனா இது ஏன் இப்படி இருக்கு? அதை சரிப்பன்னுங்க அக்கா.

LK said...

ஹ்ம்ம் அருமை


Dr.Sameena Prathap
said...

Hi Geetha,

Oats ennakku romba pidikkum...:)Iam also trying out various dishes with oats...vadai super duper...:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

ஸாதிகா said...

அட..திடீர் ஐடியாவில் உதித்த ரெஸிப்பியா?சூப்பர்ப்.

சாருஸ்ரீராஜ் said...

ஹை இந்த திடிர் வடை நல்லா இருக்கே, எனக்கும் இப்ப சாப்பிடனும் போல இருக்கு , ஆனால நான் நாளைக்கு தானே மாவு அரைப்பேன். செய்து பார்துட்டு சொல்கிறேன்.

Kurinji said...

really gr8 idea, konjam parcel pannividung.

Geetha6 said...

wav..super idea !

Pushpa said...

Healthy and yummy vadai.

indianspicemagic said...

Healthy and delicious vadai.

சசிகுமார் said...

அருமை வாழ்த்துக்கள்

S.Menaga said...

ஒட்ஸ் வடை செம சூப்பராயிருக்கு...

Priya said...

Oats vadai looks soo crispy, regarding ur q"n about double cream, its a full fat whipping cream..hope this helps Geetha..

RAKS KITCHEN said...

Makes me instantly hungry! Healthier version!

தெய்வசுகந்தி said...

நல்ல வடை! அருமையா இருக்கு கீதா!

Lakshmi said...

ஓட்ஸ்வடைன்னு சொன்னாதான் தெரியுது. நல்லசத்தானரெசிப்பி.

PJ said...

Yummy vadai!

asiya omar said...

வடை சூப்பர்.திடீர்னு செய்யும் ரெசிப்பி செம டேஸ்ட் எப்பவும்.

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா...ஆமாம் குழந்தைகளாள தான் நாமும் எதாவது differentஆக ட்ரை செய்ய முடியுது...அப்படியாவது அவங்க சாப்பிட்டா சரி...

நன்றி மகி...வாங்க எங்க வீட்டிக்கு...வடையுடன் சூடாக டீயும் நானே போட்டு தரேன்...வரிங்களா...

நன்றி பிரபா...அது ஏன் இப்படி ஆகுது என்று தெரியவில்லை...இப்போ சரிபன்னிவிட்டேன்...

Google Chromeயில் நல்ல வருது...ஆனால் IEயில் பார்க்கும் பொழுது தான் பிரச்சனை இருக்கு...என்ன என்று தெரியவில்லை...

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்...

நன்றி சமீனா...ஆமா நானும் நிறைய சமையலில் ஒட்ஸினை சேர்த்து கொள்வது...நன்றி...

நன்றி ஸாதிகா அக்கா...ஆமாம் திடீர் உதித்த ரெஸிப்பி தான்...

நன்றி சாரு அக்கா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...நன்றி...

நன்றி குறிஞ்சி..உங்களு இல்லாமலா...கண்டிப்பாக பார்சல் அனுப்பிவிட்டா போச்சு...

GEETHA ACHAL said...

நன்றி கீதா...

நன்றி புஷ்பா...

நன்றி இந்தியன் ஸ்பைசஸ்...

நன்றி சசி...

நன்றி மேனகா..

நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

நன்றி ராஜி...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி லஷ்மி அம்மா...

நன்றி பத்மஜா...

சிங்கக்குட்டி said...

ஓட்ஸ்ல இவ்வளவு மேட்டர் இருக்கதே எனக்கு உங்க பதிவு எல்லாம் படிக்கும் போதுதான் தெரிகிறது.

ஆமா இது எல்லாம் எங்க கத்துகிட்டீங்க கீதா ?

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி சிங்ககுட்டி...

ஒட்ஸினை சாப்பிடுவது மிகவும் நல்லது என்பதால் இப்படி எல்லாம் சமைக்க ஆரம்பித்தாகிவிட்டது...

Related Posts Plugin for WordPress, Blogger...