ஒட்ஸ் கோதுமை ரவா தோசை - Oats Wheat Rava Dosai

சுவையான சத்தான காலை நேர சிற்றுண்டி.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 2 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         ஒட்ஸ் – 3 கப்
·         கோதுமை ரவை – 2 கப்
·         உளுத்தம் பருப்பு – 1/2 கப்
·         வெந்தயம் – 1 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

செய்முறை :
·         உளுத்தமபருப்பு + வெந்தயம் சேர்த்து தண்ணீரில் குறைந்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
·         ஊறவைத்த பருப்பினை , மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும். உளுத்தம்பருப்பினை அரைக்கும் நேரம், ஒட்ஸினை 2 - 3 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

·         ஊறவைத்த ஒட்ஸினை மிக்ஸியில் போட்டு 1 நிமிடம் அரைக்கவும்.

·         அரைத்த உளுத்தமாவு + ஒட்ஸ் மாவு + கோதுமை ரவை + உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கரைத்து மாவினை 3 – 4 மணி நேரம் புளிக்கவிடவும்.

·         தோசை கல்லினை காயவைத்து, தோசைகளை சுடவும்.

·         ஒரு பக்கம் நன்றாக வெந்தபிறகு, அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.

·         சுவையான சத்தான தோசை ரெடி. இத்துடன் சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இதே மாதிரி இட்லியும் செய்யலாம்இட்லிக்கு அரைக்கும் பொழுது உளுத்தம்பருப்பின் அளவினை அதிகம் சேர்த்து கொள்ளவேண்டும்.

சிம்பிள் க்ரில்டு கார்ன் சால்சா - Simple Grilled Corn Salsa

எளிதில் செய்ய கூடிய சத்துக்கள் நிரம்பிய சால்சா….

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கார்ன் – 2
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய் – 2
·         கொத்தமல்லி சிறிதளவு
·         சிவப்பு வெங்காயம் – 1/4
·         எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·         உப்பு தேவைக்கு

செய்முறை :
·         சோளத்தில்  எலுமிச்சை சாறு + உப்பு சேர்த்து தடவி கொள்ளவும். பிறகு, சோளத்தினை அடுப்பில் சுடவும் அல்லது க்ரில் செய்யவும்.

·         சுட்ட சோளத்தில் இருந்து சோளமுத்துகளை தனியாக எடுத்து கொள்ளவும்.

·         தக்காளி + பச்சைமிளகாய் + கொத்தமல்லி + வெங்காயத்தினை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

·         சோளம் + நறுக்கிய பொருட்கள் சேர்த்து கலந்து கொள்ளவும். (விரும்பினால் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.). சுவையான சத்தான கார்ன் சால்சா ரெடி.

கவனிக்க :
சோளத்தினை எப்பொழுதும் எலுமிச்சை சாறு சேர்த்து சுட்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும். சத்துகளும் வெளியேறாது.

பார்லி எலுமிச்சை சாதம் - Barley Lemon Rice

எப்பொழுது பார்லியில் கஞ்சியினை குடிப்பது போர் அடித்துவிட்டால், இப்படி லெமன் ரைஸ், புளிசாதம், தயிர்சாதம் போன்றவை செய்து சாப்பிட்டால் உடலிற்கு நல்லதுசுவையாகவும் இருக்கும்.

அரிசி உணவினை அதிகம் தவிர்த்து , பார்லி, ஒட்ஸ், பயறு வகைகள் என விதவிதமாக சாப்பிடுவதால் உடலில் சக்கரை, கொலஸ்டிரால் அளவுகள் அதிகரிக்காமல் இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வேகவைத்த பார்லி – 2 கப்
·         எலுமிச்சை பழம் – 1
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         வேகவைத்த வேர்க்கடலை – 2 மேஜை கரண்டி (விரும்பினால்)
·         உப்பு - தேவைக்கு

தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு - தாளிக்க
·         உளுத்தம்பருப்பு – 1 தே.கரண்டி
·         பச்சைமிளகாய் – 2
·         இஞ்சி சிறிய துண்டு
·         கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·         எலுமிச்சை பழத்தில் இருந்து சாறினை எடுத்து கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கிறி வைக்கவும். இஞ்சியினை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பிறகு பச்சைமிளகாய் + இஞ்சி + கருவேப்பில்லை + வேர்க்கடலை போட்டு பிறகு மஞ்சள் தூள் + எலுமிச்சை சாறு + உப்பு சேர்த்து அடுப்பினை நிறுத்திவிடவும்.

·         இந்த கலவையினை பார்லியுடன் சேர்த்து கிளறவும். சுவையான சத்தான பார்லி லெமன் ரைஸ் ரெடி. இத்துடன் சிப்ஸ், வறுவலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
1 கப் பார்லிக்கு 2 1/2 கப் தண்ணீர் வைத்து பிரஸர் குக்கரில் 5 – 6 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

பிரஸர் குக்கரில் இல்லாமல் தனியாக வேகவைக்க வேண்டும் என்றால் ,பார்லி வேக குறைந்தது 45 – 55 நிமிடங்கள் ஆகும்.

வாழைக்காய் வாழைப்பழம் தோலினை சாப்பிடலாமா???? - பகுதி - 2


இந்த தலைப்பிற்காக, தங்களுடைய அன்பான கருத்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகள் பல….

நாம் வாழைப்பழம் சாப்பிடும் பொழுதும் சரி…. அல்லது வாழைக்காயினை சமைக்கும் பொழுதும் சரி…. எப்பொழுதும் அதனுடைய தோலினை பெரும்பாலும் நீக்கிவிடுவோம்…அப்படி தான் நானும் இருந்தேன்…….சரி சரி மேட்டருக்கு வருவோம்….

வாழைக்காய் வாழைப்பழம் தோலினை சாப்பிடலாமா????..

போன மாதம் தோழி நிது நடத்திய Eventயில் வாழைக்காய், வாழைப்பழம் தோலினை உபயோகித்து ஒன்று இரண்டு குறிப்புகள் பார்த்தேன்…..மிகவும் ஆச்சரியமாக இருந்ததுஇதுல கூட சமைக்கலாமா என்று நானும் மேனகாவும் கூட பேசிக்கொண்டோம்…..

சின்ன பொண்ணாக இருந்த பொழுது என்னுடைய ப்ரெண்ட்ஸ் சொன்னாதாக நினைப்புவாழைக்காய் தோல் பல்லில் பட்டுவிட்டால் அவ்வளவு தான் பல் கருப்பாக ஆகிவிடும் என்று ….அப்பொழுதில் இருந்து இந்த வாழைக்காய் என்றால் அப்படி ஒரு பயம்

சரிசரிவாழைப்பழம் தோல் , வாழைக்காய் தோலினை சாப்பிடலாமா?????
அவற்றால் எதாவது பயன் இருக்கின்றது???????????
அதனை சாப்பிடால் முக்கியமாக பல் கருப்பாகமல் இருக்குமா?????????….(என்னுடைய பயம் எனக்கு!!!!!!!!!)….
இப்படி பல கேள்விகள் தோன்றவே அதன் தேடுதல் வேட்டை தொடங்கியது…..

முதலில் வாழைப்பழத்திற்கு வருவோம்….வாழைப்பழத்தில் அதிக அளவு நார்சத்து, பொட்டஸியம்,இரும்பு சத்துவிட்டமின்ஸ் இருக்கின்றது .

வாழைப்பழம் சாப்பிடுவதால் பல பயன்கள் அடைக்கிறோம் என்பது பலரும் அறிந்ததே…..…” தினம் ஒரு ஆப்பிள் போல தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் கண்டிப்பாக உடலிற்கு நன்மை தான்…பர்ஸுக்கும் தான்…..

வாழைப்பழம் தோலில் வாழைப்பழத்தில் இருக்கும் சத்துகளை விட இரண்டு மடங்காக இருப்பது என்பது ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

வாழைப்பழம் தோலில் வாழைப்பழத்தினை விட இரண்டு பங்கு பொட்டஸியம் சத்துகள் காணப்படுக்கின்றதுஅதனால் உடலிற்கு மிகவும் நல்லது. அதுவும் வளரும் குழந்தைகளும், வயதனவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

முதலில் இதனை படிக்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருந்தாலும், பல தேடுதலில் கிடைத்த தகவல் இது தான்….

வாழைப்பழம் தோல் சாப்பிடுவது என்பது மிகவும் கஷ்டம் என்றாலும் அதனை சிறிய அளவில் சாப்பிட்டு பழகிவிட்டால் பழகிவிடும்.

வாழைப்பழம் தோலினை அப்படியே சாப்பிட பிடிக்கவில்லை என்றால், ஜுஸ், ஸ்மூத்தீ போன்றவை செய்யும் பொழுது வாழைப்பழத்துடன் தோலினையும் சேர்த்து மிக்ஸியில் அடித்து குடிக்கலாம்….

வாழைப்பழத்தினை விட அதனுடைய தோலில் அதிக அளவில் நார்சத்துகள் (Dietary Fiber) இருக்கின்றது…. இதனால் கொலஸ்டிரால் அளவு  அதிகரிக்காமல் பார்த்து கொள்ளமுடிகின்றது .

கவனிக்க : வாழைப்பழம் தோலினை சாப்பிடும் பொழுது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதில் அதிக அளவு நார்சத்து இருப்பதால், நன்றாக மென்று சாப்பிட்டால் தான் சீக்கிரமாக ஜீரணம் ஆகும்.

அதே போல வாழைப்பழம் தோலினைபகல்  பொழுதில் சாப்பிடுவதால் பசி சீக்கிரமாக எடுக்காதுடயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது

இதே போல தான் வாழைக்காயிலும் இருக்கின்றதுஅதனால் கூடுமான வரையில் தோலுடன் சமைப்பதே மிகவும் சிறந்தது….(…அதனால் தான் பாட்டி காலத்து சமையலில் தோலுடனே சேர்த்து சமைத்தாங்க போல…..இப்ப தான் சமையலில் எல்லாத்தையும் தூக்கி போடுகிறேன் பேர்வழி என்று நல்லதையும் தூக்கி வெளி போடுகிறோம்….)

கவனிக்க : வாழைக்காயின் தோலினை நன்றாக வதக்கியோ அல்லது வேகவைத்தோ தான் சாப்பிட வேண்டும்… சமைக்காமல் சாப்பிட கூடாது…

பெரும்பாலும் வாழைக்காயினை க்ரேவியில், குழம்பில் சேர்க்கும் பொழுது அப்படியே தோலுடன் சேர்த்து சமைப்பது நல்லது.

தோலினை நீக்குவதால், காயில் உள்ள விட்டமின்ஸ் மற்றும் சத்துக்களையும் நீக்கிவிடுகிறோம்… உங்களுக்கு தோல் நீக்காமல் சமைப்பது பிடிக்கவில்லை என்றால் மெல்லியதாக தோலினை நீக்கவும்…

கொசு கடி, தோல் எரிச்சல் போன்ற இடத்தில் வாழைப்பழ தோலினை வைத்து தேய்த்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.

சரிசரிவாழைக்காய் தோல், வாழைப்பழம் தோலினை சாப்பிடுவது நல்லது என்று நான் (நீங்களும் தான் என்று நினைக்கிறேன்…) ஓர் அளவிற்கு ஏற்று கொண்டாகிவிட்டதுஅப்புறம் என்ன….அதனை வைத்து எதவாது செய்யலாம் என்று செய்த துவையல் இது….நீங்களும் செய்து பார்த்து உங்கள் அன்பான கருத்துகளை தெரிவிக்கவும்….

வாழைக்காய் தோல் துவையல்

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வாழைக்காய் தோல் – 1 கப் ( 1 காயில் இருந்து தோல் நீக்கியது)
·         காய்ந்த மிளகாய் – 4
·         கடலை பருப்பு  - 2 மேஜை கரண்டி
·         உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி
·         கடுகு, எண்ணெய் – 1 தே.கரண்டி
·         தேங்காய் சிறிதளவு
·         பெருங்காயம் சிறிதளவு
·         உப்பு தேவைக்கு

செய்முறை :
·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு + கடலைப்பருப்பு + காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

·         பின்னர் பொடியாக நறுக்கிய வாழைக்காய் தோலினை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.

·         வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு அத்துடன் தேங்காய் + பெருங்காயம் + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·         சுவையான சத்தான வாழைக்காய் தோல் துவையல் ரெடி.

குறிப்பு :
வாழைக்காய் தோலினை நன்றாக வதக்கிகொத்தமல்லி சட்னி, புதினா சட்னி போன்றவை செய்யும் பொழுது சேர்த்து அரைத்தால் இட்லி , தோசைக்கு சூப்பர்ப் காம்பினேஷன்.

வாழைப்பழம் தோலினை, வாழைப்பழம் குழிப்பணியாரம், தோசை போன்றவை செய்யும் பொழுது தோலையும் சிறிது அரைத்தோ அல்லது மிகவும் பொடியாக நறுக்கி போட்டு செய்தாலோ சூப்பராக இருக்கும்

வாழைக்காய் வாழைப்பழம் தோலினை சாப்பிடலாமா????

நாம் வாழைப்பழம் சாப்பிடும் பொழுதும் சரி…. அல்லது வாழைக்காயினை சமைக்கும் பொழுதும் சரி…. எப்பொழுதும் அதனுடைய தோலினை நீக்கிவிடுவது தான் உண்மையான உண்மை….அப்படி தான் நானும் இருந்தேன்…ஆனால் அதில் தான் சந்தேகம்...

வாழைக்காய் வாழைப்பழம் தோலினை சாப்பிடலாமா????..தங்களுடைய அன்பான கருத்துகளை தெரிவிக்கவும்…..அடுத்த பதிவில் சந்திப்போம்….

கொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadai Curry


எப்பொழுதும் பொதுவாக வடக்கறியினை கடலைப்பருப்பில் தான் செய்வாங்கஒரு மாறுதலுக்காக கொண்டைக்கடலையில் செய்து பாருங்க….சுவையாக சத்தான உணவாக இருக்கும்.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 2 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கொண்டைக்கடலை – 1 கப்
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         இஞ்சி – 1 சிறிய துண்டு
·         பூண்டு – 5 பல்
·         கருவேப்பில்லை – 5 இலை
·         தேங்காய் பால் – 2 மேஜை கரண்டி அளவு (விரும்பினால்)

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         சோம்பு – 1 தே.கரண்டி
·         கிராம்பு, ஏலக்காய், பட்டை- 1

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு - தேவைக்கு

கொண்டைக்கடலையுடன் சேர்த்து அரைக்க :
·         சோம்பு – 1 தே.கரண்டி
·         பச்சைமிளகாய் – 3
·         உப்பு – 1 தே.கரண்டி

செய்முறை :
·         கொண்டைக்கடலையினை குறைந்தது 2 – 3மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். ஊறவைத்த கொண்டைக்கடலையினை தண்ணீர் வடித்து அத்துடன் சேர்த்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

·         இட்லி தட்டில், அரைத்த கலவையினை உருட்டி ஆவியில் குறைந்தது 10 – 12 நிமிடங்கள் வேகவிடவும்.

·         வெங்காயம் + தக்காளி + கருவேப்பில்லையினை நறுக்கி கொள்ளவும். பூண்டு + இஞ்சியினை நசுக்கி வைக்கவும். (அரைக்க வேண்டாம்.)

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளிக்கவும்.

·         அதன்பிறகு வெங்காயம் + இஞ்சிபூண்டு + தக்காளி, கருவேப்பில்லை என்று ஒன்றின்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

·         பிறகு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் + தேங்காய் பால் சேர்த்து நன்றாக 6 – 8 நிமிடங்கள் வேகவிடவும்.

·         வேகவைத்த கொண்டைக்கடலை உருண்டைகளை உதிர்த்து இதில் சேர்க்கவும். மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும். கடைசியில் கொத்தமல்லி தூவவும்.

·         சுவையான சத்தான கொண்டைக்கடலை வடக்கறி ரெடி. இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...