பாசிப்பருப்பு பாயசம் - Pasiparupu Payasam / Moong Dal


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பாசிப்பருப்பு – 1 கப்
         பொடித்த வெல்லம் – 1/4 கப்
         ஏலக்காய் – 2
கடைசியில் சேர்க்க :
·         நெய் – 1 மேஜை கரண்டி
·         முந்திரி, திராட்சை சிறிதளவு

செய்முறை :
·         பாசிப்பருப்பினை 3 கப் தண்ணீர் ஊற்றி பிரஸர் குக்கரில் போட்டு 3 - 4  விசில் வரும் வரை வேகவிடவும்.

·         குக்கரில் பிரஸர் அடங்கியது, அதனை திறந்து அத்துடன் பொடித்த வெல்லம் + ஏலக்காய் சேர்த்து நன்றாக வெல்லம் வாசம் போகும்வரை கொதிக்கவிடவும்.

·         கடைசியில் முந்திரி + திராட்சை சேர்த்து நெயில் வறுத்து இதில் சேர்க்கவும். சுவையான சத்தான பாயசம் ரெடி.

குறிப்பு :
இத்துடன் பால் சேர்த்து செய்தால் இன்னும் சுவையுடன் இருக்கும்.
ரொம்பவும் கெட்டியாக இல்லாமல் சிறிது தண்ணியாக இருந்தால் தான் இந்த பாயசம் சூப்பராக இருக்கும்

சிக்கன் கட்லட் - Chicken Cutlets


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         Boneless skinless சிக்கன் – 1/4 கிலோ
         வெங்காயம் – 1
         பச்சைமிளகாய் – 3
         இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
         கொத்தமல்லி + கருவேப்பில்லை – சிறிதளவு
         எண்ணெய் – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         சிக்கனை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து கொள்ளவும்.

·         வெங்காயம் + பச்சை மிளகாய் + கொத்தமல்லி, கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி வைக்கவும்.


·         சிக்கன் + தூள் வகைகள் + இஞ்சி பூண்டு விழுது + நறுக்கிய பொருட்கள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·         விரும்பிய வடிவத்தில் கட்லட் செய்து கல்லில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய கட்லட் ரெடி. இத்துடன் தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க:
விரும்பினால இத்துடன் Bread Crumbs சேர்த்து கொள்ளலாம். 

Thanksgiving Lunch

இன்று இங்கு Thanksgiving Day…எங்களுடைய வீட்டில் நாங்கள் எப்பொழுதும் கொண்டாடுவோம்… நீங்கள் வந்து கலந்து கொள்ளவும்…


எப்பொழுதுமே நான் சிக்கனில் தான் செய்து இருக்கின்றேன்..இந்த வருடம் தான் முதன்முறையாக Turkeyயில் செய்தேன்…மிகவும் பயமாக தான் இருந்தது…அதனை முதலில் சமைக்க…ஏன் என்றால் turkey மிகவும் சீக்கிரமாக வறண்டுவிடும்…அதே மாதிரி அதிகமாக வேகவைத்தாலும் நல்லா இருக்காது…ஆனா எதிர்பார்த்தைவிட அருமையாக வந்து இருந்தது…இதோ என்னுடைய Turkey….Star of Thanksgiving Lunch….


Turkey Stuffing with Green Peas


Cheesy Spinach


Mashed Potatoes with Gravy


Green Peas sauté


Healthy Greens Salad with Pomegranate, Homemade Buttered Croutons


Pinto Beans with Riceமற்றும், Tomato & Bell Pepper Soup , Baked Mac and Cheese, Fruit Salad and Apple Cider ….

As usual finally, my favorite Pumpkin Pie…


காளிப்ளவர் ஒட்ஸ் கட்லட் - Cauliflower Oats Cutlets


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
காளிப்ளவர் – 1
ஒட்ஸ் – 1 கப்
எண்ணெய் சிறிதளவு
தக்காளி சாஸ் – 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         சீரகதூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

செய்முறை :
·         காளிப்ளவரினை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும். ஒட்ஸினை கொரகொரப்பாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

·         கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்துள்ள காளிப்ளவர் + தக்காளி சாஸ் + தூள் வகைகள் சேர்த்து 5 – 6 நிமிடங்கள் வதக்கவும்.

·         சிறிது நேரம் ஆறவைத்த பிறகு, இத்துடன் ஒட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

·         அவனை 400Fயில் மூற்சூடு செய்யவும். விரும்பிய வடிவத்தில் கட்லட்டுகள் செய்து அவனில் வைக்கும் ட்ரெயில் வைத்து சிறிது எண்ணெய் அதன் மீது ஸ்பேரே செய்யவும்.

·         ஒரு பக்கம் நன்றாக க்ரிஸ்பியாக வந்தவுடன், கட்லடுகளை திருப்பி போட்டு மேலும் சில நிமிடங்கள் வேகவிடவும்.

·         சுவையான சத்தான மாலை நேர ஸ்நாக் ரெடி.

கவனிக்க:
காளிப்ளவரினை விரும்பினால் பொடியாக நறுக்குவதற்கு பதிலாக  துறுவி கொள்ளவும்.

ஒட்ஸினை தவிர்த்து இத்துடன் உருளை கிழங்கு சேர்த்து செய்யலாம். தக்காளி சாஸிற்கு பதிலாக வேறு சாஸ் சேர்த்து கொள்ளலாம்.

அவனில் செய்யாமல் இதே மாதிரி தோசை கல்லிலும் செய்து சாப்பிடலாம்

வெள்ளை பட்டாணி தோசை & கத்திரிக்காய் டிபன் சாம்பார் - Peas Dosai & Brinjal Tiffin Sambar


வெள்ளை பட்டாணியில் வெரும் பீச் சுண்டல் அல்லது குருமா மட்டும் தான் செய்து சாப்பிடுவோம்…இப்படி வித்தியசமாக தோசை செய்து பாருங்கள்…மிகவும் அருமையாக இருக்கும்…

வெள்ளை பட்டாணியில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது…இதில் சக்கரையின் அளவு மிகவும் குறைவு….அதனால் சக்கரையின் அளவினை கட்டுப்படுத்துகின்றது….

இந்த பட்டாணியில் Cholesterolயினை குறைக்க உதவும் நார்சத்து(Soluble Fiber)  காணப்படுக்கின்றது…அதனால் Cholesterol அதிக  உள்ளவர்கள் இதனை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது…

அத்துடன் இதில் கல்சியம், இரும்பு சத்து, விட்டமின்ஸ் B-Complex அதிகம் இருக்கின்றது…மற்றும் மினரல்ஸ் Magnesium, Zinc, Copper, Maganese, Potassium அதிக அளவில் காணப்படுக்கின்றது….

இதில் அதிக அளவு Protein இருக்கின்றது….அனைவருக்கும் மிகவும் நல்லது…

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 4 – 5 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெள்ளை பட்டாணி – 1 கப்
·         பிரவுன் ரைஸ் / இட்லி அரிசி – 1/4 கப்
·         உப்பு தேவையான அளவு

செய்முறை :
·         வெள்ளை பட்டாணி + அரிசியினை தனி தனியாக குறைந்தது 4 – 5 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.


·         இந்த மாவுடன் உப்பு சேர்த்து கலந்து, உடனே தோசைகளாக சுடவும். சுவையான சத்தான தோசை ரெடி.

கவனிக்க : இந்த மாவினை புளிக்க வைக்க தேவையில்லை…அப்படியே தோசை சூடலாம்.

கத்திரிக்காய் டிபன் சாம்பார்

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கத்திரிக்காய் – 1/4 கிலோ
·         துவரம் பருப்பு – 1 கப்
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய் – 4
·         புளி கரைசல் சிறிதளவு

கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு தாளிக்க
·         கருவேப்பில்லை – 4 – 5 இலை
·         பெருங்காயம் சிறிதளவு

செய்முறை :
·         கத்திரிக்காய் + வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கி வைக்கவும். துவரம்பருப்பினை கழுவி கொள்ளவும்.


·         குக்கரில் துவரம்பருப்பு + காய்கள் + மஞ்சள் தூள் + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 – 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.


·         குக்கரினை திறந்து வேகவைத்த பொருட்களை சிறிது மசித்து கொள்ளவும்.


·         இத்துடன் புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து இதில் சேர்க்கவும்.


 ·         சுவையான எளிதில் செய்யகூடிய கத்திரிக்காய் டிபன் சாம்பார் ரெடி. இதனை இட்லி, தோசை, சாப்பத்தி, சாதம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

பிறந்தநாள் கொண்டாட்டம்.....

இன்று என்னுடைய கணவருடைய பிறந்தநாள்…இந்த வருடம் கொண்டாட வேண்டும் என்று அக்ஷ்தா ஆசைப்பட்டாள்…


ஒரு வாரமாக இதே பேச்சு தான் அவளிடம்…யார் வந்தாலும் சரி…அல்லது போன் பேசினாலும் சரி… எங்க டாடிக்கு பர்த்தேடே என்று சொல்லி…நான் இதனை செய்ய போறேன்…என்று எல்லாம் விளக்கமும் கொடுக்க ஆரம்பித்துவிடுவாள்…இதனால எல்லோருக்கும் இவருடைய பிறந்தநாள் இன்று என்று தெரிந்து…எப்பொழுதும் இல்லாமல் இந்த வருடம் நிறைய பேர் வாழ்த்து தெரிவித்தாங்க…எல்லா அக்ஷ்தா குட்டியால் தான்…

அவளே கேக் இப்படி தான் இருக்க வேண்டும் என்று முன்னமே தெரிவித்துவிட்டாள்…Yellow கலர் கேக் with lots of cream இருக்க வேண்டும் என்று சொன்னால்…சக்லேட் கேக் வேண்டாம் என்றும் சொன்னாள்…..அதே மாதிரி Round cake  வேண்டாம் என்று எல்லாம் கண்டிஷன் போட்டாள்….அப்பறம் என்ன….அவளுடைய ஆசையிற்கு ஏற்றாற் போலவே நானும் அவளும் சென்ற கேக்கினை ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தோம்…


அப்பறம், நேற்று மதியம் வீட்டினை Decorate செய்ய வேண்டும் என்று சொன்னாள்…..அதுவும் அவளுடைய ரூமில் தான் செய்ய வேண்டும் என்று அவ கூற, சரி என்று சொல்லி அவளுடைய Craft Boxயில் இருந்த சில பொருட்களை வைத்து நானும் அவளும் ரூமை அவளுடைய விருப்பத்திற்கு ஏற்றாற் போல Decorate செய்தோம்…எதோ எங்களால் முடிந்தது…பிடித்து இருக்கா…


 Party Hat, Pinata, Blowers, Bubbles என்று எல்லாம் வாங்க வேண்டும் என்று சொல்லவே, முன்னமே வாங்கிவைத்தாச்சு.( Party Hatயினை போடவே கடைசியில் மறந்து போயச்சு….).… யார் பேசினாலும் அவருடைய பிறந்தநாள் பற்றியே பேசிகொண்டு இருப்பாள்…அவளுக்கு Disney யிற்கு போய் வந்தது இருந்து, பிறந்தநாளை இப்படி தான் கொண்டாட வேண்டும் என்று ஒரு எண்ணம்…சரி…குழந்தையின் ஆசையால் கொண்டாடிவிடுவோம் என்று பிறந்தநாளை கொண்டாடினோம்..…

கேக்கினை அக்ஷ்தாவும் , டாடியும் சேர்த்து வெட்டினாங்க…அவளுக்கு மிகவும் சந்தோசம்…கேக்கும் சூப்பர்ப்…எங்களுடைய Neighboursயிற்கு எல்லாம் கேக் கொடுத்தோம்…


அப்பறம், நானும் அவளும் சேர்த்து Blowers, Bubbles எல்லாம் ஊதினோம்… எல்லொருக்கும் இவருடைய பிறந்தநாள் இன்று என்று தெரிந்ததால், எங்களுடைய Neighbours எல்லாரும் இவருக்கு Flowers, Cake, Donuts என்று  gifts கொடுத்தாங்க… கூடவே அக்ஷ்தாகுட்டிக்கும் தான்…அவளுக்கு ஒரு Remote Car கொடுத்தாங்க….


கடைசியாக TinkerBell Pinataவில் நிறைய சக்லேட், அவளுக்காங்க நாங்க வாங்கி வைத்து இருந்த Toy Story பொம்மைகள் எல்லாம் பினாட்டாவின் உள்ளே போட்டு வைத்துவிட்டோம்…

அக்ஷ்தா சின்ன பொன்னு என்பதால், கயறினை இழுத்தால் சக்லேட் விழுவது போல் இருப்பதினை தேர்ந்து எடுத்தோம்..ஆனால் அவளே அதனை குச்சி வைத்து அடிப்பது தான் வேண்டும் என்று சொல்லவே…சரி…அவ ஆசைக்கு அதனை குச்சியினை வைத்து சிறிது நேரம் அடித்தாள்…அப்புறம் கயறினை பிடித்து இழுத்துவிட்டாள்…அதனுள் சக்லேட், பொம்மைகள் எல்லாம் பார்த்தில் மிகவும் மகிழ்ச்சி…What a great Day  என்று சொன்னாள்…அவளுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் தான்…குழந்தை நமக்காக பார்த்து பார்த்து செய்வதில் எவ்வளவு சந்தோசம்…அதற்கு ஈடு இணையே கிடையாது….

சோயா உருண்டை புட்டு - Meal Maker - Soya chunks Puttu


சோயா உருண்டைகள் ( Meal maker) ஒரு வெஜிடேரியன் உணவு…. இதில் அதிக அளவு புரோட்டின் இருக்கின்றது…முட்டை, பால், சிக்கனை விட இதில் அதிக அளவு புரோட்டின் காணப்படுக்கின்றது.

டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு..இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால், எடை குறைய உதவுக்கின்றது.

அதே போல சக்கரையின் அளவு, BP போன்றவையினை குறைக்க உதவுக்கின்றது.

சோயாவில் அதிக அளவு நார்சத்து காணப்படுக்கின்றது…இதில் சக்கரை இல்லை…இதில் Iron, Phosphorous, Copper, Magenese போன்ற மினரல்ஸ் காணப்படுக்கின்றது…

சோயா உருண்டைகள் அல்லது உதிர்த்த சோயா , TVP (Textured Veg. Protein) போன்றவை கிடைக்கின்றது… அனைவரும் சாப்பிட கூடிய சத்தான உணவு…கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்வது நல்லது….


சமைக்க தேவைப்படும் நேரம் : 25 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         சோயா உருண்டைகள் – 1 Packet
·         வெங்காயம் – 2
·         பூண்டு – 10 – 15 பல்
·         பச்சைமிளகாய் – 4 -5
·         இஞ்சி – சிறிய துண்டு
·         கருவேப்பில்லை – 5 இலை
·         கொத்தமல்லி - சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 2 தே.கரண்டி
·         கடுகு , சீரகம் – தாளிக்க

செய்முறை :
·         சோயா உருண்டைகளை தண்ணீரில் போட்டு வேகவைத்து கொண்டு அதனை மிக்ஸியில் போட்டு உதிர்த்து கொள்ளவும். (அல்லது) உதிர்த்த காய்ந்த சோயாவினை வாங்கி அதனை தண்ணீரில் வேகவைத்து கொள்ளவும்.


·         வெங்காயம் + பூண்டு + பச்சைமிளகாய் + இஞ்சி + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி வைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + சீரகம் தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.


·         வெங்காயம் வதங்கியவுடன் சோயா + தூள் வகைகள் சேர்த்து கிளறி சிறிது நேரம் நன்றாக வதக்கவும்.
·         கடைசியில் கொத்தமல்லி தூவ்வும். சுவையான சத்தான சோயா புட்டு ரெடி. இதனை சாதம், குழம்பு, சாப்பத்தி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


Related Posts Plugin for WordPress, Blogger...