தேங்காய் பால் ஜாமூன் - Coconut Milk Jamunஎப்பொழுதும் குலாப் ஜாமூனை சக்கரைபாகில் ஊறவைத்து சாப்பிடுவது போர் அடித்துவிட்டது….தேங்காய்பால் எடுத்து அதில் பொரித்த ஜாமூன்களை போட்டு ஊறவைத்தேன்…மிகவும் அருமையாக இருக்கின்றது…நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         குலாப் ஜாமூன் மிக்ஸ்(Gulab Jamum Mix) – 1 சிறியது
·         எண்ணெய் – பொரிக்க

தேங்காய் பால் செய்ய :
·         தேங்காய் -1 முடி
·         பால் – 1 கப்
·         சக்கரை – 1 கப்
·         ஏலக்காய் – 3

செய்முறை :
·         குலாப் ஜாமூன் மிக்ஸில் தேவையான அளவு பால்/தண்ணீர் சேர்த்து பிசைந்து கொண்டு விரும்பிய வடிவத்தில் உருட்டி கொள்ளவும்.

·         உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.


·         பாலினை சூடாக காய்ச்சி கொள்ளவும். சக்கரை + ஏலக்காயினை பொடித்து கொள்ளவும்.

·         தேங்காயினை சிறிய துண்டுகளாக வெட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு பால் எடுக்கவும். சுமார் 3 – 4 கப் பால் வருமாறு எடுத்து கொள்ளவும்.

·         தேங்காய் பால் + காய்ச்சிய பால் + சக்கரையினை சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         பொரித்த உருண்டைகளாக தேங்காய் பாலில் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.  சுவையான எளிதில் செய்ய கூடிய தேங்காய்ப்பால் ஜாமூன் ரெடி.

கவனிக்க :
டின் தேங்காய் பால் உபயோகித்தால் மைக்ரேவேவில் 2 – 3 நிமிடங்கள் வைத்து சூடு படுத்து கொள்ளவும்.

ஜாமூன்களை ஊற தேவையான அளவு தேங்காய்பால் வைத்து கொள்ளவும்.

31 comments:

savitha ramesh said...

Creativity begins here geetha.....Spectacular recipe...

Krishnaveni said...

wow, my fav gulab jamun looks very nice in coconut milk, yumm

S.Menaga said...

சூப்பர்ர் ஐடியா!! ரொம்ப நல்லாயிருக்கு...

Premalatha Aravindhan said...

yummy,yum...Delicious!!!

Porkodi (பொற்கொடி) said...

omg!!! ivlo creativity oru jamunla?! :O apdiye andha jamun kooda wihite colorlaye irukka madhri edavadhu idea panni irukalame.. ;-)

Pushpa said...

Looks super delicious.

எல் கே said...

வித்யாசமா இருக்கே

ஸாதிகா said...

வித்தியாசமான முயற்சி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையா இருக்குங்க.

GEETHA ACHAL said...

ரொம்ப நன்றி சவிதா..

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி மேனகா..

நன்றி ப்ரேமா..

GEETHA ACHAL said...

நன்றி பொற்கொடி...ஜாமூன் கூட வெள்ளை கலரில் இருக்குமாறு அடுத்த தடவை செய்துவிட்டால் போச்சு...நன்றி....

நன்றி புஷ்பா..

நன்றி கார்திக்..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி புவனா..

சே.குமார் said...

வித்தியாசமான முயற்சி... போட்டோஸ் பாக்கும் போது பசியை அதிகமாக்கி கொள்கிறது வயிறு.

asiya omar said...

வித்தியாசமாக இருக்கு கீதா.தேங்காய்ப்பால என்பதால் செய்த அன்றே காலி செய்ய வெண்டும் இல்லையா?

Kurinji said...

really gr8 idea Geetha n thanks for sharing...

Kurinji Kathambam

Event : Healthy Recipe Hunt - 1 (Aval/Poha/Riceflakes)

Kurinji Kudil az

Priya said...

WOw ithu romba puthusa irruku, thanks for sharing Geetha..

COmpletely different from the usual jamuns..

Sangeetha Nambi said...

1st time seen a recipe blog in tamil. Thanks. Keep posting.

Do visit this new comer in
http://recipe-excavator.blogspot.com

சாருஸ்ரீராஜ் said...

puthu muyarchi looks great

Jaleela Kamal said...

mika arumai

ஆயிஷா said...

அருமையா இருக்கு

Reva said...

superb ...looks fabulous and tasty...
Reva

தெய்வசுகந்தி said...

வாவ்! தேங்காய்ப்பால்ல ஜாமூனா? வித்தியாசமா இருக்கு கீதா!

Chitra said...

Thats a great idea.... Thank you!

GEETHA ACHAL said...

நன்றி குமார்...

நன்றி ஆசியா அக்கா...தேங்காய்பால் எடுத்து செய்கிறோம் என்றால் அன்றே காலி செய்துவிடுவது நல்லது...

அதுவே டின் தேங்காய்பால் என்றால் ப்ரிஜில் வைத்து மறுநாள் சாப்பிடலாம்....

GEETHA ACHAL said...

நன்றி குறிஞ்சி..

நன்றி ப்ரியா..

நன்றி சங்கீதா...

நன்றி சாரு அக்கா..

நன்றி ஜலிலா அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி ஆயிஷா..

நன்றி ரேவா

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி சித்ரா...

கோவை2தில்லி said...

இனிப்பு பிரியையான எனக்கு இந்த தேங்காய்ப் பால் ஜாமூன் பார்க்கும் போதே ஆசையை தூண்டுகிறது. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

vanathy said...

பார்க்கவே நல்லா இருக்கு. எவ்வளவு கலோரின்னு பக்கத்தில் ஒரு தகவல் போடுங்க, கீதா.

Scribblingzzz.. said...

Looks yummy...

GEETHA ACHAL said...

நன்றி ஆதி....கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி வானது...எவ்வளவு கலோரி என்பதினை பற்றி கூடிய சீக்கிரத்தில் பின் வரும் குறிப்புகளுக்கு கண்டிப்பாக எழுத வேண்டும்...நன்றி...

நன்றி scribbling...

அன்னு said...

கீதாக்கா எப்படி இருக்கீங்க? நான் பரவால்லே. :)

எனக்கு பாகுல போடறதுக்கு முன்னாடி அந்த பொரிச்ச குலாப் ஜாமூந்தேன் ரெம்ப பிடிக்கும். அனுப்பி வைங்க :))

apsara-illam said...

வாவ்... யம்மி யம்மியாக இருக்கு கீதா.... வித்தியாசமான முயற்ச்சிதான்...
வாழ்த்துக்கள்...

அன்புடன்,
அப்சரா.

Related Posts Plugin for WordPress, Blogger...