சுட்ட கத்திரிக்காய் சட்னி - Smoked Brinjal Chutney - Side Dish for Idly and Dosa


எப்பொழுதும் கத்திரிக்காயினை அவனில் வைத்து சுட்டு சமைத்து இருக்கின்றேன்…அப்படி கத்திரிக்காயினை அவனில் செய்ய சுமார் 30 – 40 நிமிடங்கள் ஆகும்…Tasteயும் வேற மாதிரி இருக்கும்….

திருமதி. ராஜி, கத்திரிக்காய் சட்னி பற்றி போட்டு இருந்தாங்க…அடுப்பில் directஆக சுட்டு செய்து இருந்தாங்க…. இப்படி directஆக கத்திரிக்காயினை அடுப்பில் சுட்டுவதால் இதன் சுவை மிகவும் அருமை…இட்லி , தோசை மற்றும் சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

இந்த வாரம் இங்கு பயங்கர குளிர்…சுமார் -20 F வரை சென்றது….. எங்க காருக்குள் எடுத்த போட்டோ... அப்பொழுது Outside temperature – 12F இருந்தது….

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கத்திரிக்காய் – 1 பெரியது
·         புளி – நெல்லிக்காய் அளவு
·         உப்பு – தேவையான அளவு

வறுத்து கொள்ள வேண்டிய பொருட்கள் :
·         காய்ந்த மிளகாய் – 6
·         உளுத்தம்பருப்பு – 2 மேஜை கரண்டி
·         தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·         பெருங்காயம் – சிறிய துண்டு
·         கடுகு – 1 தே.கரண்டி

கடைசியில் தாளிக்க :
·         நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, கருவேப்பில்லை – தாளிக்க

செய்முறை :
·         கத்திரிக்காயினை இரண்டாக வெட்டி கொண்டு அதில் க்ரில் செய்ய உதவும் குச்சிகளினை அல்லது Fork கொண்டு சொருக்கி நெருப்பில் காட்டவும்.

·         ஒவ்வொரு பக்கமும் அடிக்கடி திருப்பி விடவும். அப்பொழுது தான் அனைத்து பக்கமும் நன்றாக வெந்து இருக்கும்.

·         நன்றாக வெந்துவிட்டால் , கத்திரிக்காயினை தொடும் பொழுதே தோல் தனியாக வரும். அப்பொழுது கத்திரிக்காயினை சிறிது நேரம் ஆறவிடவும்.

·         வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுத்து கொள்ளவும்(எண்ணெய் தேவையில்லை). கத்திரிக்காயில் இருந்து தோலினை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

·         மிக்ஸியில் வறுத்த பொருட்களினை முதலில் போட்டு பொடித்து கொள்ளவும். பின்னர் கத்திரிக்காயினை போட்டு அரைத்து கொள்ளவும்.

·         கடைசியில் கடுகு + கருவேப்பில்லை போட்டு தாளித்து இதில் சேர்க்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க:
இந்த மாதிரி சுட்ட செய்யும் சட்னிற்கு , பெரிய கத்திரிக்காய் , நீட்டு கத்திரிக்காய் போன்றவை தான் நல்லா இருக்கும்.  குட்டி கத்திரிக்காயில் செய்தால் நிறைய வேலை எடுக்கும்.

அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல சேர்த்து கொள்ளவும். காரம் குறைவாக இருந்தால் இரண்டு காய்ந்தமிளகாய் + 1 தே.கரண்டி உளுத்தம்பருப்பினை வறுத்து தனியாக மிக்ஸியில் நன்றாக பொடித்து சட்னியுடன் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

அதே மாதிரி இந்த சட்னியில் காரம் அதிகமாக இருந்தால், கூடுதலாக நல்லெண்ணெய் சேர்த்து கொண்டால் காரம் இருக்காது.

சுட்ட கத்திரிக்காயில் இருந்து தோலினை நீக்குவது சிரமமாக இருந்தால், கத்தியோ அல்லது forkயோ வைத்து தோலினை இழுத்தால் எளிதில் தோல் வந்துவிடும்.


கத்திரிக்காயில் அதிகம் விதை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். 

20 comments:

Chitra said...

பார்க்கவே சூப்பரா இருக்குதுப்பா...

Priya said...

Slurp, such a tempting chutney,rendu idli irruntha naan ippave fulla mudichiduven..

S.Menaga said...

செம சூப்பரா இருக்கு...

Pavithra said...

Yenakkum ithu piditha chutney.. supera irukku geetha.

RAKS KITCHEN said...

My FIL's favorite version,still I have to try with this urad dal combination.
-12 ? Yenakku 18 deg Celsius kooda thaanga mudiyadhu!

Devasena Hariharan said...

we used to make some kosthu out of brinjal. this looks interesting..

ஸாதிகா said...

உடனே செய்து பார்த்து விடுகிறேன்.கீதாஆச்சல்.

Mahi said...

கீதா,உங்க வீட்டுல கேஸ் ஸ்டவ்-ஆ? எனக்கு கேஸ் ஸ்டவ் மறந்தே போச்! :-| தீயில் சுட்டாலே தனி ருசிதான்!

சசிகுமார் said...

அருமை

Kanchana Radhakrishnan said...

சூப்பரா இருக்கு.

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா..

நன்றி ப்ரியா...

நன்றி மேனகா..

நன்றி பவித்ரா..

நன்றி ராஜி...ஆமாம் இங்கே பயங்கர குளிர்..அது கூடவே Snow வேறு..

GEETHA ACHAL said...

நன்றொ தேவசேனா..

நன்றி ஸாதிகா அக்கா..கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி மகி...எனக்கு இங்கு Gas stove கிடையாது...எல்லாம் Electric stove தான்...கத்திரிக்காய் சூடும் படத்தில் பாருங்க...எல்லாம் கரண்ட் ஸ்டவில் தான் செய்தேன்...அருமையாக இருந்தது...க்ரில் செய்த டேஸ்ட் கிடைத்தது...

GEETHA ACHAL said...

நன்றி சசி...

நன்றி கஞ்சனா...

தெய்வசுகந்தி said...

சூப்பர் சட்னி கீதா!!

mahavijay said...

கடுகும் சேர்த்து அரைக்க வேண்டுமா?

vanathy said...

looking yummy!

ஹுஸைனம்மா said...

சுட்ட கத்தரிக்காய்த் துவையல் முன்பு ஒருமுறை அறுசுவையில் செய்ததுண்டு. அருமையான சுவை!! இதையும் செய்கிறேன்.

asiya omar said...

ARUMAI GEETHA ACHAL.

GEETHA ACHAL said...

நன்றி தெய்வசுகந்தி..

// mahavijay said...
கடுகும் சேர்த்து அரைக்க வேண்டுமா?//நன்றி மகா...ஆமாம் கடுகும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

நன்றி ஹுஸைனம்மா...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி ஆசியா அக்கா...

sathiya seelan said...

haaa............ super chattni kkaa

Related Posts Plugin for WordPress, Blogger...