சரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி - அவன் செய்முறை - Saravana Bhavan Hotel Kaima Idly - Using Oven - Restaurant Style Cookingஇந்த கைமா இட்லி மிகவும் அருமையாக இருக்கும்..மீதம் இருக்கும் இட்லியில் எளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக்….குழந்தைக்கு மிகவும் பிடிக்கும்…

இதற்கு இட்லியினை எண்ணெயில் தான் பொரித்து எடுத்து செய்வாங்க…நான் எப்பொழுதுமே இதனை அவனில் வைத்து சமைப்பேன்…எண்ணெயினை அதிகம் பயன்படுத்தாமல் செய்வதால் உடலிற்கு மிகவும் நல்லது.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்….

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         இட்லி – 6
·         தக்காளி சாஸ் ( Tomato Sauce) – 3 மேஜை கரண்டி
·         லெமன் ஜுஸ் – 1 மேஜை கரண்டி
·         கடுகு - தாளிக்க
·         எண்ணெய் - சிறிதளவு

பொடியாக நறுக்கி கொள்ள :
·         வெங்காயம் – 1
·         பூண்டு – 6 பல்
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பச்சைமிளகாய் - 1
·         வெங்காயதாள் - 1
·         கொத்தமல்லி – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         கரம்மசாலா தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         பொடியாக நறுக்க கொடுத்துள்ள பொருட்களை நறுக்கி தனியாக வைக்கவும்.

·         இட்லியினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறி அவனில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும்.

·         முற்சூடு செய்யப்பட்ட அவனில் 400 Fயில் Broil Modeயில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.

·         இப்பொழுது இட்லி நன்றாக ப்ரை ஆகியது மாதிரி இருக்கும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்த பூண்டினை போட்டு வதக்கவும். பூண்டு வதங்கியதும் வெங்காயம் + கருவேப்பில்லை + பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

·         இத்துடன் தக்காளி சாஸ் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக 5 - 6 நிமிடங்கள் வதக்கவும்.

·         எல்லாம் நன்றாக வதங்கியவுடன், இட்லி துண்டுகளினை சேர்த்து கிளறவும்.

·         கடைசியில் வெங்காயதாள் + எலுமிச்சை சாறு + கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய கைமா இட்லி ரெடி. இதனை தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
தக்காளி சாஸுற்கு பதிலாக 1 தக்காளியினை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். (கவனிக்க: தக்காளி சாஸும் Ketchupயும் ஒன்று கிடையாது….)

தக்காளி சாஸ் சேர்ப்பதால் நல்ல கலர் வரும். இதற்கு பதில் தக்காளியினை சேர்த்தால் சிறிது கேசரி கலர் சேர்த்து கொண்டால் நன்றாக இருக்கும்.

அவனில் செய்ய முடியவில்லை என்றால், நான் – ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி இட்லியினை வறுத்து கொள்ளலாம்…

இட்லியினை கண்டிப்பாக எண்ணெயில் பொரிக்க கூடாது…இட்லி ஸ்பாஞ் மாதிரி எண்ணெயினை இழுத்து கொள்ளும்…

இதில் காரட், குடைமிளகாய் போன்ற காய்களையும் சேர்த்து கொள்ளலாம்.

35 comments:

savitha ramesh said...

miga arumai....super ..will try soon

எல் கே said...

nandri

ஸாதிகா said...

வாவ்..என்ன அருமையாக இருக்கு.

Aruna Manikandan said...

looks very tempting and delicious dear.....

ஹுஸைனம்மா said...

கீதா, எனக்கும் இந்த கைமா இட்லி பிடிக்கும் என்றாலும், எண்ணை என்பதால் சாப்ப்டுவதுமில்லை; செய்வதுமில்லை. பொரிக்காமல் செய்யும் வழி சொல்லியிருப்பது அருமை.

ஹுஸைனம்மா said...

கீதா, எனக்கும் இந்த கைமா இட்லி பிடிக்கும் என்றாலும், எண்ணை என்பதால் சாப்ப்டுவதுமில்லை; செய்வதுமில்லை. பொரிக்காமல் செய்யும் வழி சொல்லியிருப்பது அருமை.

athira said...

வித்தியாசமான குறிப்பு.

Jaleela Kamal said...

நல்ல இருக்கு , நேற்று தான் சரவன பவா போய் வந்தேன் கைமா இட்லி செய்து பார்க்க இன்று அரிசி ஊற போட்டு இருக்கேன்.
இங்கு நீங்க போட்டு இருக்கீங்க.

அவனில் பொரிப்பதால் எண்ணை அதிகம் இழுக்காது.

Kalpana Sareesh said...

wow super dish...

Shama Nagarajan said...

delicious idli dear

apsara-illam said...

இதுவரை நான் சரவண பவனில் சாப்பிட்டது கிடையாதே.... இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டேனோ....
அதனால் என்ன இனி சாப்பிட்டு பார்த்துட வேண்டியதுதான்..மஹிதான் குறிப்பை கொடுத்துட்டீங்கல்ல...
நல்ல குறிப்பை தெரியபடுத்தியமைக்கு நன்றி.
வாழ்த்துக்களும் மஹி...

அன்புடன்,
அப்சரா.

asiya omar said...

அருமையாக இருக்கு,கீதா ஆச்சல்,டயட் குறிப்பு கொடுங்கன்னு யாராவது கேட்டால் உங்க ப்ளாக்கை தான் காட்டுகிறேன்.

S.Menaga said...

பார்க்கவே செய்து சாப்பிடனும்போல் இருக்கு...

Geetha6 said...

attractive colourful!

Priya said...

Marvellous and delicious kaima idly..superaa irruku geetha..

Kanchana Radhakrishnan said...

அருமையாக இருக்கு.

Kurinji said...

Superrrrrrrrrr....Mouthwatering here Geetha...

kurinjikathambam

Mahi said...

கைமா இட்லி-ன்னதும் நான்வெஜ்-ஆ இருக்குமோன்னு நினைச்சேன்.:)

சூப்பரா இருக்கு கீதா..சீக்கிர செய்து பார்க்கிறென்.

Sangeetha Nambi said...

Semmaiya iruku ponga :)

சாருஸ்ரீராஜ் said...

supera irukku geetha.

அன்னு said...

aana kaimaave kaanam??

hi hi hi... verum perla mattumthan kaimaavaa??

Priya's Feast said...

wow..healthy idli samayal ,geetha....I make similar one without oven...

vanathy said...

நல்லா இருக்கு. படங்கள் அழகா இருக்கு.

GEETHA ACHAL said...

நன்றி சவிதா..

நன்றி கார்திக்...

நன்றி ஸாதிகா..

நன்றி அருணா...

நன்றி ஹுஸைனம்மா...கண்டிப்பாக செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

நன்றி அதிரா..

நன்றி ஜலிலா அக்கா...

நன்றி கல்பனா..

நன்றி ஷாமா...

GEETHA ACHAL said...

நன்றி அப்சரா...

நன்றி ஆசியா அக்கா..

நன்றி மேனகா..

நன்றி கீதா..

நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

நன்றி கஞ்சனா..

நன்றி குறிஞ்சி...

நன்றி மகி..

நன்றி சங்கீதா..

நன்றி சாரு அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி அன்னு...

நன்றி ப்ரியா..

நன்றி வானதி...

தெய்வசுகந்தி said...

super geetha!! Looks yummy.

Mahi said...

போன வாரத்தில் ஒருநாள் செய்தேன்,சூப்பரா இருந்தது கீதா!Maggi hot & sweet சாஸ் சேர்த்து செய்தேன்.:)

ரெசிப்பிக்கு நன்றி!

GEETHA ACHAL said...

நன்றி மகி...செய்து பார்த்துவிட்டு பின்னுட்டம் அளித்தில் மிகவும் மகிழ்ச்சி மகி...

vanathi sureshkumar said...

kaima idly...super.i will try soon..

Overseas Air Travel and Tour Operators said...

VERY SUPER.............. VERY USEFUL THIS WEBSITE. THANK YOU SO MUCH

raja lakshmi said...

soooooo gd dish..........

Gayathri Sathyanarayanan said...

super recipe. surely will try.

Related Posts Plugin for WordPress, Blogger...