பார்லி சப்பாத்தி - Barley Chapathiஎளிதில் செய்ய கூடிய சத்தான பார்லி சப்பாத்தி…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  • பார்லி மாவு – 1 கப்
  • கோதுமை மாவு – 2 கப்
  • உப்பு – சிறிதளவு

 செய்முறை :
         பார்லி மாவு + கோதுமை மாவு + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு சூடான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.


·         இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·         பிறகு சப்பத்தியினை உருட்டி கொள்ளவும்.


·         கல்லினை காயவைத்து சப்பாத்திகளை சுடவும்.


·         சுவையான சத்தான பார்லி சப்பாத்தி ரெடி.

குறிப்பு :
பார்லி சப்பாத்தி மிகவும் softஆக இருக்கும். விரும்பினால மாவு பிசைந்த பிறகு  மணி நேரம் ஊறவைத்த பிறகு சப்பாத்திகள் செய்யலாம்.

கோதுமை மாவு அரைக்கும் பொழுது பார்லியினை சேர்த்து அரைத்து வைத்து கொண்டால் ரொம்ப usefulஆக இருக்கும்.

இங்கு பார்லி மாவு என்று தனியாக இந்தியன் கடைகளில் கிடைக்கும்.

இந்த சப்பாத்தியினை சூடாக சாப்பிடும் பொழுது மிகவும் நன்றாக இருக்கும். 2 – 3 மணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும் என்றால், இதனை சுட்டவுடன் பாத்திரத்தில் போட்டு தட்டு போட்டு முடிவிட்டால் Softஆக இருக்கும்.

24 comments:

S.Menaga said...

சத்தான சூப்பர்ர் சப்பாத்தி!!

Krithi's Kitchen said...

Sooper saththaana chapathi...

http://krithiskitchen.blogspot.com
Herbs & Flowers in my Platter - Coriander/Cilantro

RAKS KITCHEN said...

Barley chappathi sounds really good and looks so soft too!

சாருஸ்ரீராஜ் said...

சாப்பிடும் ஆவலை தூண்டுகிறது.

Chitra said...

பார்லி மாவு என்று ஒன்று இருப்பதெல்லாம், உங்கள் பதிவுகள் ரெகுலர் ஆக வாசிப்பதால் தெரிந்து கொள்கிறேன். Thank you for sharing healthy recipes. :-)

Lakshmi said...

பார்லி மாவு சேர்த்து செய்து பாத்ததில்லை. உங்க குறிப்புப்படி செய்து பார்க்கிரேன்.

San said...

Healthy and super soft barley rotis dear.Thanks for the recipe .

http://sanscurryhouse.blogspot.com

savitha ramesh said...

barley rotis looks delicious.Romba healthy too.

தெய்வசுகந்தி said...

நல்ல சப்பாத்தி!! அடுத்த முறை பார்லி மாவு வாங்கணும்!

Kalpana Sareesh said...

Super n healthy ones...

Pushpa said...

Yummy and healthy chapathi.

Priya said...

Chappathi looks super soft, definitely healthy..

Sukanya Ramkumar said...

This sounds to be a healthy one. Nice recipe... YUM!

I have whole pearl Barley, can i powder it and use them?

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி கீர்த்தி..

நன்றி ராஜி..

நன்றி சாரு அக்கா...

நன்றி சித்ரா..ஆமாம் சித்ரா இது இந்தியன் கடைகளில் கிடைக்கும்..

அப்படி இல்லை என்றால் Walmartயில் அல்லது வேறு கடைகளில் Bobs Red Mill Barley flour என்று இருக்கும்..அதனையும் ட்ரை செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

நன்றி சான்..

நன்றி சவிதா,,

நன்றி தெய்வசுகந்தி...

நன்ரி கல்பனா..

நன்றி புஷ்பா..

நன்ரி ப்ரியா..

நன்றி சுகன்யா...நான் பார்லியினை பொடித்தது கிடையாது...ஆனால் விரும்பினால் மிக்ஸியில் பொடித்து பாருங்க...நல்லா வரும் என்று தான் நினைக்கிறேன்...

எனக்கு மிக்ஸி ப்ளேட் ஏதாவது உடைந்துவிட போகுது என்பதால் அந்த பக்கமே போவது கிடையாது...

Aruna Manikandan said...

Healthy chapathi's dear :)

Premalatha Aravindhan said...

Healthy Chappathi geetha,very interesting recipe...

vanathy said...

looking yummy. Very healthy too!

மனோ சாமிநாதன் said...

அருமையான சப்பாத்தி கீதா! உருண்டைகளை உருட்டி வைத்திருக்கும் விதமே அழகாக இருக்கிறது. மைக்ரோவேவ் முறையில் சூடாக்கினால் நன்றாக இருக்காதா?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சத்தான, சுவையான ரெசிப்பி.. கண்டிப்பா செஞ்சு பாக்குறேன். :)

Kanchana Radhakrishnan said...

சப்பாத்தி சூப்பர்.

March 31, 2011 7:21 AM

asiya omar said...

பார்லி மாவு வாங்கி செய்து பார்க்கணும்.

GEETHA ACHAL said...

நன்றி அருணா..

நன்றி ப்ரேமா..

நன்றி வானதி,,

நன்றி மனோ ஆன்டி...மைக்ரேவேவ் முறையில் சூடாக்கினால் சிறிது தண்ணீர் தெளித்து சூடாகவும்..அப்பொழுது தான் நல்லா இருக்கும்...

GEETHA ACHAL said...

நன்றி ஆனந்தி...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி கஞ்சனா...

Related Posts Plugin for WordPress, Blogger...