சிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Biryaniஎப்பொழுதும் செய்யும் பிரியாணியில், வேகவைக்கும் பொழுது தண்ணீர்க்கும் பதிலாக சிக்கன் ஸ்டாக் சேர்த்து செய்து பாருங்க…பிரியாணியின் சுவை அதிகமாக இருக்கும்…

நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பாஸ்மதி அரிசி – 2 கப்
·         சிக்கன் ஸ்டாக் – 3 கப்
·         எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·         நெய் – 1 மேஜை கரண்டி
·         உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

அரிந்து கொள்ள :
·         வெங்காயம் – 2
·         தக்காளி – 2
·         பச்சைமிளகாய் – 2
·         புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

சிக்கனுடன் ஊறவைத்து கொள்ள :
·         சிக்கன் – 1/4 கிலோ
·         தயிர் – 1 கப்
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·         இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·         உப்பு – 1 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
·         பட்டை, கிராம்பு, ஏலக்காய்
·         சோம்பு தூள் – 1 தே.கரண்டி
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·         சிக்கனை சுத்தம் செய்து ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

·         அரிசியினை 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியினை நீளமாகவும், பச்சைமிளகாயினை இரண்டாக கீறிவைக்கவும். புதினா + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.


·         வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கவும்.


·         இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கன் சேர்த்து வேகவிடவும்.


·         5 நிமிடம் கழித்து புதினா + கொத்தமல்லி + பச்சைமிளகாய் சேர்த்து வேகவிடவும்.

·         பிறகு அரிசியினை சேர்த்து கிளறி 2  - 3 நிமிடங்கள் வேகவிடவும்.

·         மைக்ரேவேவில் வைக்கும் பாத்திரத்தில் இதனை கொட்டி அத்துடன் சிக்கன் ஸ்டாக் + உப்பு சேர்த்து கிளறவும்.

·         மைக்ரேவேவில் 15 நிமிடங்கள் தட்டு போட்டு மூடி வேகவிடவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய பிரியாணி ரெடி.

கவனிக்க:
இதில் சிக்கன் ஸ்டாக சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். சோடியம் குறைவான ஸ்டாக் பயன்படுத்தவும். நல்லது…

வெஜ் பிரியாணிக்கும் இதே மாதிரி சிக்கன் ஸ்டாகிற்கு பதிலாக வெஜ் ஸ்டாக் பயன்படுத்தினால் பிரியாணி நிமிடங்கள் காலியாகிவிடும்…

இதே மாதிரி தாளித்து பிரஸர்குக்கரில் செய்யலாம்…நான் எப்பொழுதுமே எல்லாமே கிளறி மைக்ரேவேவில் வைத்து சமைத்துவிடுவேன். விரும்பினால் இதனை மைக்ரேவேவிலும் செய்யலாம்…ஆனா எனக்கு அந்த பொருமை எல்லாம் கிடையாது…

23 comments:

Yuvana's Favourites said...

Yummy briyani in microwave. i have bookmarked this and will try this for sunday lunch.

athira said...

பார்க்கவே சூப்பராக இருக்கே.

ஹுஸைனம்மா said...

சிக்கன் ஸ்டாக் எப்படிச் செய்வீங்க?

S.Menaga said...

சிக்கன் ஸ்டாக் சேர்ப்பது நல்ல ஐடியா..இப்போதைக்கு படத்தை மட்டும் பார்த்து பெருமூச்சு விடுகிறேன்...

Priya said...

Arumaiya irruku briyani, super delicious!

Krithi's Kitchen said...

Chicken stock pottu seyradhu innum suvaiya kootum.. nalla idea...

http://krithiskitchen.blogspot.com
Herbs & Flowers in my Platter - Coriander/Cilantro

Pavithra said...

Looks super delicious.. Biriyani is super tempting...

asiya omar said...

உப்புமா,சேமியா,பாஸ்தா,ரைஸ் இன்னும் டிஃபன் வகை அனைத்திற்கும் சிக்கன் ஸ்டாக் சேர்த்து செய்திருக்கேன்,அளவாக சேர்த்தால் நல்ல ருசியாக இருக்கும்.
பார்க்கவே அருமையாக இருக்கு கீதா.

Pushpa said...

Delicious chicken biryani.

ஜெய்லானி said...

இங்கு அரபிகள் பிரியானியும் இதுப்போல ஸ்டாக் போட்டுதான் செய்வார்கள் .சூப்பர் டேஸ்டா இருக்கும் .

படத்தை பார்ததும் ஜொள்ள்ள்ள்ள் :-))

ஸாதிகா said...

சிக்கன் ஸ்டாக் போட்டு பிரியாணி.சூப்பர்தான் போங்கள்.

ஸாதிகா said...

சிக்கன் ஸ்டாக் போட்டு பிரியாணி.சூப்பர்தான் போங்கள்.

mahavijay said...

புதுசு புதுசுசா யோசிக்கீரிங்க கீதா.

apsara-illam said...

ஆஹா...,சிக்கன் ஸ்டாக் சேர்த்தால் கூடுதல் டேஸ்ட் கிடைக்கும்னு சொல்லியிருக்கீங்க.... இனி செய்து பார்த்திட வேண்டியதுதான்.
பிரியாணி பார்க்கவும் சூப்பராக இருக்கு கீதா..
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

Jay said...

Absolutely tempting recipe ...
Tasty appetite

Nithu said...

Biryani microwave la try pannadhe illa. Looks so yummy. Neenga tamil la blog ezhudhuradu romba nalla irukku.

Divya Kudua said...

Biryani looks delicious!!

GEETHA ACHAL said...

நன்றி யுவனா...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி அதிரா..

நன்றி ஹுஸைனம்மா...சிக்கன் ஸ்டாக் செய்ய சிக்கன் + வெங்காயம் + உப்பு + நிறைய தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.அந்த தண்ணீர் தான் சிக்கன் ஸ்டாக்....அதில் வெந்த சிக்கனை சாலடும் சாப்பிடலாம்..

ஆனால் நான் எப்பொழுதும் சிக்கன் ஸ்டாகினை கடையில் வாங்கி கொள்வேன்..

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி ப்ரியா..

நன்றி கீர்த்தி...

நன்றி பவித்ரா..

நன்றி ஆசியா அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி ஜெய்லானி..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி மகா..

நன்றி அப்சரா...

GEETHA ACHAL said...

நன்றி ஜெய்..

நன்றி நிது...

நன்றி திவ்யா...

Anonymous said...

nice recipe. you seem to cook a lot of variety !1
In the last lines , is it "virumbinaal idhanai conventional oven-la-um seyyalam " ? Typing error ?

Anonymous said...

Hello Madam,

chicken stock na enna

Related Posts Plugin for WordPress, Blogger...