சிவப்பு முள்ளங்கி பொரியல் - Red Radish Poriyalமுள்ளங்கியில் அதிக அளவு விட்டமின் சி மற்றும் நார்சத்துகள் இருக்கின்றது…அதிலும் முக்கியமாக ஃபோலிக் அசிட் அதிகமாக இருக்கின்றது… இது ஒரு Low Calorie Vegetable

முள்ளங்கியின் கீரையிலும் முள்ளங்கியினை விட ஆறு மடங்கு விட்டமின் சி மற்றும் சத்துகள் காணப்படுக்கின்றது…

முள்ளங்கியில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் அனைவரும் இதனை சாப்பிடுவது நல்லது…

100 கிராம் முள்ளாங்கியில் வெரும் 15 – 20 கலோரிஸ் தான் இருக்கின்றது…அதனால் உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியம்…


வெள்ளை முள்ளங்கியினை விட சிவப்பு முள்ளங்கி நல்லது…இதில் தோலினை நீக்க தேவையில்லை…அதே போல சிவப்பு முள்ளங்கியில் அதிக வாசமும் வராது…
சரி வாங்க…இந்த முள்ளங்கியினை வைத்து ஈஸியான பொரியல் சாப்பிடுவோம்..நன்றி மகி

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         முள்ளங்கி – 1/4 கிலோ
·         வெங்காயம் – 1 சிறியது
·         உப்பு – தேவையான அளவு
·         கொத்தமல்லி - சிறிதளவு

தாளித்து கொள்ள :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         காய்ந்த மிளகாய் – 2

செய்முறை :
·         முள்ளங்கியினை சுத்தம் செய்து பொடியாக அரிந்து கொள்ளவும். வெங்காயத்தினை வெட்டி வைக்கவும்.


·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பு + காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


·         வெங்காயம் வதங்கியவுடன், முள்ளங்கி + உப்பு சேர்த்து வேகவிடவும்.


·         கடைசியில் கொத்தம்ல்லி சேர்த்து கிளறவும். சுவையான சத்தான பொரியல் ரெடி.

கவனிக்க :
இந்த பொரியலில் கண்டிப்பாக் தண்ணீர் சேர்க்க வேண்டாம்…முள்ளங்கியில் இருந்தே தண்ணீர் வரும்..

விரும்பினால் இத்துடன் கடைசியில் தேங்காய் துறுவல் சேர்த்து கிளறலாம்…சுவையாக இருக்கும்…

28 comments:

Mahi said...

முள்ளங்கி பொரியல் சூப்பர் கலரா இருக்கு கீதா! தெரியாத தகவல்களை தந்ததுக்கு நன்றி!

சாருஸ்ரீராஜ் said...

nice poriyal nanum ippo adikadi seirathu undu.

Aruna Manikandan said...

not yet tried red radish so far...
looks healthy and delicious dear :)

ஸாதிகா said...

கடையில் கிடைத்தால் இதன் பக்கமே போகமாட்டேன்.இப்ப உங்கள் குறிப்பைப்பார்த்த்தும் வாங்கியாகவேண்டும் கீதா ஆச்சல்.

athira said...

இதுக்கும் பெயர் முள்ளங்கிதானோ? சூப்பராக இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

சிவப்பு முள்ளங்கி ஆர்வத்தைத்தூண்டுகிறது. விரைவில் செய்து பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றி.

Premalatha Aravindhan said...

Mullangi Poriyal is very healthy.This very simple and delicious poriyal...love the tempting color of the poriyal.

நட்புடன் ஜமால் said...

வெள்ளை முள்ளங்கி நிறைய சூட்டை கிளப்புமே வயிற்றில்,

இதில் அந்த தொந்தரவு இருக்காதோ ...

any how I like to eat radish ...

asiya omar said...

அழகு & அருமை..

Kalpana Sareesh said...

Very colorful n healthy !!

Krithi's Kitchen said...

Mullangi poriyal enaku pudhusu... Paaka romba nalla irukku...
http://krithiskitchen.blogspot.com

S.Menaga said...

பொரியல் சூப்பரா இருக்கு...

Pushpa said...

Delicious radish fry Geetha,a great side dish.

Priya's Feast said...

I have tried this cabbage...even made chutney in this...appadiye kothaga vangi vanthu seivom,mega rusiyaga erukum

vanathy said...

பார்க்கவே சூப்பரா இருக்கு. செய்து பார்க்க வேண்டும்.

Jay said...

love d healthy color Geetha...tempting recipe ..
Tasty appetite

apsara-illam said...

ஹாய் கீதா..,நல்ல சத்தான முள்ளங்கி பொறியலை பார்க்கவும் அழகாக கலர்ஃபுல்லா செய்து காட்டியிருக்கீங்க...
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

Priya said...

Simply delicious, very colourful poriyal..

USHA said...

Hi Geetha,

You got such a nice blog with lovely receipe, i have book marked your blog.

I likely mainly one thing in blog that is our native language, which make sus feel comfort.

Thanks for everything...

RAKS KITCHEN said...

Paarkave supera irukku! I have never tried this way,will sure try it out next time!

GEETHA ACHAL said...

நன்றி மகி..இது உங்க குறிப்பு தான்...

நன்றி சாரு அக்கா..

நன்றி அருணா...கண்டிப்பாக சிவப்பு முள்ளங்கியில் செய்து பாருங்க...நானும் எப்பொழுதும் வெள்ளை முள்ளங்கியில் தான் செய்வேன்...நான் மட்டும் தான் அதனை சாப்பிடுவேன்..இந்த முள்ளங்கியில் செய்த பொரியல் நிமிடத்தில் எல்லோரும் காலி செய்துவிட்ங்க...

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பாருங்க ஸாதிகா அக்கா...மிகவும் நன்றாக இருக்கும்..

நன்றி அதிரா...ஆமாம் இதுவும் முள்ளங்கி தான்..

நன்றி ராஜேஸ்வரி...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி ப்ரேமா..

நன்றி ஜமால் அண்னா...கண்டிப்பாக இருக்காது...சாப்பிட்டு பாருங்க...

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா..

நன்றி கல்பனா..

நன்றி கீர்த்தி..

நன்றி மேனகா..

நன்றி புஷ்பா...

நன்றி ப்ரியா...எனக்கும் சட்னி ரொம்ப பிடிக்கும்..

GEETHA ACHAL said...

நன்றி வானதி..

நன்றி ஜெய்..

நன்றி அப்சரா...

நன்றி ப்ரியா..

வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி உஷா...

Krishnaveni said...

simply superb poriyal, looks great

Geetha6 said...

அருமை மேடம்

Pavithra said...

Supera irukku geetha.. love this veggie in this way and as well as salad both.

GEETHA ACHAL said...

நன்றி கிருஷ்ணவேனி..

நன்றி கீதா..

நன்றி பவித்ரா...

Related Posts Plugin for WordPress, Blogger...