ஸ்பைசி ப்ரான் வறுவல் - Spicy Prawn Varuvalசமைக்க தேவைப்படும் நேரம் : 25 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         இரால் – 1/4 கிலோ ( சுமார் 25 – 30 இரால்)
·         வெங்காய்ம் – 1/4 கிலோ
·         பூண்டு – 10 பல்
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         கடுகு - தாளிக்க

வறுத்து அரைத்து கொள்ள வேண்டியவை :
·         காய்ந்த மிளகாய் – 5
·         தனியா – 1 மேஜை கரண்டி
·         மிளகு – 1 தே.கரண்டி
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         வெந்தயம் – 1/2 தே.கரண்டி
·         தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி (விரும்பினால்)

கடைசியில் சேர்க்க :
·         எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·         கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·         இராலினை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். வெங்காயம் + பூண்டினை பொடியாக நறுக்கி வைக்கவும்.


·         வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, சிறிது நேரம் ஆறிய பிறகு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பூண்டு + வெங்காயம் ஒவ்வொனறாக போட்டு வதக்கவும்.


·         வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், அரைத்த விழுது + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து நன்றாக 10 நிமிடங்கள் வேகவிடவும்.

·         இத்துடன் சுத்தம் செய்த இராலினை சேர்த்து வேகவிடவும்.


·         கடைசியில் எலுமிச்சை சாறு + கொத்தமல்லி சேர்த்து கிளறவும். சுவையான எளிதில் செய்ய கூடிய இரால் வறுவல் ரெடி. இதனை சாதம், சாம்பார், ரசமுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க :
இதில் அதிக எண்ணெய் சேர்க்க தேவையில்லை…தேவையான அளவு சேர்த்தால் மட்டும் போதும்.

விரும்பினால் தேங்காய் துறுவல் சேர்க்கவும்…

20 comments:

Priya said...

Mouthwatering here, very addictive prawn varuval...yumm!

Chitra said...

I like it so much.... Thank you for the recipe.

Krithi's Kitchen said...

Drooling here... absolutely delicious..

http://krithiskitchen.blogspot.com

Pushpa said...

Looks spicy and delicious.

asiya omar said...

அருமை,கீதா.

எல் கே said...

present

ஸாதிகா said...

அருமையாக சமைத்துக்காட்ட் இருக்கின்றீர்கள் கீதாஆச்சல்,

நட்புடன் ஜமால் said...

Prawn my all time favorite

இப்போ கொஞ்சம் குறைச்சாச்சு இறால் சாப்பிடுவதை

ஜெய்லானி said...

எங்கே போனாலும் புதுசு புதுசா இந்த இறால் மேட்டராவே இருக்கு ...!! ஆனா கிடைக்க மாட்டேங்குதே.. அவ்வ்வ்வ் :-))
போட்டோ சூப்பர் ..

athira said...

சூப்பர்.... பார்க்கவே சாப்பிடச் சொல்லுது. இன்று வெள்ளிக்கிழமை ஆச்சே:(

S.Menaga said...

படமே அதன் சுவையை சொல்லுது...

அமுதா கிருஷ்ணா said...

பார்க்கவே நல்லாயிருக்கு கீதா..தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்துள்ளேன். தொடரவும்.

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி சித்ரா...

நன்றி கீர்த்தி..

நன்றி புஷ்பா..

நன்றி ஆசியா அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி ஜமால் அண்ணா...

நன்றி ஜெய்லானி...

நன்றி அதிரா...நாளை செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க..

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி அமுதா..இப்படியா என்னை மாட்டிவிடுவது...

Geetha6 said...

வித விதமாக அசத்துறீங்க மேடம்.
வாழ்த்துக்கள்

mahavijay said...

unga saamayal simply superb geetha

apsara-illam said...

ஆஹா...,கீதா பார்க்கவே சூப்பராக இருக்கே... வெறும்,மிளகு,மிளகாய்த்தூள் சேர்த்துதான் க்ரேவி செய்வோம்.அல்லது பிரட்டுவோம்.நீங்கள் வறுத்து அரைத்த பொருட்கள் கொண்டு சேர்ப்பது புதுசாக உள்ளது.டேஸ்ட்டும் சும்மா அப்படி இருக்கும்னு நினைக்கிறேன்.
இறால் வாங்கி சமைத்து நாளாச்சு.அடுத்தமுறை சமைத்தால் அது உங்கள் முறைபடிதான் சமைத்து பார்க்கணும்.
பாராட்டுக்கள் கீதா.

அன்புடன்,
அப்சரா.

GEETHA ACHAL said...

நன்றி கீதா..

நன்றி மகா..

நன்றி அப்சரா...கண்டிப்பாக அடுத்த முறை செய்து பாருங்க...

Priyajanish said...

Mam Simply Superb,I'll surely try this thank u mam....

Related Posts Plugin for WordPress, Blogger...