தினம் ஒரு கலந்த சாதம் # 2 - மாங்காய் இஞ்சி சாதம் - Lunch Box Varitey Rice # 2 - Ma Inji Rice / Mango Ginger Riceமாங்காய் இஞ்சி – இதனை இஞ்சி என்றோ அல்லது மாங்காய் குடும்பத்தினை சேர்த்து என்றோ தான் நாம் நினைத்து கொண்டு இருப்போம்..

இதனை வெட்டும் பொழுது மாங்காய் போல வாசனையாக இருக்கும்…அதே போல பார்ப்பதற்கு இஞ்சி போல இருக்கும்.

ஆனால் உண்மையில் இது மஞ்சள் (Turmeric) குடும்பத்தினை சேர்ந்த்து.

இதனை சாப்பிடுவதால் அஜுரண கோளாறு, ஆஸ்துமா, அலர்ஜி, தோல் வியாதி போன்றவை குணமடையும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         வேகவைத்த சாதம் -  2 கப்
·         மாங்காய் இஞ்சி – 2 மேஜை கரண்டி துறுவியது
·         வேகவைத்த வேர்க்கடலை – சிறிதளவு (விரும்பினால்)
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

அரிந்து கொள்ள :
·         வெங்காயம் – 1
·         கருவேப்பில்லை – 4 இலை
·         பச்சைமிளகாய் - 2
·         கொத்தமல்லி - சிறிதளவு

தாளித்து கொள்ள :
·         எண்ணெய்  - 1 மேஜை கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க

செய்முறை :
·         வெங்காயம் + கருவேப்பில்லையினை வெட்டி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம் + கருவேப்பில்லை + பச்சைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


·         இத்துடன் துறுவிய மாங்காய் இஞ்சி + மஞ்சள் தூள் + உப்பு + வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.


·         கடைசியில் வேகவைத்த சாதம் + கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய சாதம் ரெடி. இதனை உருளை வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

29 comments:

Sukanya Ramkumar said...

Very innovative thinking Geetha... Really want to give it a try... YUM!

கக்கு - மாணிக்கம் said...

சமையல் ராணிகளின் பதிவுகளை படிக்க எனக்கு ரொம்பவும் இஷ்டம் தான் என்றாலும் சில வேலைகளை தவற விடுகிறேன். வேலையின் நிமித்தம் அவ்வாறு ஆகி விடுகிறது.
மாங்காய் இஞ்சி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதில் என்ன செய்தாலும் அதன் சுவையும் மனமும் அலாதிதான்.

கக்கு - மாணிக்கம் said...

நீகள் வசிக்கும் இடத்தில் மாங்காய் இஞ்சி கிடைகிறதா என்ன ? !

கக்கு - மாணிக்கம் said...

சென்ற பதிவில் சுண்டைக்காய் சாதம் நல்ல ரெசிப்பி. மழை நாட்களில் அம்மா இதனை இரவு நேரங்களில் செய்வார்கள். சூடான சாதத்துடன் நல்ல எண்ணெய் சேர்த்து சாப்பிட பிரமாதமாய் இருக்கும் :))

Krithi's Kitchen said...

Sadham sooper.. maangai injinudaiya gunangal eduthuraithamaiku nandri...

http://krithiskitchen.blogspot.com
Breakfast Club - Pancakes

Nandini said...

Very innovative n flavorful rice dear! I love manga inji in any way.

asiya omar said...

சூப்பர் கமகமன்னு சாதம் பார்க்கவே அழகாக இருக்கு.

ஹுஸைனம்மா said...

மாங்காய் இஞ்சி என்பது பதிவுகளில்தான் பார்க்கிறேன். இதன் வேறு எதிலெல்லாம் பயன்படுத்தலாம்? சாதாரண இஞ்சிக்குப் பதிலாக உபயோகிக்கலாமா?

இதே சாதம், சாதாரண இஞ்சியில் செய்தால் எப்படி இருக்கும்? ( ரொம்ப டிரையா இருக்குமோ?)

Pushpa said...

Delicious and perfect flavorful rice.

Kalpana Sareesh said...

ah super rice .. am writing down all the rice dishes.. for me to cook.. en velai of breaking heads has gone..

சசிகுமார் said...

சத்தான சமையல் நன்றி அக்கா

Priya said...

Salivating rice, simply inviting..

கோவை2தில்லி said...

ஆஹா!! சூப்பர் சாதம். மாங்காய் இஞ்சி கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.

ஸாதிகா said...

வித்த்யாசமான சாதவகைகள்.சூப்பர்ப்..

GEETHA ACHAL said...

நன்றி சுகன்யா..

நன்றி மாணிக்கம் அண்ணா..ஆமா இங்கு இந்தியன் கடைகளில் மாங்காய் இஞ்சி கிடைக்கும்...விலையும் அதிகம் எல்லாம் கிடையாது...

நன்றி கீர்த்தி..

நன்றி நந்தினி..

நன்றி ஆசியா அக்கா...

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா..

மாங்காய் இஞ்சியினை ஊறுகாய் செய்யலாம். ரொம்ப நல்லா இருக்கும்.

இதில் செய்த இந்த ரைஸ் ரொம்ப நல்லா வந்தது...அதனால அடிக்கடி இப்ப எல்லாம் செய்துவிடுகிறேன்..

சிக்கன் செய்யும் பொழுது இஞ்சிக்கு பதிலாக இதனை சேர்த்தேன்...ரொம்ப வித்தியசமாக நல்லா வந்தது..

இதனை சேர்க்கும் பொழுது எலுமிச்சையே அல்லது தயிரே அதிகம் சேர்த்தால் இதன் சுவை மறைந்துவிடுக்கின்றது..

வெரும் இஞ்சியில் செய்தால் இதே சுவையில் இருக்குமா என்று தெரியவில்லை...ஆனால் எலுமிச்சை சாதம் செய்யும் பொழுது எப்பொழுதுமே இஞ்சியினை சிறிது அதிகம் சேர்த்து செய்வேன்....நல்லா தான் இருக்கும்...

ஒரு முறை செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்..நன்றி

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி கல்பனா..ரொம்ப மகிழ்ச்சி..

நன்றி சசி...

நன்ரி ப்ரியா,,

நன்றி ஆதி....

நன்றி ஸாதிகா அக்கா..

S.Menaga said...

சூப்பரா இருக்கு,கிடைக்கும் போது செய்து பார்க்கனும்.மாங்காய் வாசனையோடு ரொம்ப நல்லாயிருக்கும்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

பார்க்கவே அழகா இருக்கே கீதா..:)

Sensible Vegetarian said...

Very different and innovative dish. Haven't thought of Mangai Inji more than pickle and this sundaikai sadam is also awesome. Excellent recipes.

Nithu said...

Manga inji sadham is a delight. Looks so tempting.

Now Serving said...

Mangai Inji Saadham romba pramadham :)

Malar Gandhi said...

Its bean a while I have seen this Maa-Inji. Rice varieties sounds awesome.

Mahi said...

மாங்கா இஞ்சி ஊறுகாய் ஊரில் சாப்பிட்டிருக்கேன்,இங்கே வாங்கவே இல்ல. சாதம் சூப்பர் கலர்! :)

savitha ramesh said...

Kalakkureenga geetha.romba manama irukku mnu ninaikkiren.Unga call a miss panniten.will call u tomo.

GEETHA ACHAL said...

நன்றி தேன் அக்கா...

நன்றி sensible...

நன்றி நிது..

நன்றி ப்ரியா....

நன்றி மலர்..

நன்றி மகி..

நன்றி சவிதா...

தெய்வசுகந்தி said...

கீதா, மாங்காய் இஞ்சி நிறையா வாங்கி வைத்திருக்கிறேன். நாளை செய்யப்போகிறேன்.

தெய்வசுகந்தி said...

கீதா, இன்னிக்கு மாங்காய் இஞ்சி சாதம் செஞ்சேன். ரொம்ப நல்லா இருந்தது. நன்றி!!

ChitraKrishna said...

அடுத்த முறை மாங்காய்-இஞ்சி வாங்கும் போது கண்டிப்பா இந்த சாதம் ட்ரை பண்ண போறேன். உங்க சமையல் குறிப்பு எல்லாம் சூப்பர் கீதா.

Related Posts Plugin for WordPress, Blogger...