ப்ரெட் குழியில் முட்டை - Eggs in Bread Holesகுழந்தைகளுக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி டோஸ்ட் செய்யாமல் இப்படி செய்து பாருங்க…ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க….

அக்‌ஷதாவிற்கு வெரும் ப்ரெட் அல்லது முட்டை ஆம்லேட் என்று தனிதனியாக தான் சாப்பிட பிடிக்கும். முட்டையினை இப்படி செய்து கொடுத்தால்,  என்னுடைய பிரச்சனையும் தீர்ந்தது…அவளும்  Happy….

நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ப்ரெட் துண்டுகள் – 2
·         முட்டை – 1
·         மிளகுதூள் – சிறிதளவு
·         உப்பு – தேவையான அளவு
·         எண்ணெய் - சிறிதளவு

செய்முறை :
·         முட்டையினை உடைத்து அத்துடன் உப்பு + மிளகுதூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ப்ரெட் துண்டுகளை எடுத்து குக்கீ கட்டர் அல்லது எதாவது பாக்ஸ் மேல் மூடி வைத்து நடுவில் வட்டமாக வெட்டி கொள்ளவும்.


·         தோசை கல்லினை காயவைத்து அதில் வெட்டி வைத்துள்ளச் ப்ரெட் துண்டுகளை போட்டு சூடு செய்யவும்.


·         பிறகு, ப்ரெட் துண்டுகள் நடுவில் கலக்கி வைத்துள்ள முட்டை கலவையினை ஊற்றவும்.


·         ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, திருப்பி போட்டு சிறிது நேரம் வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய டோஸ்ட் ரெடி.

கவனிக்க:
வெட்டிய ப்ரெட் துண்டுகளை Croutons  அல்லது ப்ரெட் க்ரம்ஸாக செய்து கொள்ளலாம்.


சௌ சௌ சிப்ஸ் - Chow Chow Chips / Chayoteசமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சௌசௌ – 1
·         எண்ணெய் – 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         சௌசௌயினை தோல் நீக்கி பொடியாக சிப்ஸ் மாதிரி வெட்டி கொள்ளவும்.


·         சௌசௌ + தூள் வகைகள் + எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

·         நாண்- ஸ்டிக் கடாயில் இதனை சேர்த்து நன்றாக வதக்கவும்.


·         அடிக்கடி கிளறாமல் ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு திருப்பிவிட்டு வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய சிப்ஸ் ரெடி. இதனை கலந்த சாதமுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இதனை எண்ணெயில் போட்டு சிப்ஸ் போல பொரித்தால் கூடுதல் சுவையுடன் வாழைக்காய் சிப்ஸ், உருளை சிப்ஸ் போல நன்றாக இருக்கும்.

ஈஸி தக்காளி சட்னி - Easy Tomato Chutney / Thakkali Chutney - Side Dish for Idly and Dosaஎளிதில் செய்ய கூடிய சட்னி … எங்க அம்மா , அடிக்கடி செய்யும் சட்னி..நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்க கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 6 - 8 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
         தக்காளி – 100 கிராம்
·         காய்ந்த மிளகாய் – 3
·         இஞ்சி – சிறிய துண்டு
·         புளி – சிறிதளவு
·         உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :
·         தக்காளி + காய்ந்தமிளகாய் + இஞ்சி + புளி சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.


·         தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டாம்.


·         கடாயில் காயவைத்து, அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் அரைத்த விழுதினை சேர்க்கவும்.


·         இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய தக்காளி சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை, தயிர் சாதம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்.


குறிப்பு :
தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால், ரொம்ப நல்லா இருக்கும்.

இந்த சட்னி 2 – 3 நாட்கள் வரை நல்லா இருக்கும்.

Plant Exchange Day ...


எங்க Libraryயில் வருடவருடம், இந்த Plant exchange நடக்கும்…எப்பொழுதும் எதோ ஒரு காரணத்தினால் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இல்லை….

இந்த வருடம், அக்‌ஷதாவிற்காக கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்… அவளுக்கு Dora’s Sharing Day என்று ஒரு புக்கினை படித்தில் இருந்து, அவளிற்காக, Plant Exchangeயினை, Plant Sharing Day என்று மாற்றிவிட்டேன்.. 

சரி, நம்மளும் எதாவது செடி எடுத்து சென்றால் நல்லா இருக்கும் என்பதால், என்னுடைய பெயரினையும் இதில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்தாகிவிட்டது…

பிறகு, சிறிய சிறிய தொட்டிகள் வாங்கி கொண்டேன்…ஒரு வாரத்திற்கு முன்பே, 3 தொட்டியில் புதினாவும், 3 தொட்டியில் வெந்தயத்தினை போட்டு கீரையினை வளர்த்தேன்…


நான் எதிர்பார்த்தினை விட நிறைய பேர் வந்து இருந்தாங்க…சுமார் 25 – 30 நபர்கள் வந்து இருப்பாங்க…இதுல வேறு Photographers எல்லாம் கூட வந்து இருந்தாங்க…Libraryயின் வெளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது…


எனக்கு பெயரே தெரியாது செடிகள் நிறைய இருந்தது…..பெயர் பதிவு செய்தவர்களின் Orderயில் ஒவ்வொருத்தரும், அவர்கள் எடுத்து வந்துள்ள செடிகளை பற்றி சொல்ல வேண்டும்…நான் வெந்தயகீரையினை பற்றி சொல்ல அனைவருக்கும், அதனை exchange செய்து கொள்ள ரொம்ப ஆசைப்பாட்டாங்க….


ஒவ்வொரு சுற்றிலும், பெயர் பதிவு செய்த நபர்கள் அவர்களின் Orderயில், அவர்கள் விரும்பிய செடிகளினை எடுத்து கொண்டாங்க…முதல் சூற்றிலே வெந்தயகீரை தொட்டி எல்லாம் காலி…புதினா தொட்டி கடைசியில் ஒன்று மிச்சம் இருந்தது…அதனை பெயர்பதிவு செய்யாத ஒரு பெண்மணி கடைசியில் எடுத்து கொண்டாங்க..

அப்பாடா, அக்‌ஷதாவிற்கு எப்படியே Plant Sharing Day நல்லா போச்சு…அவளும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தா…


நாங்க எடுத்து கொண்ட செடிகள், Chives, Cherry Tomatos மற்றும் Chocolate Mint (யாருக்காவது இந்த செடியினை பற்றி தெரியுமா…இதனை chocolate recipesயில் பயன்படுத்துவாங்க என்று சொன்னாங்க…சரி…ட்ரை செய்து பார்க்கலாம் என்று எடுத்து கொண்டு வந்தேன்…)

அவசர சிக்கன் குழம்பு - Fast & Easy Chicken Kuzhambuமிகவும் குறைவான நேரத்தில், எளிதில் செய்ய கூடிய குழம்பு… நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம்: 12 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சிக்கன் – 1/4 கிலோ
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி

முதலில் தாளிக்க:
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         சோம்புதூள் – 1/2 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளியினை வெட்டி கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.

·         பிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

·         இத்துடன் வெங்காயம் + தக்காளி சேர்த்து 1 நிமிடம் வதக்கி, சிக்கன் + தூள் வகைகள் + 1/2 கப் தண்ணீர் சேர்த்து பிரஸ்ர் குக்கரினை மூடி 3 விசில் வரும் வரை வேகவிடவும்.


·         பிரஸர் அடங்கியதும் குக்கரினை திறந்து, கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
·         சுவையான எளிதில் செய்ய கூடிய குழம்பு ரெடி. இதனை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:
இதனை பிரஸர் குக்கரில் செய்வதால், எளிதில் குழம்பு ரெடியாகிவிடும்…குழம்பும் ரொம்ப டேஸ்டியாக இருக்கும்.

வெங்காயம், தக்காளியினை பொடியாக நறுக்க வேண்டியதில்லை… விரும்பினால், வெங்காயம் + தக்காளியினை மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்து சேர்த்தால், க்ரேவி நிறைய கிடைக்கும்.அவகேடோ சப்பாத்தி - Avocado Chapathi


அவகேடோவில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது…இத்துடன் விட்டமின்ஸ் C, K & B9 இருக்கின்றது…

அவகேடோவில் கெட்ட கொழுப்பினை நீக்கி, நல்ல கொழுப்பினை அதிகம் செய்ய உதவுக்கின்றது…அதனால் கொலஸ்டிரால் அதிகம் இருப்பவர்கள் இதனை சாப்பிடுவது நல்லது.

அதே மாதிரி, வாழைப்பழத்தில் உள்ள Potassium அளவினை விட அவகேடோவில் அதிகம் இருக்கின்றது.


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கோதுமை மாவு – 3 கப்
·         அவகேடோ – 1
·         உப்பு – சிறிதளவு

செய்முறை :
·         அவகேடோவினை தோல் நீக்கி உள்ளே இருக்கும் சதை பகுதியினை எடுத்து கொள்ளவும்.

·         அவகேடோ + மாவு + உப்பு சேர்த்து நன்றாக சப்பாதி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க தேவையில்லை)


·         பிசைந்த மாவினை சப்பாதிகளாக தேய்த்து , சுடவும்.
·         சுவையான சத்தான அவகேடோ சப்பாத்தி ரெடி. இதனை குருமா, ரய்தாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
அவகேடோவினை சேர்ப்பதால் சப்பாத்தியினை சுடும் பொழுது, எண்ணெய் சேர்க்க் தேவையில்லை.

அதே மாதிரி மாவு பிசையும் பொழுது கண்டிப்பாக தண்ணீர் சேர்க்க வேண்டாம். 


மாங்காய் இஞ்சி தேங்காய் சட்னி - Mango Inji Coconut Chutney - Side Dish for Idly and Dosa


எப்பொழுதும் இஞ்சியினை சேர்த்து சட்னியினை செய்வது போல, மாங்காய் இஞ்சியினை சேர்த்து செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்…உடலிற்கும் நல்லது…

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         மாங்காய் இஞ்சி – 2 மேஜை கரண்டி துறுவியது
·         தேங்காய் – 1/4 கப் துறுவியது
·         பச்சைமிளகாய் – 2
·         உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         கருவேப்பில்லை – 4 இலை
·         பெருங்காயம் – சிறிதளவு


செய்முறை:
·         மாங்காய் இஞ்சி + தேங்காய் + பச்சைமிளகாய் + உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து சட்னியினை அரைத்து கொள்ளவும்.

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து சேர்க்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய சட்னி ரெடி.


குறிப்பு :
இதே மாதிரி, இத்துடன் கொத்தமல்லி, புதினா என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல சேர்த்து கொண்டு சட்னி செய்யலாம்.

பூக்கள் - Tulip FestivalTulip Festival, இங்கு வருடவருடம் Albany, New Yorkயில் நடைபெறும்……இந்த வருடம் நிறைய பேர் வந்து இருந்தாங்க…காலையில் சென்றதால் இன்று Climate நல்லா இருந்தது…அக்‌ஷதா இந்த முறை சூப்பராக Enjoy  செய்தாள்…அங்கே பல விதமான Tulips பூக்கள் வைத்து அழகாக இருந்தது…போன 2 வாரமாக Climate சரியாக இல்லாததால், பல பூக்கள் இன்னும் மலராமல் மொட்டாகவே இருந்தது….
குழந்தைகளுக்காக பல shows நடைபெற்றது…Puppet Show, Face Painting, Balloon Making, Bounce Rides  என்று குழந்தைகளை கவரும் விதமாக இருந்தது… வந்து இருந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு பூத்தொட்டி கொடுத்து, குழந்தைகள் விரும்பிய பூக்களின் விதைகள் போட்டு கொடுத்தாங்க…எங்க வீட்டில் நாளைக்கு தான் தோட்டத்தில் அந்த தொட்டியினை வைக்க வேண்டும்….


   இங்கே, இந்த மாதம், Baby Animals Month கொண்டாடுகின்றாங்க…


தயிர் சிக்கன் - Curd chicken / Yogurt chickenஎளிதில் செய்ய கூடிய தயிர் சிக்கன்…வாங்க…நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…..
          
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சிக்கன் – 1/4 கிலோ
·         தயிர் – 1/2 கப்
·         எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி

அரைத்து கொள்ள :
·         பூண்டு – 6 பெரிய பல்
·         இஞ்சி – 1 துண்டு
·         மிளகு – 10
·         சோம்பு – 1 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         சிக்கனை  சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.

·         சிக்கனுடன் அரைத்த விழுது + தயிர் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.


·         கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்.

·         சுமார் 10 – 15 நிமிடங்கள் சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.


·         கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 1 – 2 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான எளிதில் செய்ய கூடிய சிக்கன். இதனை சாலடுடன், சாதம் , சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க…


குறிப்பு :
மிளகுக்கு பதிலாக மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம்.

தயிரினை இஞ்சி பூண்டு விழுது அரைத்த பிறகு, அத்துடன் சேர்த்து 10 sec தயிரினையும் அரைத்தால் நன்றாக இருக்கும்.

தயிரின் புளிப்பின் அளவினை பொருத்து எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். புளிப்பான தயிர் என்றால் எலுமிச்சை சாறு தேவையில்லை.

இந்த சிக்கனை saladயுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்….

மாலை நேரத்தில்.....A Evening Walk to the Fish Pond...அக்‌ஷதாவிற்கு walking போவது ரொம்பவும் பிடிக்கும்…எங்க வீட்டிற்கு பக்கத்தில் அவளுக்கு ஏற்றாற் போல நடக்கவும், cycle ஓட்டவும் நிறைய இடம் இருக்கின்றது…அதனால Spring வந்ததில் இருந்து எப்பொழுதும் வெளியில் ஒரே விளையாட்டு தான்..

நானும் அவளும் எப்பொழுதுமே Evening Walk செல்வோம்…அவளுக்கு ரொம்பவும் பிடித்தது…அவ cycle ஒட்டிக்கொண்டு வருவா… அம்மா இங்கே வந்து இருந்த பொழுது அவளுக்கு ஆசையாக இந்த cycleயினை வாங்கி கொடுத்தாங்க…

எங்க வீட்டிற்கு பக்கதில் 5 நிமிடம் நடக்கும் தூரத்தில், ஒரு Pond இருக்கின்றது…அதில் அழகான Fountain  இருக்கும்..ஆனா summerயில் தான் அதனை On செய்வாங்க…


அந்த Pondயில் நிறைய Gold Fish இருக்கும்…தினமும் நாங்க எதாவது பிரட் அல்லது பிஸ்கட் எடுத்து கொண்டு போய் அந்த மீன்களுக்கு போடுவோம்..இதற்காகவே shopping போகும் பொழுது எல்லாம் அக்‌ஷ்தா பிரட் வாங்க ஞாபகம் செய்துவிடுவா…


இந்த Pondயில் Gold Fishயினை தவிர 4 Ducks மற்றும் நிறைய ஆமைகள் இருக்கின்றது…..மதியம் நேரம் இங்கே சென்றால், Blue Heron என்ற ஒரு பறவை, பார்க்க கொக்கு மாதிரி இருக்கும்…வந்து மீன் பிடித்த சாப்பிடும்… பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்…


மாலை நேரத்தில் அங்கு உள்ள மரங்களின் reflections தண்ணீரில் பார்க்கும் பொழுது அழகு…


அங்கே உட்கார நிறைய இடங்கள் இருக்கின்றது…இது மாதிரி 4 – 5 Swing செய்கின்ற மாதிரி நாற்காலிகள் இருக்கும்…அக்‌ஷ்தாவிற்கு ரொம்ப பிடித்தது… இதற்காகவே தினமும் walking போக வேண்டி இருக்கின்றது…

Related Posts Plugin for WordPress, Blogger...