மாங்காய் இஞ்சி தேங்காய் சட்னி - Mango Inji Coconut Chutney - Side Dish for Idly and Dosa
எப்பொழுதும் இஞ்சியினை சேர்த்து சட்னியினை செய்வது போல, மாங்காய் இஞ்சியினை சேர்த்து செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்…உடலிற்கும் நல்லது…
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
மாங்காய் இஞ்சி – 2 மேஜை கரண்டி துறுவியது
· தேங்காய் – 1/4 கப் துறுவியது
· பச்சைமிளகாய் – 2
· உப்பு – தேவையான அளவு
கடைசியில் தாளித்து சேர்க்க :
· எண்ணெய் – 1 மேஜை கரண்டி
· கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
· கருவேப்பில்லை – 4 இலை
· பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை:
· மாங்காய் இஞ்சி + தேங்காய் + பச்சைமிளகாய் + உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து சட்னியினை அரைத்து கொள்ளவும்.
· தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து சேர்க்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய சட்னி ரெடி.
குறிப்பு :
இதே மாதிரி, இத்துடன் கொத்தமல்லி, புதினா என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல சேர்த்து கொண்டு சட்னி செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
சிற்றூண்டி – Breakfast
10 comments:
Arumaiyaana chutney... I love this combo:)
Reva
Chutney looks so delicious and love the crispy dosa too.
Manga inji chutney looks delish awesome combo.
aromatic n delicious..
Tasty Appetite
தோழி இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்குமா என்று பாருங்கள்
பிளாக்கர் வலைப்பதிவுகளில் லேபிள்களை சுருக்க விரிக்க எளிமையாக்க
super chutney!! i too make similar way by adding roasted gram..
மாங்காய் இஞ்சியின் மணம் இங்கு மூக்கை துளைக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.
Tangy and flavorful chutney
மாங்காய் +இஞ்சி அல்லது மாங்காய் இஞ்சி புரியவில்லயே தோழி ....
.அருமையான பயனுள்ள வலைத்தளம் .........பதிவுகளுக்கு நன்றி
அனைவருக்கும் நன்றி..
நன்றி அனானி...மாங்காய் இஞ்சியின் படத்தினை பதிவில் இனைத்து இருக்கின்றேன் பாருங்க..
அது தான் மாங்காய் இஞ்சி...இது மஞ்சள் குடும்பத்தினை சேர்த்தது...
Post a Comment