Berries Picking....எப்பொழுதும் Strawberry picking என்று போகாமல் இந்த முறை Blueberries Picking போகலாம் என்று நினைத்தோம்…ஏனா அக்‌ஷதாவிற்கு Strawberryவிட Blueberries தான் இப்போழுது ரொம்ப பிடித்து இருக்கின்றது…

இரண்டு மாதத்திற்கு முன் Libraryயில் இருந்தது, Doraவின் Level 1 Reading Bookயினை அவளுக்கு படிப்பதற்காக எடுத்து கொண்டு வந்தேன்…அதில் ஒரு புக்கில், டோரா அவளுடைய தந்தைக்கு Blueberry கேக் செய்து கொடுப்பா…அதனை எப்படி செய்வது என்ன அளவு என்று எல்லாம் அதில் எழுதி இருக்கும்…டோரா செய்வது மாதிரி இவளும் அவங்க daddyக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று அன்றே கடைக்கு போய் Blueberry வாங்கி கொண்டு வந்து செய்தாச்சு…

அப்பொழுதில் இருந்து எங்க வீட்டில் கேக் என்றால் அது Blueberry கேக் தான்…அவளுக்கு அது ரொம்ப பிடித்துவிட்டது… அதனால அக்‌ஷதா குட்டிக்காக Blueberry Picking  சென்றோம்…காலையில் சுமார் 10 மணிக்கு சென்றோம்..காலை நேரத்தில் சென்றால் தான் நல்லா இருக்கும்…


முதல் தடவையாக Blueberries தோட்டத்தினை பார்த்தில் மிகவும் சந்தோசம்…ஒவ்வொரு செடிகளிலும் எவ்வளவு பழங்கள்…பார்க்கவே ரொம்ப அழகாக இருந்தது…

அக்‌ஷதாவிற்கு ரொம்ப பிடித்துவிட்டது…கடைசி வர Blueberryயினை பறித்து போடுவதற்கான டாப்பவினை எங்களிடம் கொடுக்கவேயில்லை…அவளே கையில் பிடித்து கொண்டு பறித்தாள்… அதில என்ன பெரியவிஷயம் என்றால் பழத்தினை எப்படி பறிக்க வேண்டும், எந்த அளவு பழம் இருக்க வேண்டும்…என்று எல்லாம் நாங்க அவளுக்கு சொல்ல வேண்டாமாம்…அவளுக்கே தெரியுமாம்…என்றாள்…


பழங்களை பறிக்க பறிக்க நாம் அங்கேயே பழங்களை சாப்பிடலாம்… இந்த மாதிரி பெர்ரீஸ் எல்லாம் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும் என்பதால் பறித்து சாப்பிடுவாங்க… அங்கே உள்ள அனைத்து செடிகளில் உள்ள பழங்களுமே மிகவும் சுவையாக இருந்தது…


சுமார் 1 மணி நேரம் கழித்து பழங்களை பறித்துவிட்டாள்…அவளுக்கு ஒரே சந்தோசம்..எல்லாம் முடிந்தவுடன் அவ சொன்னது…வீட்டிற்கு போனவுடனே Daddyக்கு இதனை வைத்து கேக் செய்து கொடுக்க வேண்டும் என்றது தான்…

அந்த தோட்டதினை விட்டு வெளியே வந்தால் அங்கே Rasberry Picking இருந்தது…சரி…Raspberryயினை பார்க்காலம் என்று சென்றோம்…அக்‌ஷதாவும் சரி என்றதால் சென்றோம்…


முதலில் அவளும் மிகவும் ஆர்வமாக தான் இருந்தாள்…ஆனா Blueberry மாதிரி இல்லாமால் இந்த செடிகளில் உள்ளே உலவி பார்த்தால் தான் பழங்களை பார்க்க முடியும்..கூடவே செடிகள் சிறிது முசுமுசு என்று இருப்பதாலும்…கூடவே பழங்கள் சிறிது முட்களுடன் காணபட்டதால் அவ இந்த பக்கமே வரவில்லை …நானும் இவரும் தான் பறித்தோம்…


Blueberry பறிக்கும் பொழுதினைவிட Raspberry பறிக்கும் பொழுது வெளியில் தாக்கம் அதிகம் இருப்பதால் சீக்கிரமாகவே பறித்துவிட்டோம்…


வீட்டிற்கு வந்தவுடன் அக்‌ஷதாவே செய்த Blueberry Cakes…


எங்க Neighbour வீட்டில் இருக்கும் Mulberry மரங்கள்…பார்ப்பதற்கு Black Berries மாதிரியே இருக்கும்…ரொம்ப சுவையாக இருக்கும் இந்த பெர்ரிஸ்…


22 comments:

சசிகுமார் said...

ஹா ஹா பாப்பா சூப்பர்

Vimitha Anand said...

Nalla clicks... Kutti looks so happy

நட்புடன் ஜமால் said...

Daddyக்கு இதனை வைத்து கேக் செய்து கொடுக்க வேண்டும் என்றது தான்…]]

ஆஹா!
ஒரு சமையல் இளவரசி தயார் ஆகின்றார்

Kalpana Sareesh said...

wow shes very cute thanks for sharing the snaps ..

Kanchana Radhakrishnan said...

super clicks.

S.Menaga said...

குட்டிமா கேக்கை ரொம்ப அழகா செய்துருக்காங்க...வாழ்த்துக்கள் செல்லம்!!

ILA(@)இளா said...

ம்ம், இந்த வருசம் போகவேணாம்னு இருந்தேன். படங்களைப் போட்டு போக வெச்சிட்டீங்களே

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அடடா மௌத் வாட்டரிங்.. எப்போ அனுப்பி வைப்பீங்க..:)

Krithi's Kitchen said...

Wow... looks like you had a great time! love akshata's bluberry bake..

Sensible Vegetarian said...

Lovely clicks. The cake looks so cute.

Premalatha Aravindhan said...

Wow thats amazing,she baked...luks cute and perfect...

athira said...

நாங்களும் போய்ப் பறித்திருக்கிறோம் சூப்பர்.

புலூபெரி heart க்கு நல்லதாம்.

ஸாதிகா said...

படங்கள் அழகு.அக்‌ஷயா செய்த கேக் அதை விட அழகு.சின்னப்பொண்ணுக்கு இப்பவே சமையலில் இண்ட்ரஸ்ட் வந்துவிட்டதே!

GEETHA ACHAL said...

நன்றி சசி...

நன்றி விமிதா..

நன்றி ஜமால் அண்ணா...நீங்க வேற...அவளுக்கு பிடிக்கும் என்பதால் கேசரியும், அவங்க Daddyயிற்காக கேக் ரெஸிபியும் அவளுக்கு மனப்பாடம்...யார் கேட்டாலும் ரெஸிபியினை சொல்லுவா...எதோ அவளுக்கு கொஞ்சம் ஆசை...

நன்றி கல்பனா..

நன்றி கஞ்சனா..

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி இளா..கண்டிப்பாக போய்விட்டு வாங்க..

நன்றி தேன் அக்கா..உங்களுக்கு இல்லாமலா...

நன்றி கீர்த்தி...

நன்றி Sensible...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரேமா...

நன்றி அதிரா...ஆமாம் ப்ளுபெர்ரி உடலிற்கு மிகவும் நன்றி..

நன்றி ஸாதிகா அக்கா...அவங்க Daddyயிற்கு பிடிக்கும் என்பதால் அவ கற்று கொண்டது...

Jay said...

wow...fantastic cliks..
cake sounds amazing...
ur daughter is so cute..:)
Tasty Appetite

Mahes said...

Wow, very cute.

மகி said...

சூப்பரா இருக்கு படங்கள்! வெயில்தான் அதிகமா இருந்திருக்கும் போல!

கேக் அழகா இருக்கு கீதா! நான் இன்னும் இந்த ப்ளூபெரி-ராஸ்பெர்ரி பக்கமெல்லாம் போனதே இல்லை,இன்னிக்கு ப்ளூ பெரி வாங்கப்போறேன்!:)

vanathy said...

ப்ளூ பெர்ரி செடிகள் இவ்வளவு உயரமாக வளருமா? நான் தரையோடு இருக்கும் போல என்று நினைச்சேன். நாங்கள் செர்ரி பிக்கிங் போன் வருஷம் போனோம். ஜாலியா இருந்திச்சு. படங்கள் சூப்பர்.

graceravi said...

உங்கள் வலைபக்கத்தில் உங்களுடைய புதிய பதிவுகளை பார்பதர்க்காகவே தினமும் விசிட் பண்ணுவேன் ப்ளுபேர்ரீஸ் மேச்சாக ப்ளூ டிரஸ் சூப்பர்...!!!! எல்லாவற்றை பார்க்கிலும் அவள் சொன்னாள், அவள் சரிஎன்றால் என்று அக்க்ஷதாவை மிகவும் நீங்கள் செய்கிற ஒருஒரு காரியங்களும் நிச்சயம் அவள் பெரிய பெண் ஆனவுடன் உங்களை கனம் பண்ணுகிற மகளாக வளர்வாள் என்பதில் சந்தேகமே இல்லை. May God bless ur family ...!

Pushpa said...

Berries look fresh and delicious.Fruit picking is so much fun time together.

Related Posts Plugin for WordPress, Blogger...