பிஷ் கட்லட் - Fish Cutletsஎளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக்…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்க கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :
         Fish Fillets (முள் இல்லாத மீன் துண்டுகள்) – 2
·         Dry Mashed Potato Mix( உருளை கிழங்கு) – 2 கப்
·         கொத்தமல்லி - சிறிதளவு
·         உப்பு, எண்ணெய் – சிறிதளவு

கவனிக்க:
இதில் நான் Store Bought Ready  to Make Mashed Potatoes பயன்படுத்து இருக்கின்றேன். அதற்கு பதிலாக வேகவைத்த உருளை கிழங்கினை பயன்படுத்தி கொள்ளலாம்.

வதக்கி கொள்ள:
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – சிறிதளவு
·         பூண்டு – 10 பல்
·         வெங்காயம் – 1
·         குடைமிளகாய் – 1
·         பச்சைமிளகாய் - 2

செய்முறை :
·         பூண்டு + வெங்காயம் + குடைமிளகாய் + பச்சைமிளகாயினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

·         மீனை வேகவைத்து கொண்டு உதிர்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பூண்டு + வெங்காயம், பச்சைமிளகாய் + குடைமிளகாய் என ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·         வதக்கிய பொருட்கள் + கொத்தமல்லி + தேவையான அளவு உப்பு + உதிர்த்த மீன் + Mashed Potato Mix + 1 மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.


·         சிறிய சிறிய கட்லடுகளாக தட்டி கொண்டு அவனில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும்.


·         அவனை 400 Fயில் Broil Modeயில் மூற்சூடு செய்யவும். கட்லடுகளை அவனில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         ட்ரேயினை வெளியில் எடுத்து கட்லடுகளை திருப்பிவிட்டு சிறிது எண்ணெய் ஸ்ப்ரே செய்து மேலும் 6 – 8 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய கட்லட்.

கவனிக்க:
கண்டிப்பாக் முள் இல்லாத மீன்களை பயன்படுத்தவும். இதில் நான் பயன்படுத்து இருப்பது Cod Fish.

Tilapia, Salmon, Tuna, Cat Fish, Cod Fish என எந்த மீன் வகைகளையும் பயன்படுத்தி செய்யலாம்.

அதே மாதிரி காரத்திற்கு வெரும் பச்சைமிளகாய் மட்டுமே பயன்படுத்து இருக்கின்றேன்…

Ready Made Mashed Potato Mixயிற்கு பதிலாக வேகவைத்து மசித்த உருளைகிழங்கினை பயன்படுத்து கொள்ளவும்.


21 comments:

இமா said...

என்ன!! உங்க வீட்ல யாருக்காச்சும் பர்த்டேயா!! இப்பிடி போட்டு வாயூற வைக்கிறீங்க.

நல்ல குறிப்பு. படங்களும் க்ளியரா இருக்கு.

நட்புடன் ஜமால் said...

Fish my fav ...

will inform to try

S.Menaga said...

என்ன கீதா இது கட்லட் வாரமா?? சூப்பரா இருக்கு...

athira said...

கட்லட் கட்லட்டாகப் போட்டுக் கலக்குறீங்க கீதா... கண்ணுபடப்போகுது.

Mahes said...

Wow, very nice!

Vimitha Anand said...

Yummy one dear... Looks so tempting... Konjam kudungalen :(

மகி said...

/பார்த்துவிட்டு உங்கள் கருத்தினைத் தெரிவிக்கவும்/ம்ம்ம்..பார்த்தாச்சு,நல்லா அழகா இருக்கு கட்லட்! ;) :)

Pushpa said...

Delicious fish cutlets.

Pavithra said...

THis looks soooooo good .. baked to perfection. Eventhough i don't eat fish..i am too tempted seeing this nice golden patties.

Shanavi said...

I'm so tempted to this fish patties and also it's baked..Sooo cool.Enakum konjam vendum

கவி அழகன் said...

wow i am crying

ஸாதிகா said...

அட..உருளைக்கிழங்கெல்லாம் சேர்த்து இப்படி பொன்னிறத்தில் அவனில் அருமையாக செய்து காட்டிவிட்டீர்களே பிஷ் கட்லட்டை.அவசியம் இந்த முறையில் செய்து பார்க்கவேண்டும்.

சசிகுமார் said...

என்னது மீன்ல கட்லேட்டா புதுசா இருக்கே வீட்ல சொல்லிட வேண்டியது தான் தேங்க்ஸ் அக்கா

வேலன். said...

எனக்கும் ஜமாலுக்கும் ஒரு பார்சல் அனுப்பிவிடுங்கள்...
படங்களும் படைப்புகளும் அருமை...
வாழ்க வளமுடன்.
வேலன்.

GEETHA ACHAL said...

நன்றி இமா..வீட்டில் யாருக்கும் இப்பொழுது பிறந்தாள் கிடையாது...சும்மா...ஈவினிங் ஸ்நாக் செய்யும் பொழுது எடுத்த சில படங்கள் இவை...

நன்றி ஜமால் அண்ணா...கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி மேனகா...

நன்றி அதிரா...

நன்றி மகேஷ....

GEETHA ACHAL said...

நன்றி விமிதா...உங்களுக்கு இல்லாமலா...எங்க வீட்டிற்கு வாங்க...

நன்றி மகி...

நன்றி புஷ்பா..

நன்றி பவித்ரா...ரொம்ப சந்தோசம்...

நன்றி ஷனாவி...எப்பொழுது எங்க வீட்டிற்கு வரிங்க என்று சொல்லுங்க...

GEETHA ACHAL said...

நன்றி கவி..

நன்றி ஸாதிகா அக்கா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி சசி...கண்டிப்பாக சாப்பிட்டு பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லனும்...

நன்றி வேலன்..உங்களுக்கும் ஜமால் அண்ணாவிற்கும் இல்லாமலா..ரொம்ப நன்றி....

Balu Musiri said...

it's really very nice to see and eat.thank you Geetha sister

sasi said...

Hai Geetha how to cook fish for cutlet?

sasi said...

Hai geetha looking yummy fish cutlet... but one doubt, am beginner in cooking, so how to cook fish for cutlet

GEETHA ACHAL said...

நன்றி சசி .
நீங்கள் விரும்பினால் மீன் துண்டுகளை ஆவியில் வேகவைத்து கொள்ளலாம். (Steam cooking...)

இல்லை எனில், மீன் துண்டுகள் தண்ணீரில் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அதனை சுமார் 10 - 12 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளலாம். (சுறா புட்டு குறிப்பினை பாருங்க...) அதில் எப்படி வேகவைப்பது என்று இருக்கும்.

Link to that recipe,
http://geethaachalrecipe.blogspot.ca/2009/08/fish-puttu.html

Related Posts Plugin for WordPress, Blogger...