Vacation - Virginia Beach - Part 1
நாங்கள் Summer Vacationயிற்காக ஒரு வாரமாக வெளியில் சென்றதால் ப்ளாக் பக்கமே வரமுடியவில்லை…
இந்த முறை அக்ஷதாவிற்கு பிடித்தமான Beachயிற்கு போகலாம் என்று முடிவு செய்து இடத்தினையும் தேர்வு செய்யவே 1 வாரத்திற்கு மேலாகவிட்டது….கடைசியில் Virginia Beach போகலாம் என்று முடிவு செய்தோம்….Weekendயிற்கு மட்டும் எங்களுடைய நண்பர்கள் எங்களுடன் Beachயிற்கு வருவதாக Plan போட்டோம்…எங்களுக்கு சுமார் 12 மணி நேரம் Driving எடுக்கும் என்பதால் இடை இடையே பார்க்க வேண்டிய இடங்களையும் Listயில் சேர்த்து கொண்டோம்.
முதலில் Virginia Beachயிற்கு சென்றோம்…மிகவும் அருமையான அழகான Beach…ரொம்ப சுத்தமாக இருந்தது...இந்த இடத்தில் Best Sand Beach இருப்பதாக கூறினர்….
ஒவ்வொரு தெருவும் கடல்கள் சம்மந்தமான பெயர்களை கொண்டு இருந்தது…. Atlantic St, Pacific St, Arctic St, Mediterranean st, Whale St, என்பது போல பல இருந்தன….(Pratheepa, Myself & Manjula)
குழந்தைகள் அனைவரும் நன்றாக விளையாடினாங்க…அக்ஷதாவிற்கு Sand Castle Beachயில் கட்டவேண்டும் என்பதாலே, அவளே வீட்டில் இருக்கும் அவளுடைய Beach Kitயினை அவளுடைய Dora பாகில் வைத்து கொண்டாள்…அக்ஷதா, ஹ்ர்ஷிதா பாப்பா & லயா பாப்பா முன்று பேரும் சேர்த்து நல்லா Enjoy செய்தாங்க… சுமார் 3 மணி நேரம் ஆகியும் கூட ஒருவருக்கும் Beachயில் இருந்து வர ஆசையே இல்லை…
இரவு Dinnerயிற்கு Captain George Seafood என்ற resturantயிற்கு சாப்பிட சென்றோம்…அப்பாடா…எவ்வளவு கூட்டம்…சுமார் 200யிற்கும் மேலாக Parking Space இருந்தும் எங்களுக்கு Parking செய்ய இடம் கிடைக்கவே நேரம் ஆகிவிட்டது….Seafood Buffet என்பதால் வெரும் Seafoods மட்டுமே இருந்தன…Alaskan Snow Crab Legs, Shrimps, Fish, Mussels, Oysters என்று அனைத்துமே சுமார் 70வதுற்கும் மேலான உணவுகள் இருந்தன…
அனைத்து உணவுகளும் Helathy Cooking முறையில் செய்து இருந்தாங்க…ஒரு சில உணவுகள் மட்டுமே Deep Fried….மற்றபடி அனைத்துமே Steamed, Sauteed, Broiled, Baked என்பது போல இருந்தது…..அனைவருக்கும் ரொம்ப பிடித்தது Crab Legs…மற்றபடி ஒவ்வொரு உணவுமே அருமையாக சாப்பிட சாப்பிட இன்னும் சாப்பிட வேண்டும் போலவே இருந்தது…Crab Soup, Crab Imperial, அப்பறம் Crab புட்டு போன்று ஒன்று ஸ்பைசியாக இருந்து…இது அனைத்துமே எனக்கு ரொம்ப பிடித்து இருந்து…
இதே மாதிரி குழந்தைகள் விரும்பும் விதமாக Mac n Cheese, Baked Potatoes, Mashed Potatoes, Fries மற்றும் 50யிற்கும் மேலான Dessertயுடன் இருந்தது…இது அனைத்திற்குமே ஒரு நபருக்கு 40$( Including Tax & Serives) ஆகியது…கண்டிப்பாக யாராவது Virginia Beach போகலாம் என்று Plan இருந்தால் இதனையும் உங்க listயில் சேர்த்து கொள்ளுங்க…
மறுநாள் Sunday, காலையில் Traffic அதிகம் இருக்காது, என்பதால் Chespeake Bay Bridge & Tunnelயிற்கு காரில் செல்லாம் என்று முடிவு செய்தோம்…இந்த Bridge, one of the “ Seven Wonders of Modern Engineering” என்பதால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஆசை…ரொம்ப அருமையான காலை நேர ride என்பதால் நிறைய பெரிய பெரிய கப்பல்கள் சென்று கொண்டு இருந்தன…குழந்தைகள் அனைவருக்கும் ரொம்ப சந்தோசம்…
அங்கே National Wild Life Refugee செண்டரிற்கு சென்றால் குழந்தைகளுக்கு கவரும் விதமாக நிறைய இருக்கும்…ஆமை முட்டை இடு்ம் இடத்திற்கு நம்மை கூட்டு கொண்டு செல்வாங்க…குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும்..
சுமார் 10 மணிக்கு Dolphin Watchயிற்கு சென்றோம்…..போன வருடம் Bostonயில் Whale Watchingயிற்கு கப்பலில் சென்ற பொழுது சுமார் 3 மணி நேரம் ஆகியும் ஒரு Whaleயினையும் காட்டாமல் கடைசியில் 4 – 5 Whaleயினை காட்டிவிட்டு கூப்பிட்டு கொண்டு வந்ததில் நாங்க Sea Sickஆகியது தான் மிச்சம்…எங்கே அது மாதிரி ஆகிவிடுமே என்ற ஒருவித பயத்திலேயே சென்றோம்….
கப்பல் ஆரம்பித்த அடுத்த 10 நிமிடங்களிலேயே நாங்க 4 – 5 Dolphinயினை பார்த்துவிட்டோம்…தொடர்ந்து பார்க்கும் இடங்களில் எல்லாமே Dolphin மயமாக இருந்தது…அவ்வளவு Dolphins…எங்களுக்கு ரொம்ப சந்தோசம்…சுமார் 40யிற்கும் மேலாக Dolphinsயினை பார்த்து இருப்போம்…
மதியம் Virginia Aquariumயிற்கு சென்றோம்…ரொம்ப நல்லா 2 மணி நேரம் போச்சு… ஆமையினை தொட்டு பார்த்த அக்ஷதா குட்டி …
இங்கே Stringray ஒரு வகை மீனினை தண்ணீரில் அனைவருகும் தொட்டு பார்க்கும் படியாக விட்டு இருந்தாங்க…ஏற்கனவே Florida, Sea Worldயில் பார்க்கும் பொழுதே கூட அக்ஷதாவிற்கு பிடிக்கவில்லை..தண்ணீரில் கைவிட்டால் கையினை நன்றாக கழுவவேண்டுமெ என்பதும் இன்னொரு காரணம் அவளுக்கு…கூட இவ பயங்க Hygenic இருக்க வேண்டும் என்று நினைப்பா…… ஹர்ஷிதா பாப்பா நல்லா Enjoy செய்தாள்…
மாலை நேரத்தில் Boardwalk – Beachயில் நடந்து செல்லாம் என்று முடிவு செய்தோம்…அப்பறம் அங்கே Family cycle Ride ரொம்ப Famous என்பதால் நாங்க ஒரு வண்டியினை வாடகையிற்கு எடுத்து கொண்டோம்…குழந்தைகள் உட்கார்த்து கொள்ள சைகிள் முன்பு இடம் தனியாக இருக்கும்…ரொம்ப நல்லா இருந்தது…
இங்கே Neptune – King of the Seaயிற்கு மிகவும் பெரிய சிலை ஒன்று வைக்கபட்டு இருக்கின்றது…. இரவு நேரத்தில் Fireworks நடந்தது….இரண்டு நாட்கள் ரொம்ப நன்றாக கழிந்தது…..
Subscribe to:
Post Comments (Atom)


சிற்றூண்டி – Breakfast
14 comments:
படங்களும்,பகிர்வு அருமை கீதா.
அதான் சில நாட்களாக நம்ம பக்கமே வரலையோ... இடங்களை சுத்தி காட்டியதற்கு மிக்க நன்றி
Very nice pictures and enjoyed reading it
good post... photos super
படங்கள் எல்லாமே கலக்கலாக இருக்கு கீதா... நீங்க முன்பு இருந்ததை விட இப்போ மாறியிருக்கிறீங்கபோல தெரியுது(முந்தின படம்).
ஆ.. சிப்பி சோகி எல்லாம் சாப்பிடத் தொடங்கிட்டீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்:))). பிளேட்டில தெரியுது...
நண்டூஊஊஊஊஊஊஊஉ, ஆஆஆஆஆஆஆஆஅ மை.... கலக்கல்...
Hope u guys had a great time... Nice pictures dear...
இந்த இரண்டு நாட்கள் நானும் உங்களுடன் சேர்ந்து ஊரை சுற்றி பார்த்து விட்டேன்:-)
படங்களுடன் பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி கீதா!
எல்லா படங்களும் அழகா இருக்கு கீதா .
எவ்ளோ பெரிய நண்டு !!! .சைக்கிள் ரைட் ரொம்ப பிடிச்சிருக்கு (கொஞ்சம் நம்மூர் ரிக்க்ஷா ஸ்டைலில்) .Thanks for sharing .
Nice clicks, glad to know you had a nice vacation.
Pic are fabulous. Vacations are always fun :)
Vardhini
Event: Fast food not Fat food
ippozhudhu ungalai mudhal muraiyaga paarkum vaipu kidaithadhu..Good to c u..Pics are good and njoy ..
Nice trip geetha......
போட்டோவும் படங்களும் கலக்கல் :-))
இது மாதிரி நடு நடுவே பயண குறிப்புகளும் போடுங்க :-)
Nice feeling and good images. happy vacation
Post a Comment