தயிரினை சூடுப்படுத்தி சாப்பிடலாமா????? - Can we Heat the Yogurt / Curd ?தயிரினை சாப்பிடுவது உடம்பிற்கு மிகவும் நல்லது…அதனால் கண்டிப்பாக அதுவும் முக்கியமாக வெயில் காலத்தில் தினமும் தயிர் அல்லது மோர் குடிப்பது நல்லது…

1 கப் தயிரில் சுமார் 150 கலோரிஸ் இருக்கின்றது. தயிரில் அதிக அளவு ப்ரோட்டின் (Protien) , கல்சியம் , Phosphorous, Vitamins இருக்கின்றது.

தயிரினை தினமும் சாப்பிட்டு வந்தால், கெட்ட கொழுப்பினை நீக்க உதவுக்கின்றது…அதனால் தினமும் சிறிதளவு சாப்பிடலாம்.

இதனை அளவாக எடுத்து கொண்டால் நல்லது….அல்லது மோராக குடிக்கலாம்..ஏன் என்றால் இதில் நிறைய கார்ப்ஸும் ( சக்கரை – Sugar) இருக்கின்றது…

எங்க வீட்டில் யாருக்காவது ஜுரம் அல்லது சளி இருந்தால் அம்மா தயிரினை தாளித்து கொடுப்பாங்க…(தாளிக்கும் பொழுது தயிரையும் அந்த கடாயிலே ஊற்றிவிடுவாங்க…தயிரும் கடாயில் 1 – 2 நிமிடங்கள் சூடிலே இருக்கும்.) இப்படி சாப்பிட்டால் தயிரினால் பாதிப்பு ஏற்பாடாது என்று சொல்லுவாங்க…

அதனை ஏன் இப்படி செய்றாங்க…என்று எல்லாம் கேட்க நினைத்தது கூட கிடையாது…இப்பொழுது தான் அது எல்லாம் எதற்கு என்று கேட்க தோனுது…

தயிரினை சூடுபடுத்துவதால் அதில் உள்ள, நம்முடைய உடலிற்கு தேவையான நல்ல பாக்டீரியாவினை அழித்துவிடுக்கின்றது

அதனால் எப்பொழுதுமே தயிரினை கொதிக்கவிட கூடாது…பொதுவாக தயிரினை எந்த ஒரு சமையலில் நாம் சேர்த்து கொண்டாலும் பாக்டீரியாக்கால் அழிந்துவிடுக்கின்றது….

தயிரினை எதாவது சமையலில் சேர்த்தால் கண்டிப்பாக அதில் உள்ள உடலினை காக்கும் நல்ல பாக்டீரியாஸ் அழிந்துவிடுக்கின்றது..ஆனால் உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்காமல் போய்விடுக்கின்றது…

அதனால் தான் சூடான சாதத்தில் தயிர் சேர்த்து சாப்பிட கூடாது…

தயிர் உரைய வெதவெதப்பான இடத்தில் வைத்தால் தான் சீக்கிரமாக தயிர் உரைந்துவிடும்…..ஆனால் அந்த வெதவெதப்பிற்கு அதிகமாக சூடு இருந்தால் கண்டிப்பாக தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து தயிர் நல்லா வராது.

Lactobacillus என்று ஒரு வகை பாக்டீரியா தான் நாம் அன்றாடம் எடுத்து  கொள்ளும் தயிரில் இருக்கின்றது. இந்த பாக்டீரியா 110 – 120F அளவில் தான் வாழும் & வளரும் …அதற்கு மேல் சூடு இருந்தால் கண்டிப்பாக அழிந்துவிடும்…அந்த தயிர் சாப்பிடுவது நல்லதும் அல்ல….

தயிரினை செய்ய எப்பொழுதும் பாலினை காய்ச்சி மிதமான சூடில் இருக்கும் பொழுது தான் தயிர் தோய்க்க வேண்டும். பாலினை காய்ச்சாமலும் செய்யலாம்..ஆனால் அவ்வளவு நன்றாக இருக்காது, நல்லதும் இல்லை..


பாலினை சாதரணமாகவே காய்ச்சாமல் வைத்தாலே அது புளிக்க ஆரம்பித்துவிடும்…ஆனால் அதனை சாப்பிட கூடாது..அது அதிக அளவு புளிப்பு சுவையுடன் உடலிற்கு தீங்கு விளவிக்ககூடும். அதில் நிறைய Acidity இருக்கின்றது…

பாலில் உள்ள Proteinயைவிட தயிரில் உள்ள புரோட்டின் எளிதில் ஜுரணமாகிவிடும். தயிரினை சாப்பிட்ட 1 மணி நேரத்தில் அது 90%யிற்கும் மேலாக ஜீரணமாகிவிடுக்கின்றது. ஆனால் பாலே 30% தான் ஜீரணம் ஆகின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றது…

அதனால், பால் ஜீரணம் செய்ய நிறைய நேரம் எடுப்பதால் பால் சாப்பிடுவதை விட தயிராக சாப்பிடுவது மிகவும் நல்லது… பாலினை தயிராக உரைய வைத்து சாப்பிடுவதால் எளிதில் ஜீரணம் செய்ய உதவுக்கின்றது. உடலிற்கும் நல்லது.

தயிரினை ரொம்பவும் புளிக்கவிடாமல் சாப்பிட்டால் நல்லது… பாலினை தயிராக மாற்றும் நல்ல பாக்டீரியாஸ் நம்முடைய குடலில் உருவாகும் நோய் கிருமிகளை அழிக்கின்றது. 

தயிரினை எப்பொழுதுமே அலுமினிம் பாத்திரத்தில் வைக்க கூடாது…அப்படி வைத்தால் தயிரில் உள்ள அசிடிட்டி பாத்திரத்துடன் நெகட்டிவாக செயல்படும்…அதனால் இதில் கவனம் தேவை.


தினமும், தயிர் அல்லது மோரினை உணவில் சேர்த்து கொள்ளுங்க..ஆனால் சூடாக இருக்கும் உணவு சமையல் முறையில் முடிந்த அளவு சேர்க்க வேண்டாமே…. 

28 comments:

Anonymous said...

Thanks for sharing. I use curd to make briyani.

Chitra said...

தயிர் சாப்பிடுவதினால் என்ன பயன் - எப்படி சாப்பிட வேண்டும் - எப்படி சாப்பிட கூடாது - என்று நன்றாக விளக்கி சொல்லி இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றிங்க.

நிரூபன் said...

தயிர் பற்றிய பயனுள்ள குறிப்புக்களோடு, தயிர் அதிகமாகப் புளிப்பதால் எம் உடலில் ஏற்படும் மருத்துவ ரீதியான பாதிப்பினையும் விளக்கியிருக்கிறீங்க.
பயனுள்ள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தேவையான பதிவு.

Lakshmi said...

தயிரை சூடு படுத்தக்கூடாது என்பது சரிதான். ஆனா மோர்க்குழம்பு செய்யும்போது கொதிக்க விட்டுதானே
பண்ண வேண்டி இருக்கு.

RAKS KITCHEN said...

Very very informative post geetha,thanks a lot for sharing this,because i too had always wondered why people say dont add it to hot rice,some even said its cancerous!! Now I know the real reason!! THanks to you! :)

நட்புடன் ஜமால் said...

ஆஹா! நான் சுட வெச்சி தான் சாப்பிட்டுகிட்டு இருந்தேன் ...

நன்றி பகிர்வுக்கு ...

Vardhini said...

Useful info Geetha. Thx.

Vardhini
Check out my 100th post giveaway

ChitraKrishna said...

மிகவும் பயனுள்ள பதிவு கீதா.....

athira said...

நல்ல தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க கீதா.

Padhu said...

Nice information .But normally we use curd in so many preparations like mor kuzhambu,avial etc isn't it??

Jay said...

thanks for the interesting information geetha..
lovely post..:)
Tasty Appetite

GEETHA ACHAL said...

நன்றி அனாமிகா...நானும் சில உணவுகளில் தயிர் சேர்த்து சமைப்பேன்...ஆனாலும் இப்பொழுது எல்லாம் குறைத்துவிட்டு வருகிறேன்...

நன்றி சித்ரா...ரொம்ப நாளாகவே draftயிஒல் இருந்த பதிவினை இன்று தான் எழுத வேண்டும் என்று எண்ணம் வந்தது...

நன்றி நிரூபன்...

நன்றி லஷ்மி அம்மா...ஆமாம் மோர்க்குழம்பு செய்யும்போது கொதிக்கவிட்டு தான் செய்வோம்...

பெரும்பாலும் தயிரினை சூடான சமையலில் சேர்பத்தினை தவிர்ப்பது மிகவும் நல்லது... இங்கு உள்ள ஒரு ஆங்கில Tv Channels, தயிரினை பற்றி சில மாதங்களுக்கு முன் சொல்லி இருந்தாங்க..

அதில் தயிரினை சூடான சமையலில் பயன்படுத்தினால் நிறைய பின்விளைவுகள் வரும் என்று சொன்னாங்க...

அதில் முக்கியமாக, தயிர் சேர்த்து செய்த சூடான உணவினை அடுத்த வேலைக்கும் என்று அதிகமாக செய்து வைத்து கொண்டு சாப்பிட கூடாது என்று சொன்னாங்க...அதனாலே கூட எப்பாவது தயிரினை உணவில் சேர்த்து சமைப்பேன்.

GEETHA ACHAL said...

நன்றி ராஜி...ஆமாம் ராஜி தயிரினை அதிக அளவில் சூடான உணவினை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நிறைய பிரச்சனைகள் வரும்...

நன்றி ஜமால் அண்ணா..

நன்றி வர்தினி...

நன்றி சித்ரா..

GEETHA ACHAL said...

நன்றி அதிரா..

நன்றி பது...தயிர் உபயோகித்து செய்த உணவினை மதியமே சாப்பிட்டு முடித்துவிடுவது நல்லது.

அதே மாதிரி மறுநாள் வைத்து சாப்பிடாவோ அல்லது இரவு சமயத்தில் சாப்பிடுவதும் நல்லது அல்ல.

S.Menaga said...

தயிரினை எப்படி,எப்போ,ஏன் சாப்பிடனும்னு அழகா சொல்லிருக்கீங்க,நல்லதொரு பதிவு,பகிர்வுக்கு நன்றி கீதா!!

எப்போழுதும் மோர் குழம்பு செய்யும் போது குழம்பினை கொதிக்கவிடக்கூடாது,சுவை மாறிவிடும்.குழம்பு நுரைவரும் போது இறக்கிவிடனும்.

அவியலுக்கு தயிர் சேர்க்கும்போது,அவியல் 3/4 பதம் ஆறியதும்தான் கலக்க வேண்டும்....

சுபத்ரா said...

ஐயோ.. குட்டிக் குட்டியா தயிர் பற்றி எவ்ளோ இன்பர்மேஷன்! எல்லாமே மிக முக்கியமானவை!
புளித்த தயிரைச் சாப்பிடக்கூடாது..
சுடுசாதத்தில் தயிரைப் பிசைந்து சாப்பிடக்கூடாது..
போல..
பெப்டிக் அல்சருக்குத் தயிர் நல்லது என யாரோ கூற, மிகப் புளித்த தயிரைத் தினமும் சாப்பிட்டு வந்தது எவ்வளவு அசிடிக் தன்மையை அளித்திருக்கும் என இப்பொழுது தான் புரிகிறது. தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்ல வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கீதாக்கா!

Premalatha Aravindhan said...

wow this very useful info,never know few things before and this post will help sure...

Krithi's Kitchen said...

Nalla pagirvu.. Theriyadha sila thagavalum solli irukeenga.. nandri..

Shanavi said...

very useful n helpful info Geetha..thanx for sharing

ஜெய்லானி said...

பிரியாணி செய்யும்போது , மோர் குழம்பு செய்யும் போது , தயிசாதம் செய்யும் போதும் அதை சூடாக்கிதானே செய்யுறாங்க :-)

யோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு :-)

ஸாதிகா said...

அரிய தகவல்கள்,

Kalpana Sareesh said...

Excellent infos thanks u so much for sharing this.. many of my doubts cleared..

DRபாலா said...

பயனுள்ள தகவல்கள். தயிரில் உள்ள லேக்டோபேசில்லஸ் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் என்பது உபரி தகவல்.

ஹுஸைனம்மா said...

நல்ல தகவல்களை, டிவியில் பார்த்ததொட நில்லாம, மேலும் புதிய செய்திகளோடு பகிர்ந்ததுக்கு நன்றிப்பா.

Now Serving said...

that came out really well, Geetha! Love fresh homemade yogurt! nothing compares but Danon plain comes really close :)))

SouthIndianHome said...

Nice informative post Geetha
South Indian Recipes

vanathy said...

Very good information, Geetha. Thanks for sharing.

Kanchana Radhakrishnan said...

பகிர்வுக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...