ப்ரான் பிரியாணி - Prawn Biryaniசமைக்க தேவைப்படும் நேரம் – Cooking Time : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ப்ரான் – 20 - 25 (சுமார் 1/4 கிலோ)
·         இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
·         அரிசி – 2 கப்
·         தயிர் – 1 கப்
·         எண்ணெய் – சிறிதளவு
·         நெய் – 1 மேஜைகரண்டி

வெட்டி கொள்ள வேண்டிய பொருட்கள் :
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 2    
·         புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
·         பச்சைமிளகாய் – 2

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

அரிசி வேகவைக்கும் பொழுது சேர்க்க வேண்டியை :
·         நெய் – 1 மேஜை கரண்டி
·         பட்டை- 1
·         கிராம்பு – 2
·         ஏலக்காய்- 2 . பிரியாணி இலை
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         இறாலினை சுத்தம் செய்து அத்துடன் 1/4 கப் தயிர் + 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது + மஞ்சள் தூள்+ 1/2 தே.கரண்டி மிளகாய் தூள் + உப்பு சேர்த்து கலந்து சுமார் 10 – 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.


·         வெங்காயம் + தக்காளியினை வெட்டி கொள்ளவும். புதினா + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும். அரிசியினை சுமார் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி இறாலினை போட்டு முக்கால் பாகம் வேகும் வரை வதக்கவும். ( கவனிக்க: அகலமான கடாயில் செய்தால் நல்லது. அகலம் குறைவாக இருந்தால் இறாலில் இருந்து தண்ணீர் நிறைய வந்து சுவை மாறிவிடும்.)


·         2 – 3 நிமிடங்களில் இறால் வெந்துவிடும். அதனை தனியாக தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.


·         அதே கடாயில் வெங்காயம் போட்டு வதக்கவும்.


·         அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது + தக்காளி & பச்சைமிளகாய் + தயிர் + சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் + புதினா, கொத்தமல்லி என ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.


·         ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக் கொதிக்க ஆரம்பித்தவுடன், அரிசி வேகவைக்க கொடுத்துள்ள பொருட்கள் + ஊறவைத்த அரிசியினை சேர்த்து 90% வேகவைத்து கொண்டு சாதத்தினை தண்ணீர் இல்லாமல் வடிகட்டியினால் வடித்து கொள்ளவும்.


·         க்ரேவியில் இறாலினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.


·         இதன் மீது 90% வேகவைத்து வடித்து வைத்துள்ள சாதத்தினை பரவிட்டு தட்டு போட்டு மூடி சிறிய தீயில் 8 -  10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         தட்டினை உடனே திறக்காமல், 10 நிமிடங்கள் கழித்து திறந்து, பிரியாணியை கிளறிவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய பிரியாணி ரெடி. இதனை க்ரேவி, தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க:
இறாலினை நிறைய நேரம் வேகவிடவேண்டாம். முதலிலேயே வதக்கி கொள்வது நல்லது.

பிரியாணிக்கு சிறிய இறாலினை விட பெரிய இறால் தான் நன்றக இருக்கும்.


15 comments:

Chitra said...

simple and delicious recipe. Thank you so much.

சசிகுமார் said...

ம்ம்ம்ம் ஆஹா வாசனை இங்கு வரைக்கு அடிக்குது சூப்பர்.....

Vimitha Anand said...

Looks so delicious, masala-y n yummy

மனோ சாமிநாதன் said...

உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கீழ்க்கண்ட வலைத்தளத்தில் பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/

மாய உலகம் said...

ப்ரான் பிரியாணியின் படங்களையும் செய்விளக்கங்களையும் பார்க்கும் போது நாவில் எச்சில் ஊருகிறது...பதிவுக்கு நன்றி.... வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

கக்கு - மாணிக்கம் said...

நீண்ட நாள் கழித்து வந்த எனக்கு பிரமாதமான ரெசிபி.
வாழ்த்துக்கள்

Priya said...

Wow makes me hungry..

ChitraKrishna said...

படங்களும் ரெசிபியும் சூப்பரோ சூப்பர். பிண்ணி பெடலெடுக்குறீங்க!

நிரூபன் said...

முதன் முறையாக இறாலில் புரியாணி..வித்தியாசமான புதுமையான ரெசிப்பியாக இருக்கிறது.
பகிர்விற்கு நன்றி.

நிரூபன் said...

முதன் முறையாக என் வாழ் நாளில் இறால் புரியாணி பற்றிய ரெசிப்பியினைப் படிக்கிறேன்,
புதுமையான ரெசிப்பி பகிர்வு..

நன்றி அக்காச்சி,.

savitha ramesh said...

romba nalla irukku.prawn ,mudhalile vadhakkuvadhu, is new to me.will try it.How z the condition there in ur area? did Irene affect u much?

ஸ்வர்ணரேக்கா said...

உங்க குட்டி குட்டி டிப்ஸ் (பெரிய இறால், அகலமான பாத்திரம்..)நல்லாயிருக்கு..

ஸாதிகா said...

படமும் சூப்பர்.ரெஸிப்பியும் சூப்பர்.

Anonymous said...

wow nice akka ur receipes are superrrrrrrrr

Sangeetha said...

Romba thanks akka. Your prawn biryani recipe supero super I tried this today it turned out too good, all in our family loved it. Thank you once again akka...

Related Posts Plugin for WordPress, Blogger...