கோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sweet Pongal


எப்பொழுதும் கோதுமை ரவையில் உப்புமா, பொங்கல், இட்லி, தோசை என்று செய்யாமல் மாறுதலாக இந்த ஸ்வீட் செய்து பாருங்க….. எப்பொழுதும் இதில் கரெமல் கேசரி தான் செய்வேன்…நன்றாக இருக்கும்.

போனவாரம், பிரதீபாவுடன் பேசி கொண்டு இருக்கும் பொழுது இந்த ஸ்வீடினை செய்து ஹர்ஷிதா பாப்பாவிற்கு கொடுத்தாக சொன்னா…பாப்பாவிற்கு ரொம்ப பிடித்து இருக்கின்றது, அக்‌ஷதாவிற்கும் செய்து கொடுங்க என்று சொன்னா…உடனே செய்து பார்த்தேன்…எங்க வீட்டிலும் அனைவருக்கும் ரொம்ப பிடித்துவிட்டது….

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கோதுமை ரவை – 1 கப்
·         துறுவிய வெல்லம் – 1/2 கப்
·         பால் – 1 கப்
·         ஏலக்காய் – 1
·         நெய் – 1 மேஜை கரண்டி + 2 தே.கரண்டி
·         முந்திரி, திராட்சை – சிறிதளவு

செய்முறை :
·         கடாயில், துறுவிய வெல்லம் + 1 & 1/2 கப் தண்ணீர் சேர்த்து 4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.  அதன் பிறகு வெல்லம் தண்ணீரினை, மண் இல்லாமல் வடித்து கொள்ளவும்.

·         கடாயில் 2 தே.கரண்டி நெய் ஊற்றி கோதுமை ரவையினை வறுத்து கொள்ளவும். பாலினை தனியாக  காய்ச்சி கொள்ளவும்.


·         கோதுமை ரவையுடன் பால் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, வெல்லம் தண்ணீரினையும் சேர்த்து நன்றாக வேகவிடவும்.·         ஒரு கடாயில் நெயில் முந்திரி,திராட்சையினை வறுத்து கொள்ளவும். கடைசியில் பொங்கலில் முந்திரி , திராட்சையினை சேர்த்து கிளறிவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய சக்கரை பொங்கல் ரெடி.


கவனிக்க:
வெல்லத்தில் மண் இல்லை என்றால் அப்படியே ரவையுடன் சேர்த்து வேகவைத்து கொள்ளலாம். சில சமயம் வெல்லத்தில் மண், தூசி எல்லாம் இருக்கும். முதலில் கொதிக்கவிடுவதால் வெல்லம் கரைந்துவிடும். மண் , தூசி எல்லாம் வடித்துவிடலாம்.

கோதுமை ரவையினை முதலில் பாலிற்கு பதிலாக தண்ணீரிலும் வேகவிடலாம்.

இதே மாதிரி ரவையிலும் செய்யலாம். கோதுமை ரவையில் செய்ததால் தனிதனியாக அரிசியில் செய்தது மாதிரியே இருந்தது.

11 comments:

Vimitha Anand said...

Simple and yummy dear...

Radhika said...

Thanks for sharing such a perfectly healthy and nutritious recipe.


Event: Let's Cook – Subzis for Rotis

Avathaany said...

Thanks

S.Menaga said...

பார்க்கவே அருமையா இருக்கு,செய்து பார்க்கனும்...

Premalatha Aravindhan said...

Amazing recipe and delicious pongal...

Krithi's Kitchen said...

Wheat rava pongal.. you rock!

Shanavi said...

Ahhaa. Geetha, enaku romba pidikum indha pongal..Sooper ponga

ஸாதிகா said...

அருமையான பொங்கல்

Kalpana Sareesh said...

amazing dish hv never thought of making this ..

jeyashrisuresh said...

making pongal with wheat rava is new to me. quite healthy too

Sensible Vegetarian said...

Delicious and lovely one.

Related Posts Plugin for WordPress, Blogger...