சிக்கன் குருமா & பிரவுன் ரைஸ் தோசை - Chicken Kurma & Brown Rice Dosaiஎங்க வீட்டில் அம்மா எப்பொழுதும் செய்யும் குருமா இது…இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும். எந்த வித மசாலா பொருட்களும் சேர்க்காமல் எளிதில் செய்ய கூடிய குருமா…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சிக்கன் – 1/4 கிலோ
·         தேங்காய் – 1 சிறிய துண்டு (விரும்பினால்)
·         உப்பு – தேவையான அளவு
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

நசுக்கி கொள்ள :
·         இஞ்சி – சிறிய துண்டு
·         பூண்டு – 5 பல்

வதக்கி அரைத்து கொள்ள :
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய் – 3
·         மிளகு – 1 தே.கரண்டி (சுமார் 15)

கடைசியில் சேர்க்க :
·         கொத்தமல்லி – சிறிதளவு

முதலில் தாளிக்க:
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 1
·         சோம்பு – 1 தே.கரண்டி (அ) சோம்பு தூள்

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளியினை பெரிய பெரிய துண்டுகளாக் வெட்டி கொள்ளவும். இஞ்சி + பூண்டினை நன்றாக நசுக்கி கொள்ளவும். தேங்காயினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·         கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாய் + மிளகு சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வதக்கவும். இதனை சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.


·         பிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டினை சேர்த்து வதக்கவும்.


·         அதன் பிறகு, சிக்கனை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.


·         இத்துடன், அரைத்த விழுது + மஞ்சள் தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் வேகவிடவும்.


·         பிறகு, தேங்காய் விழுது + சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.


·         அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கிவிட்டு பிரஸர் குக்கரினை மூடிவிடவும். 2 விசில் வரும் வரை வேகவிடவும்.


·         சுமார் 5 - 6 நிமிடங்களில், குக்கரில் பிரஸர் அடங்கியதும் திறக்கவும்.
·         கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும். சுவையான எளிதில் செய்ய கூடிய குருமா ரெடி.


கவனிக்க:
இதில் எந்த வித தூள் வகைகளும் சேர்த்து கொள்ளவில்லை. அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல பச்சைமிளகாய் + மிளகினை சேர்த்து கொள்ளவும்.

சிக்கனிற்கு பதிலாக இதனை காய்கறிகள், பட்டாணி, கொண்டகடலை போன்றவைற்றிலும் செய்யலாம். நன்றாக இருக்கும்.

தேங்காய் விழுது சேர்க்காமல் செய்தாலும் நன்றாக இருக்கும்.


பிரவுன் ரைஸ் தோசை


ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 3 – 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பிரவுன் ரைஸ் – 3 கப்
·         இட்லி அரிசி – 1 கப்
·         உளுத்தமப்ருப்பு – 1 கப்
·         வெந்தயம் – 1 தே.கரண்டி

செய்முறை :
·         பிரவுன்ரைஸ் + இட்லி அரிசியினை ஒன்றாக சேர்த்து தண்ணீரில் குறைந்தது 3 – 4 மணிநேரம் ஊறவைக்கவும். அதே போல உளுத்தம்பருப்பு + வெந்தயம் சேர்த்து ஊறவைத்து கொள்ளவும்.

·         ஊறவைத்த உளுத்தம்பருப்பினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். அரிசியினையும் அரைத்து கொண்டு, இரண்டு மாவினையும் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.


·         மாவினை குறைந்தது 5 - 6 மணி நேரம் புளிக்கவிடவும். மாவு புளித்தவுடன்,தோசைகளாக சுடவும்.

·         சுவையான சத்தான தோசை ரெடி16 comments:

Pavithra said...

Looks super yumm:) Nice moru moru dosai :)

Vardhini said...

Brown rice dosa is new to me. Looks yummy Geetha.

Vardhini
Event: Herbs and Flowers - Garlic

Premalatha Aravindhan said...

Wounderful combo Geetha,clicks makes me hungry...pls pass the plate...

அம்பாளடியாள் said...

பிள்ளைகள்கூட வாயூறுகின்றனர் .படங்கள் சூப்பர்!....அருமையான சமையல்க் குறிப்புக்கு நன்றி சகோ .
முடிந்தால் என் தளத்தினை ஒருமுறை வந்து பாருங்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .............

ஜெய்லானி said...

டின்னருக்கு குடுத்தால் கணக்கே இல்லாமல் தோசை உள்ளே போய் விடும் போலிருக்கே :-)))


ம்...அப்புரம் அந்த தோசை தவா பெரிசா அழகா இருக்கு . எங்கே பிடிச்சீங்க , இந்தியாவிலா..??? :-))

கோவை நேரம் said...

தினம் ஒரு சமையல் ..அசத்தல்.அப்புறம் போட்டோ கிராபர் யாருங்க..ஹி..ஹி ..ஹி இவ்ளோ டேஸ்டா படம் பிடிச்சி இருக்காரு...

selvieam said...

geetha

can u please send me the photo of brown rice u use for idli and dosa. all ur receipes are too good.

selvieam said...

Geetha,

all ur receipes are too good. tried so many of ur receipes. can u please put the photo of brown rice u use for preparing dosa and ide

selvieam said...

geetha,

can u please put the photo of the brown rice u use for preparing idli and dosa. all ur receipes are too good. tried so many receipes. all came out nicely

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா இருக்கு கீதா , நான் கொண்டகடலை வச்சு செய்து பார்கிறேன்.

Krithi's Kitchen said...

Dosa and chicken kurma is an excellent combo!
Krithi's Kitchen
Event: Serve It - Steamed

angelin said...

இன்று ப்ரௌன் ரைஸ் தோசை செய்தேன் கீதா ,மிகவும் அருமையாக வந்தது /ஒரு சின்ன சந்தேகம் நீங்க சொன்னது சிவப்பு அரிசியோ என்று ஆனா நான்
(ASDA / I THINK IT IS WALMART IN U.S ) மார்கெட்ல வாங்கிய LONG GRAIN BROWN
அரிசியில் செய்தேன் .உடனே உங்களிடம் சொல்லவேண்டுமே .ரெசிப்பிக்கு நன்றி .

GEETHA ACHAL said...

நன்றி பவித்ரா..

நன்றி வர்தினி...

நன்றி ப்ரேமா...

நன்றி அம்பாளடியாள்...குழந்தைகளுக்கு செய்து கொடுங்க...

நன்றி ஜெய்லானி...இந்த தோசை தவா USயில் வாங்கியது தான்...ரொம்ப நாளாக பயன்படுத்துகிறேன்...நல்லா இருக்கின்றது.

GEETHA ACHAL said...

நன்றி கோவை நேரம்...போட்டோகிராபர் எல்லாம் நாங்க தான்..நன்றி...

நன்றி செல்வி...கண்டிப்பாக அடுத்த முறை பிரவுன் ரைஸின் படத்தினை சேர்க்கிறேன்...

நன்றி சாரு அக்கா...கண்டிப்பாக கொண்டக்கடலை வைத்து செய்து பாருங்க...ரொம்ப நல்லா இருக்கும்...

அம்மா சப்பாத்திக்கு கொண்டைக்கடலை வைத்து தான் இதனை செய்வாங்க...ரொம்ப நல்லா இருக்கும்.

நன்றி கீர்த்தி...

GEETHA ACHAL said...

நன்றி ஏஞ்சலின்..ரொம்ப சந்தோசம்..எங்க வீட்டில் இப்பொழுது எல்லாம் தோசை என்றால் அது பிரவுன் ரைஸ் தோசை என்ற அளவிற்கு ஆகிவிட்டது...

நானும் Walmartயில் தான் வாங்கினேன்..அதே தான்...ரொம்ப மகிழ்ச்சி...

VASANTHA said...

GEETHA AKKA KURUMA SUPERA IRUNTHATHU

Related Posts Plugin for WordPress, Blogger...