மைசூர் ரசம் - Mysore Rasamஅருசுவையில் இருந்து பார்த்து செய்தது…ரொம்ப அருமையாக இருந்தது…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

இந்த ரசத்தில் தேங்காய் துறுவலினை வறுத்து அரைத்து சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         தக்காளி – 2
·         பூண்டு – 6 பல் (தோலுடன்)
·         துவரம் பருப்பு – 1/4 கப்
·         புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·         கொத்தமல்லி - சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         பெருங்காயம் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         கடுகு – தாளிக்க

வறுத்து அரைத்து கொள்ள :
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         மிளகு – 1 தே.கரண்டி
·         தனியா – 1 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 3
·         துவரம் பருப்பு – 1 மேஜை கரண்டி
·         தேங்காய துறுவல் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·         துவரம் பருப்பினை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் வேகவைத்து கொள்ளவும். வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை அனைத்தும் ஒன்றாக சேர்த்து வறுத்து கொள்ளவும்.


·         இத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.


·         தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பிறகு பூண்டு + தக்காளியினை சேர்த்து 1 – 2 நிமிடங்கள் வதக்கவும்.·         புளியினை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் + புளி தண்ணீர் + வேகவைத்த துவரம் பருப்பு + தூள் வகைகள் என அனைத்தும் ஒன்றாக சேர்த்து 2 – 3 நிமிடங்கள் சிறிய தீயில் வேகவிடவும்.


·         கடைசியில் அரைத்து வைத்துள்ள கலவை + கொத்தமல்லி சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வைக்கவும். கொதி வரும் பொழுது அடுப்பினை அனைத்துவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய மைசூர் ரசம் ரெடி. இத்துடன் உருளை வருவல், கூட்டு , அப்பளம் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க:
புளி கரைசலிற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.

வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் தண்ணிர் சேர்க்காமல் அரைத்து கொண்டால், 2 – 3 தடவை பயன்படுத்தலாம்.

பூண்டினை தோலுடன் சேர்த்து நசுக்கினால் வசமாக நன்றாக இருக்கும்.

30 comments:

stalin said...

மைசூர் ரசம் சூப்பர் .......

Chitra said...

looks so yummy and flavourfull

Krithi's Kitchen said...

Indha rasam patti seyvaanga.. supera irukku unga pictures...
Krithi's Kitchen
Event: Serve It - Steamed

ஸாதிகா said...

ரொம்ப நாளா மைசூர் ரசம் செய்ய விருப்பம்.பகிர்வுக்கு நன்றி கீதா ஆச்சல்.

jeyashrisuresh said...

flavourful rasam,i love to have this any time of the day

Online Works For All said...

அருமையான தகவல்

100% Without Investment Data Entry Jobs !

FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

Premalatha Aravindhan said...

Delicious rasam geetha,luks so tempting...apadiye kudikalam pola irruku:)

S.Menaga said...

One of my fav rasam...looks yumm..

சசிகுமார் said...

ரசம் சூப்பர் அக்கா நன்றி

Nandini said...

Wow! The mysore rasam is hot and piping! Yum!

RAKS KITCHEN said...

Hot steaming rasam! Never tried this before...Looks so tempting Geetha!

Priya said...

Comforting and flavourful rasam..yumm!

Kalpana Sareesh said...

wow flavorful rasam saravan bhavan serves only this rasam .. i shd def try ur version.. so aromatic..

Sensible Vegetarian said...

Delicious one, looks very tempting and flavorful.

GEETHA ACHAL said...

நன்றி ஸ்டாலின்..

நன்றி சித்ரா..

நன்றி கீர்த்தி..

நன்றி ஸாதிகா அக்கா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி ஜெய்ஸ்ரீ....

GEETHA ACHAL said...

நன்றி ப்ரேமா...

நன்றி மேனகா..

நன்றி சசி...

நன்றி நந்தினி..

நன்றி ராஜி...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி கல்பனா..

நன்றி Sensible...

angelin said...

இன்னிக்கு உங்கள் ரெசிபி படியே செய்து விட்டேன் .ரொம்ப நல்லா டேஸ்டாக
வந்தது .ரசம் எப்பவும் என் மகளின் all time favorite .thanks geetha.

கோவை2தில்லி said...

அருமையான ரசம். பகிர்வுக்கு நன்றி.

Jay said...

healthy n irresistable..
Tasty Appetite

ஹுஸைனம்மா said...

வறுத்துப் பொடிப்பது+தேங்காய் தவிர, நான் செய்யும் ரசமும் இதே முறைதான். ஒரே ஒரு ஸ்டெப் மட்டும் மாத்தினா, மைசூர் ரசம்!! ஈஸியா இருக்குப்பா.

ஒரு சந்தேகம் (ஹி.. ஹி..) தேங்காய்த் துறுவலையும் வறுக்கனும்னு சொல்லிருக்கீங்க. ஆனா, மிக்ஸியில போட்டிருக்கிற தேங்காய் வறுத்த மாதிரியே இல்லியே? வெள்ளையாத் தெரியுது?

Kannan said...

ரசம் சூப்பர் .......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...ஆமாம் நானும் இதே மாதிரி தான் தேங்காய் இல்லாமல் செய்வோன்...ஆனால் தேங்காய் சேர்த்தவுடன் ரசத்தின் சுவையே மாறிவிடுக்கின்றது...சூப்பராக இருக்கும்...செய்து பாருங்க..

எல்லா பொருட்களும் வறுத்த எடுத்த பிறகு, தேங்காயினை சூடான கடாயில் அப்படியே போட்டுவிட்டேன்..நான் ரொம்ப வறுக்கவில்லை.. ஒரு வேலை Dry Coconut பயன்படுத்தி இருந்தால் கலர் மாறி இருக்கும்.

நான் Fresh Coconutயினை பயன்படுத்தி இருக்கின்றேன்.

ChitraKrishna said...

Tried this rasam today... came very good Geetha. Thanks...

MyKitchen Flavors-BonAppetit!. said...

Supergood Mysore Rasam Recipe.Luv it really.

apsara-illam said...

ஆஹா...,அசத்தலான மைசூர் ரசம் கீதா...... பார்க்கும்போதே ஆளை சாப்பிட சொல்லி சுண்டி இழுக்கின்றது.
நான் தேங்காயை மிளகு சீரகம் காய்ந்த மிளகாயுடன் சேர்த்து செய்ததுண்டு.இனி உங்கள் மெத்தட்டில் தான் செய்து பார்த்தடணும்.

அன்புடன்,
அப்சரா.

exercise4health said...

geetha, really yummy tasty rasam . i made it today. it was very tasty . migavum nandri. ungal recipes anaithum romba nandraga ullathu. last sunday araithu vaitha chicken kulambu seithen. taste romba nandraga vandhadhu.

ASP said...

I tried this at home today....came out yummy!! You brings variety to our Kitchen! Thanks a ton!

Anonymous said...

rasam super
devi

ஹேமா (HVL) said...

நேற்று எங்கள் வீட்டில் இந்த ரசம் செய்தேன். நன்றாக இருந்தது. நன்றி
-ஹேமா

Related Posts Plugin for WordPress, Blogger...