வாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Biryaniபொதுவாக அனைத்து வகை பிரியாணிகளிலும் வெங்காயம், தக்காளி இரண்டுமே இடம் பெறும். இந்த பிரியாணியில் தக்காளியினை சேர்த்து கொள்ள தேவையில்லை.

அதே மாதிரி, வெங்காயத்தினை நறுக்கி தான் பிரியாணியில் சேர்ப்போம். ஆனால் இதில் வெங்காயத்தினை அரைத்து சேர்க்க வேண்டும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி மலர்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 - 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சிக்கன் – 300 கிராம்
·         பாஸ்மதி அரிசி – 2 கப்
·         வெங்காயம் – 1 பெரியது
·         புதினா, கொத்தமல்லி – 1 கை அளவு நறுக்கியது
·         உப்பு – தேவையான அளவு
·         எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி

இஞ்சி பூண்டு விழுது அரைக்க :
·         இஞ்சி – 1 துண்டு
·         பூண்டு – 5 - 6 பல் (தோல் நீக்கியது)
·         பட்டை – 1 சிறிய துண்டு
·         கிராம்பு – 2
·         ஏலக்காய் – 1
·         சோம்பு – 1 தே.கரண்டி
·         பச்சைமிளகாய் - 2

சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க :
·         அரைத்த இஞ்சி பூண்டு விழுது
·         மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தயிர் – 1 கப்
·         உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் , நெய் - சிறிதளவு
·         பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை

செய்முறை :
·         வெங்காயத்தினை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதிற்கு தேவையான பொருட்கள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.


·         அரைத்த விழுது + சிக்கனில் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து சிக்கனுடன் கலந்து கொண்டு குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.


·         அரிசியினை தண்ணீரில் போட்டி 15 – 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பிறகு, அரைத்த வெங்காய விழுதினை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.


·         வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், ஊறவைத்துள்ள சிக்கன் கலவையினை இத்துடன் சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.


·         2 - 3 நிமிடங்கள் கழித்து புதினா + கொத்தமல்லியினை சேர்த்து கிளறி, தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
·         இத்துடன் 4 கப் தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் ஊறவைத்துள்ள அரிசியினை சேர்த்து சிறிய தீயில் வைத்து தட்டு போட்டு மூடி வேகவிடவும்.


·         பிரியாணி நன்றாக வெந்தவுடன், கடைசியில் எலுமிச்சை சாறினை பிழிந்து கிளறிவிடவும் . சுவையாக எளிதில் செய்ய கூடிய பிரியாணி ரெடி.


கவனிக்க :
இதில் தக்காளியினை சேர்க்க தேவையில்லை.

தண்ணீருக்கு பதிலாக சிக்கன் ஸ்டாக் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


16 comments:

S.Menaga said...

super biryani,bookmarked it..

மென்பொருள் பிரபு said...

Fantastic. Please add vote buttons so that i can vote.

Uma said...

Good one. I am fond of eating different biryani varieties. Thanks for sharing this.

Cheers,
Uma

Chitra said...

never heared of vaniyambadi biriyani b4...is surely different from the biriyani i do at home....will try till for lunch tmrw. thanks 4 this recipe

சசிகுமார் said...

wow!! thanks sis

இமா said...

ஹும்! சிக்கனா! அப்ப... டாட்டா பைபை. ;)

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html

ஸாதிகா said...

இஞ்சி பூண்டெல்லாம் ஃபிரெஷ் ஆக அரைத்து சேர்த்து ம்ம்ம்...கமகம பிரியாணிதான்.

Jaleela Kamal said...

mm எல்லா வகையான பிரியானியும் செஞ்சு பார்க்கிரீஙக போல

பிரியாணி என்றாலே ஒரு தனி சுவை தான்

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி பிரவு...

நன்றி உமா..

நன்றி சித்ரா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி சசி..

நன்றி இமா...

GEETHA ACHAL said...

நன்றி மாய உலகம்...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி ஜலிலா அக்கா...

ChitraKrishna said...

பார்க்கும் போதே பசிக்குது கீதா...

porselvi said...

அன்பு சகோதரிக்கு வணக்கம் நீங்கள் கூறியபடி செய்தேன் பிரியாணி மிகவும் அருமையாக இருதது மிகமிக நன்றி

b yoveal said...

super taste itha enga home la party ku presen pannunen sema super

GEETHA ACHAL said...

நன்றி பொற்செல்வி..

நன்றி yoveal...

ashvith I.A.S said...

Hello geetha,unga blog v.super.appadiyae pakuvama pannuringa.

Related Posts Plugin for WordPress, Blogger...