ஒட்ஸ் கோதுமை மாவு தோசை - Oats Wheat Flour Dosaiசமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ஒட்ஸ் – 1 கப்
·         கோதுமை மாவு – 1 கப்
·         இட்லி மாவு – 1 கப்
·         உப்பு – சிறிதளவு
·         எண்ணெய் – தோசைக்கு

செய்முறை :
ஒட்ஸினை ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ளவும். ஒட்ஸ் + கோதுமை மாவு +இட்லி மாவு + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

தோசை கல்லினை காயவைத்து மெல்லிய தோசைகள் சுடவும்.

சுவையான சத்தான தோசை ரெடி. இதனை சட்னி, சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
ஒட்ஸினை ஒன்றும் பாதியுமாக பொடித்து போட்டால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.

சுட்ட கத்திரிக்காய் சட்னி - Smoked Brinjal Chutney - Side Dish for Idly and Dosa


எப்பொழுதும் கத்திரிக்காயினை அவனில் வைத்து சுட்டு சமைத்து இருக்கின்றேன்…அப்படி கத்திரிக்காயினை அவனில் செய்ய சுமார் 30 – 40 நிமிடங்கள் ஆகும்…Tasteயும் வேற மாதிரி இருக்கும்….

திருமதி. ராஜி, கத்திரிக்காய் சட்னி பற்றி போட்டு இருந்தாங்க…அடுப்பில் directஆக சுட்டு செய்து இருந்தாங்க…. இப்படி directஆக கத்திரிக்காயினை அடுப்பில் சுட்டுவதால் இதன் சுவை மிகவும் அருமை…இட்லி , தோசை மற்றும் சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

இந்த வாரம் இங்கு பயங்கர குளிர்…சுமார் -20 F வரை சென்றது….. எங்க காருக்குள் எடுத்த போட்டோ... அப்பொழுது Outside temperature – 12F இருந்தது….

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கத்திரிக்காய் – 1 பெரியது
·         புளி – நெல்லிக்காய் அளவு
·         உப்பு – தேவையான அளவு

வறுத்து கொள்ள வேண்டிய பொருட்கள் :
·         காய்ந்த மிளகாய் – 6
·         உளுத்தம்பருப்பு – 2 மேஜை கரண்டி
·         தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·         பெருங்காயம் – சிறிய துண்டு
·         கடுகு – 1 தே.கரண்டி

கடைசியில் தாளிக்க :
·         நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, கருவேப்பில்லை – தாளிக்க

செய்முறை :
·         கத்திரிக்காயினை இரண்டாக வெட்டி கொண்டு அதில் க்ரில் செய்ய உதவும் குச்சிகளினை அல்லது Fork கொண்டு சொருக்கி நெருப்பில் காட்டவும்.

·         ஒவ்வொரு பக்கமும் அடிக்கடி திருப்பி விடவும். அப்பொழுது தான் அனைத்து பக்கமும் நன்றாக வெந்து இருக்கும்.

·         நன்றாக வெந்துவிட்டால் , கத்திரிக்காயினை தொடும் பொழுதே தோல் தனியாக வரும். அப்பொழுது கத்திரிக்காயினை சிறிது நேரம் ஆறவிடவும்.

·         வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுத்து கொள்ளவும்(எண்ணெய் தேவையில்லை). கத்திரிக்காயில் இருந்து தோலினை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

·         மிக்ஸியில் வறுத்த பொருட்களினை முதலில் போட்டு பொடித்து கொள்ளவும். பின்னர் கத்திரிக்காயினை போட்டு அரைத்து கொள்ளவும்.

·         கடைசியில் கடுகு + கருவேப்பில்லை போட்டு தாளித்து இதில் சேர்க்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க:
இந்த மாதிரி சுட்ட செய்யும் சட்னிற்கு , பெரிய கத்திரிக்காய் , நீட்டு கத்திரிக்காய் போன்றவை தான் நல்லா இருக்கும்.  குட்டி கத்திரிக்காயில் செய்தால் நிறைய வேலை எடுக்கும்.

அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல சேர்த்து கொள்ளவும். காரம் குறைவாக இருந்தால் இரண்டு காய்ந்தமிளகாய் + 1 தே.கரண்டி உளுத்தம்பருப்பினை வறுத்து தனியாக மிக்ஸியில் நன்றாக பொடித்து சட்னியுடன் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

அதே மாதிரி இந்த சட்னியில் காரம் அதிகமாக இருந்தால், கூடுதலாக நல்லெண்ணெய் சேர்த்து கொண்டால் காரம் இருக்காது.

சுட்ட கத்திரிக்காயில் இருந்து தோலினை நீக்குவது சிரமமாக இருந்தால், கத்தியோ அல்லது forkயோ வைத்து தோலினை இழுத்தால் எளிதில் தோல் வந்துவிடும்.


கத்திரிக்காயில் அதிகம் விதை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். 

தேங்காய் பால் ஜாமூன் - Coconut Milk Jamunஎப்பொழுதும் குலாப் ஜாமூனை சக்கரைபாகில் ஊறவைத்து சாப்பிடுவது போர் அடித்துவிட்டது….தேங்காய்பால் எடுத்து அதில் பொரித்த ஜாமூன்களை போட்டு ஊறவைத்தேன்…மிகவும் அருமையாக இருக்கின்றது…நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         குலாப் ஜாமூன் மிக்ஸ்(Gulab Jamum Mix) – 1 சிறியது
·         எண்ணெய் – பொரிக்க

தேங்காய் பால் செய்ய :
·         தேங்காய் -1 முடி
·         பால் – 1 கப்
·         சக்கரை – 1 கப்
·         ஏலக்காய் – 3

செய்முறை :
·         குலாப் ஜாமூன் மிக்ஸில் தேவையான அளவு பால்/தண்ணீர் சேர்த்து பிசைந்து கொண்டு விரும்பிய வடிவத்தில் உருட்டி கொள்ளவும்.

·         உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.


·         பாலினை சூடாக காய்ச்சி கொள்ளவும். சக்கரை + ஏலக்காயினை பொடித்து கொள்ளவும்.

·         தேங்காயினை சிறிய துண்டுகளாக வெட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு பால் எடுக்கவும். சுமார் 3 – 4 கப் பால் வருமாறு எடுத்து கொள்ளவும்.

·         தேங்காய் பால் + காய்ச்சிய பால் + சக்கரையினை சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         பொரித்த உருண்டைகளாக தேங்காய் பாலில் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.  சுவையான எளிதில் செய்ய கூடிய தேங்காய்ப்பால் ஜாமூன் ரெடி.

கவனிக்க :
டின் தேங்காய் பால் உபயோகித்தால் மைக்ரேவேவில் 2 – 3 நிமிடங்கள் வைத்து சூடு படுத்து கொள்ளவும்.

ஜாமூன்களை ஊற தேவையான அளவு தேங்காய்பால் வைத்து கொள்ளவும்.

சிக்கன் பீஸ் க்ரேவி - Chicken Peas Gravy


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சிக்கன் – 1/2 கிலோ
·         பச்சை பட்டாணி – 1 கப்

அரைத்து கொள்ள :
·         சின்ன வெங்காயம் – 10 - 15
·         இஞ்சி – 1 துண்டு
·         பூண்டு – 6- 8 பல்
·         பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 2
·         சோம்பு – 1 தே.கரண்டி
·         மிளகு – 1 தே.கரண்டி (விரும்பினால்)

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         சோம்பு – 1 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·         சிக்கனி சுத்தம் செய்து கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு + கருவேப்பில்லை சேர்த்து தாளித்த பிறகு அரைத்த விழுதினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

·         இத்துடன் தூள் வகைகள் சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கவும். பிறகு சிக்கன் + 1 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

·         சிக்கன் முக்கால்வாசி வெந்தபிறகு, பட்டாணியினை இதில் சேர்த்து நன்றாக வேகவிடவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய  க்ரேவி ரெடி. இதனை சாதம், இட்லி, தோசை, சாப்பாத்தி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

டயட் சில்லி காளிப்ளவர் - Diet Chilli Cauliflower


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         காளிப்ளவர் – 1
·         சில்லி சாஸ் – 2 தே.கரண்டி
·         இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·         லெமன் ஜூஸ் – 2 தே.கரண்டி
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள்:
·         கடலைமாவு – 1/4 கப்
·         பொடித்த ஒட்ஸ் மாவு – 1/4 கப்
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
காளிப்ளவரினை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

இத்துடன் சில்லி சாஸ் + இஞ்சி பூண்டு விழுது + எலுமிச்சை சாறு + தூள் வகைகள் + எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து 5 – 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

நாண்-ஸ்டிக் பனில், ஊற வைத்துள்ள காளிப்ளவரினை போட்டு அதிக தீயில் 2 நிமிடங்கள் வேகவிடவும். (தட்டு போட்டு மூட தேவையில்லை…)

பிறகு தீயினை குறைத்து கொள்ளவும். ஒருபக்கம் நன்றாக் சிவக்க ஆரம்பித்தவுடன், காளிப்ளவரினை கிளறிவிட்டு மேலும் சிறிது நேரம் வேகவிடவும்.

சுவையான எளிதில் செய்ய கூடிய சில்லி காளிப்ளவர் ரெடி.

கவனிக்க :
எலுமிச்சை சாறுக்கு பதிலாக தயிர் சேர்த்து கொள்ளலாம்.

காளிப்ளவரினை ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டினால் நன்றாக வெந்து இருக்கும். காய் வேகும் பொழுது தட்டு போட்டு மூடினால் காளிப்ளவர் ரொம்ப க்ரிஸ்பியாக இருக்காது…அதனால் தட்டு போட்டு மூட வேண்டாம்…

காளிப்ளவருடன் முதலிலேயே எண்ணெய் சேர்ப்பதால் எண்ணெய் அடிக்கடி சேர்க்க தேவையில்லை.

ஒட்ஸ் சேர்க்க விரும்பினால் சேர்க்கவும். இல்லையெனில், ஒட்ஸிற்கு பதிலாக கடலைமாவினை கூடுதலாக சேர்த்து கொள்ளவும்.

இதே மாதிரி அவனிலும் செய்யலாம். அவனில் செய்வது என்றால், 400Fயில் 20 – 30 நிமிடங்கள் வேகவைக்கவும். சுவையாக க்ரிஸ்பியாக இருக்கும்.

குட்டி கோஸ் மசாலா - ப்ரஸ்ஸில் ப்ரவுட்ஸ் - Brussels Sprouts Masalaசமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         குட்டி கோஸ் – 10 - 15
         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         சோம்பு – 1 தே.கரண்டி + 1 தே.கரண்டி
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

வறுத்து கொள்ள :
·         தேங்காய் துறுவல் – 1 மேஜை கரண்டி
·         கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         வேர்க்கடலை – 1 மேஜை கரண்டி
·         காய்ந்தமிளகாய் - 3
 
செய்முறை :
·         ப்ரஸில் ப்ரவுட்டிஸினை நான்கு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

·         தேங்காய் துறுவல் +கடலைப்பருப்பு + வேர்க்கடலையினை தனிதனியாக வறுத்து கொள்ளவும்.

·         வறுத்த பொருட்கள் + 1 தே.கரண்டி சோம்பு + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து வெங்காயம் + தக்காளியினை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கவும்.

·         இத்துடன் தூள் வகைகள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு வெட்டி வைத்துள்ள ப்ரஸில் ப்ரவுட்ஸ் + அரைத்த விழுது சேர்த்து கிளறிவிடவும்.

·         இதனை 5 – 10 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான குட்டிகோஸ் மசாலா ரெடி. இதனை சாதம், தயிர், தோசை , சாப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க:
விரும்பினால் இதனை சிறிது தண்ணீர் சேர்த்து க்ரேவியாக செய்து கொண்டால் சாதம், இட்லி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


பல்கர் பொங்கல் & கடலைமாவு சாம்பார் - Bulgur Pongal & Besan Flour Sambar / Kadalai Mavu Sambar


பல்கர் சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது…
சக்கரை அதிகம் உள்ளவர்கள் இதனை அடிக்கடி சாப்பிடுவதால் சக்கரை அளவு குறையும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பல்கர் – 1 கப்
·         பாசிப்பருப்பு – 1/2 கப்
·         உப்பு – தேவையான அளவு
கடைசியில் தாளித்து சேர்க்க :
·         நெய் – 1 மேஜை கரண்டி
·         சீரகம் – 1/2 தே.கரண்டி
·         மிளகு – 10
·         கருவேப்பில்லை – 5 இலை
·         முந்திரி பருப்பு – சிறிதளவு
·         பச்சைமிளகாய் – 2
·         இஞ்சி – சிறிய துண்டு

செய்முறை :
·         பாசிப்பருப்பினை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

·         பாசிப்பருப்பு நன்றாக வெந்தவுடன், அதில் பல்கரினை சேர்க்கவும்.

·         இத்துடன் தேவையான அளவு தண்ணீர் + உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

·         கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறவும்.

·         சுவையான சத்தான பல்கர் பொங்கல் ரெடி. இத்துடன் சாம்பார், சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கடலைமாவு சாம்பார்


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கடலைமாவு – 2 மேஜை கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, சீரகம் – தாளிக்க
·         உடைத்த உளுத்தம்பருப்பு – 1 தே.கரண்டி
·         வெந்தயம் – 1/4 தே.கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 1

கடைசியில் சேர்க்க :
·         கொத்தமல்லி – சிறிதளவு
·         பெருங்காயம் – ¼ தே.கரண்டி

செய்முறை :
·         கடலைமாவினை 2 – 3 கப் தண்ணீர் + உப்பு + மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

·         வெங்காயம் + தக்காளியினை நறுக்கி கொள்ளவும்.

·         கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பின் வெங்காயம் + தக்காளி ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

·         இத்துடன் கரைத்து வைத்து இருக்கின்ற கடலைமாவினை 8 - 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

·         கடைசியில் கொத்தமல்லி + பெருங்காயம் சேர்த்து கலக்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய சாம்பார் ரெடி. இதனை இட்லி, தோசை, பொங்கல், சாப்பாத்தி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
1 மேஜை கரண்டி கடலை மாவிற்கு 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். கொஞ்சம் கெட்டியாக ( Thick)ஆக விரும்பினால் தண்ணீரின் அளவினை குறைந்து கொள்ளவும்.

கடலைமாவு கரைசலினை கடாயில் சேர்க்கும் பொழுது கட்டிப்படாமல் இருக்க நன்றாக கிளறிவிடவும்.

வாழைக்காய் மசாலா வறுவல் - vazhakkai /Banana Masala Fryஅம்மாவின் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிகவும் நன்றி....என்னுடைய அம்மாவிடம் உங்கள் அனைவருடைய வாழ்த்துகளையும் சொன்னேன்...மிகவும் சந்தோசம்பட்டாங்க...நன்றி....

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         வாழைக்காய் – 1
சேர்க்க வேண்டிய பொருட்கள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/4 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/4 தே.கரண்டி
·         சீரகதூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகு தூள் – 1/4 தே.கரண்டி
·         சோம்பு தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – 1/2 தே.கரண்டி
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·         வாழைக்காயினை தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

·         வெட்டி வைத்துள்ள வாழைக்காயுடன் சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

·         கடாயினை காயவைத்து அதில் இந்த வாழைக்காயினை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பரப்பிவிடவும்.

·         இதனை தட்டு போட்டு முடி 6 - 8 நிமிடங்கள் வேகவிடவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய வாழைக்காய் மசாலா வறுவல் ரெடி.

கவனிக்க :
வாழைக்காயினை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வைத்தால் சீக்கிரமாகவும் நன்றாக வெந்து இருக்கும்.

இப்படி செய்வதால் வறுவல் நன்றாக இருக்கும்.

எண்ணெயினை முதலிலேயே வாழைக்காயில் தூள் வகைகள் சேர்க்கும் பொழுதே சேர்ப்பதால் கடாயில் தனியாக எண்ணெய் ஊற்ற தேவையில்லை.

இத்துடன் முதலிலேயே எண்ணெய் சேர்ப்பதால் எண்ணெயும் அதிகம் இழுக்காது.
Related Posts Plugin for WordPress, Blogger...