பேக்ட் வெங்காய சமோசா - Baked Onion Samosa - Venkaya Samosaஎளிதில் செய்ய கூடிய ஹெல்தியான மாலை நேர ஸ்நாக்…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

இந்த பேக்ட் சமோசா கண்டிப்பாக எண்ணெயில் பொரித்தது மாதிரியே இருக்கும்…நீங்களாக சொன்னால் தான் யாருமே இதனை அவனில் செய்தது என்று நம்புவாங்க…அந்த மாதிரி க்ரிஸ்பியாக நன்றாக இருந்தது..

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         Spring Rolls Sheet – 4
·         எண்ணெய் - சிறிதளவு

மசாலா செய்ய :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         வெங்காயம் – 1 பெரியது
·         சோம்பு தூள் – 1 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         வெங்காயத்தினை நீளமாக வெட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தூள் + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் சேர்த்துபிறகு வெட்டி வைத்துள்ள வெங்காயம் + உப்பினை சேர்த்து வதக்கவும்.


·         வெங்காயத்தினை சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும். (வெங்காயம் நன்றாக வதங்க தேவையில்லை. நன்றாக வதங்கினால் Stuffing நன்றாக இருக்காது.)


·         சமோசா ஷீடில் சிறிதளவு மசாலாவினை வைத்து சமோசாவினை உருட்டி கொள்ளவும்.


·         அவனை 375 Fயினை மூற்சூடு செய்து கொள்ளவும். சமோசாவினை அவனில் வைக்கும் ட்ரேயில் வைத்து அதன் மீது சிறிது எண்ணெயினை spray செய்து கொள்ளவும்.


·         அவனில் Broil Modeயில் 10 நிமிடங்கள் வேகவிடவும். ட்ரேயினை வெளியில் எடுத்து சமோசாவினை திருப்பிவிட்டு, மறுபடியும் அவனில் மேலும் 5 – 7 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய சமோசா ரெடி.


குறிப்பு :
சமோசாவினை அவனில் வைக்காமல் எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம்.

முதலிலேயே தூள் வகைகளை எண்ணெயில் சேர்ப்பதால் தூள் வாசனை அதிகம் வராமல் நன்றாக இருக்கும்.

அவரவர் விருப்பததிற்கு ஏற்றாற் போல Stuffing செய்து கொள்ளலாம்.

Berries Picking....எப்பொழுதும் Strawberry picking என்று போகாமல் இந்த முறை Blueberries Picking போகலாம் என்று நினைத்தோம்…ஏனா அக்‌ஷதாவிற்கு Strawberryவிட Blueberries தான் இப்போழுது ரொம்ப பிடித்து இருக்கின்றது…

இரண்டு மாதத்திற்கு முன் Libraryயில் இருந்தது, Doraவின் Level 1 Reading Bookயினை அவளுக்கு படிப்பதற்காக எடுத்து கொண்டு வந்தேன்…அதில் ஒரு புக்கில், டோரா அவளுடைய தந்தைக்கு Blueberry கேக் செய்து கொடுப்பா…அதனை எப்படி செய்வது என்ன அளவு என்று எல்லாம் அதில் எழுதி இருக்கும்…டோரா செய்வது மாதிரி இவளும் அவங்க daddyக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று அன்றே கடைக்கு போய் Blueberry வாங்கி கொண்டு வந்து செய்தாச்சு…

அப்பொழுதில் இருந்து எங்க வீட்டில் கேக் என்றால் அது Blueberry கேக் தான்…அவளுக்கு அது ரொம்ப பிடித்துவிட்டது… அதனால அக்‌ஷதா குட்டிக்காக Blueberry Picking  சென்றோம்…காலையில் சுமார் 10 மணிக்கு சென்றோம்..காலை நேரத்தில் சென்றால் தான் நல்லா இருக்கும்…


முதல் தடவையாக Blueberries தோட்டத்தினை பார்த்தில் மிகவும் சந்தோசம்…ஒவ்வொரு செடிகளிலும் எவ்வளவு பழங்கள்…பார்க்கவே ரொம்ப அழகாக இருந்தது…

அக்‌ஷதாவிற்கு ரொம்ப பிடித்துவிட்டது…கடைசி வர Blueberryயினை பறித்து போடுவதற்கான டாப்பவினை எங்களிடம் கொடுக்கவேயில்லை…அவளே கையில் பிடித்து கொண்டு பறித்தாள்… அதில என்ன பெரியவிஷயம் என்றால் பழத்தினை எப்படி பறிக்க வேண்டும், எந்த அளவு பழம் இருக்க வேண்டும்…என்று எல்லாம் நாங்க அவளுக்கு சொல்ல வேண்டாமாம்…அவளுக்கே தெரியுமாம்…என்றாள்…


பழங்களை பறிக்க பறிக்க நாம் அங்கேயே பழங்களை சாப்பிடலாம்… இந்த மாதிரி பெர்ரீஸ் எல்லாம் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும் என்பதால் பறித்து சாப்பிடுவாங்க… அங்கே உள்ள அனைத்து செடிகளில் உள்ள பழங்களுமே மிகவும் சுவையாக இருந்தது…


சுமார் 1 மணி நேரம் கழித்து பழங்களை பறித்துவிட்டாள்…அவளுக்கு ஒரே சந்தோசம்..எல்லாம் முடிந்தவுடன் அவ சொன்னது…வீட்டிற்கு போனவுடனே Daddyக்கு இதனை வைத்து கேக் செய்து கொடுக்க வேண்டும் என்றது தான்…

அந்த தோட்டதினை விட்டு வெளியே வந்தால் அங்கே Rasberry Picking இருந்தது…சரி…Raspberryயினை பார்க்காலம் என்று சென்றோம்…அக்‌ஷதாவும் சரி என்றதால் சென்றோம்…


முதலில் அவளும் மிகவும் ஆர்வமாக தான் இருந்தாள்…ஆனா Blueberry மாதிரி இல்லாமால் இந்த செடிகளில் உள்ளே உலவி பார்த்தால் தான் பழங்களை பார்க்க முடியும்..கூடவே செடிகள் சிறிது முசுமுசு என்று இருப்பதாலும்…கூடவே பழங்கள் சிறிது முட்களுடன் காணபட்டதால் அவ இந்த பக்கமே வரவில்லை …நானும் இவரும் தான் பறித்தோம்…


Blueberry பறிக்கும் பொழுதினைவிட Raspberry பறிக்கும் பொழுது வெளியில் தாக்கம் அதிகம் இருப்பதால் சீக்கிரமாகவே பறித்துவிட்டோம்…


வீட்டிற்கு வந்தவுடன் அக்‌ஷதாவே செய்த Blueberry Cakes…


எங்க Neighbour வீட்டில் இருக்கும் Mulberry மரங்கள்…பார்ப்பதற்கு Black Berries மாதிரியே இருக்கும்…ரொம்ப சுவையாக இருக்கும் இந்த பெர்ரிஸ்…


பிஷ் கட்லட் - Fish Cutletsஎளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக்…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்க கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :
         Fish Fillets (முள் இல்லாத மீன் துண்டுகள்) – 2
·         Dry Mashed Potato Mix( உருளை கிழங்கு) – 2 கப்
·         கொத்தமல்லி - சிறிதளவு
·         உப்பு, எண்ணெய் – சிறிதளவு

கவனிக்க:
இதில் நான் Store Bought Ready  to Make Mashed Potatoes பயன்படுத்து இருக்கின்றேன். அதற்கு பதிலாக வேகவைத்த உருளை கிழங்கினை பயன்படுத்தி கொள்ளலாம்.

வதக்கி கொள்ள:
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – சிறிதளவு
·         பூண்டு – 10 பல்
·         வெங்காயம் – 1
·         குடைமிளகாய் – 1
·         பச்சைமிளகாய் - 2

செய்முறை :
·         பூண்டு + வெங்காயம் + குடைமிளகாய் + பச்சைமிளகாயினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

·         மீனை வேகவைத்து கொண்டு உதிர்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பூண்டு + வெங்காயம், பச்சைமிளகாய் + குடைமிளகாய் என ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·         வதக்கிய பொருட்கள் + கொத்தமல்லி + தேவையான அளவு உப்பு + உதிர்த்த மீன் + Mashed Potato Mix + 1 மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.


·         சிறிய சிறிய கட்லடுகளாக தட்டி கொண்டு அவனில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும்.


·         அவனை 400 Fயில் Broil Modeயில் மூற்சூடு செய்யவும். கட்லடுகளை அவனில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         ட்ரேயினை வெளியில் எடுத்து கட்லடுகளை திருப்பிவிட்டு சிறிது எண்ணெய் ஸ்ப்ரே செய்து மேலும் 6 – 8 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய கட்லட்.

கவனிக்க:
கண்டிப்பாக் முள் இல்லாத மீன்களை பயன்படுத்தவும். இதில் நான் பயன்படுத்து இருப்பது Cod Fish.

Tilapia, Salmon, Tuna, Cat Fish, Cod Fish என எந்த மீன் வகைகளையும் பயன்படுத்தி செய்யலாம்.

அதே மாதிரி காரத்திற்கு வெரும் பச்சைமிளகாய் மட்டுமே பயன்படுத்து இருக்கின்றேன்…

Ready Made Mashed Potato Mixயிற்கு பதிலாக வேகவைத்து மசித்த உருளைகிழங்கினை பயன்படுத்து கொள்ளவும்.


ப்ரோக்கோலி சோயா கட்லட் - Broccoli Soya Cutletsப்ரோக்கோலியில் நிறைய விட்டமின்ஸ் ( Vitamins A , C & K) மற்றும் நார்சத்து( Dietary Fiber) இருக்கின்றது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ப்ரோக்கோலி – 1 கப் (பொடியாக நறுக்கியது)
·         சோயா – 20
·         ஒட்ஸ் மாவு – 1 கப்
·         மிளகாய் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு , எண்ணெய் – சிறிதளவு

செய்முறை :
·         ப்ரோக்கோலியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். சோயாவினை தண்ணீரி போட்டு வேகவிடவும். சோயா நன்றாக வெந்த பிறகு அதனை எடுத்து தண்ணீர் இல்லாமல் உதிர்த்து கொள்ளவும்.

·         ப்ரோக்கோலி + உதிர்த்த சோயா + ஒட்ஸ் மாவு + மிளகாய் தூள் + உப்பு + 1 தே.கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். சிறிய கட்லடுகளாக தட்டி கொள்ளவும்.


·         அவனை 400 F, Broil Modeயில் மூற்சூடு செய்து கொள்ளவும். அவனில் வைக்கும் ட்ரேயில் கட்லடுகளை அடுக்கி அவனில் 10 நிமிடங்கள் வேகவைக்கும்.


·         ட்ரேயினை வெளியில் எடுத்து கட்லடுகளை திருப்பி போட்டு மேலும் 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான சத்தான க்ரிஸ்பியான கட்லட் ரெடி.


குறிப்பு :
ஒட்ஸினை வறுத்து மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக பொடித்து கொண்டால் ஒட்ஸ் மாவு ரெடி.

ஒட்ஸ் மாவிற்கு பதிலாக அரிசி மாவும் சேர்த்து கொள்ளலாம்.

க்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutletsஉடல் எடையினை குறைக்க விரும்புவோர் பூசணிக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

பூசணிக்காயில் அதிக அளவு தண்ணீர் இருக்கின்றது. இதில் நிறைய விட்டமின்ஸ் மற்றும் நார்சத்து இருக்கின்றது. மிகவும் குறைந்த  Calories உள்ள காய்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         க்ரிட்ஸ் – 2 கப்
·         துறுவிய பூசிணிக்காய் – 1 கப்
·         உப்பு ,எண்ணெய் – சிறிதளவு

தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு
·         தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·         சீரகம் – 1 தே.கரண்டி

செய்முறை :
·         க்ரிட்ஸ் + துறுவிய பூசிணிக்காய் + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து(சுமார் 2 கப்) வேகவைத்து கொள்ளவும்.

·         தாளித்து சேர்க்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வேகவைத்த க்ரிட்ஸுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         அவனை 400 F யில் மூற்சூடு செய்து கொள்ளவும். சிறிய சிறிய வடைகளாக தட்டி அதன் மீது சிறிது எண்ணெய் Spray செய்து  ,அவன் ட்ரேயில் வைத்து கொள்ளவும்.


·         ட்ரேயினை அவனில் வைத்து 400Fயில் வைத்து 15 நிமிடங்கள் Broil Modeயில் வேகவிடவும்.


·         ட்ரேயினை வெளியில் எடுத்து வடைகளை திருப்பிவிட்டு திரும்பவும் எண்ணெயினை கட்லட்களின் மீது Spray செய்து மேலும் 5 – 8 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான சத்தான கட்லட் ரெடி.

கவனிக்க:
பூசிணிக்காயினை துறுவும் பொழுதே தண்ணீர் நிறைய இருக்கும். அதனால் க்ரிட்ஸ் வேகவைக்கும் பொழுது தண்ணீரின் அளவினை பார்த்து கொள்ளவும்.

க்ரிட்ஸினை போலவே கோதுமை ரவை, அரிசி ரவை போன்றவற்றிலும் செய்யலாம்.

Ovenயில் செய்யாமல் இதனை தோசை கல்லிலும் கட்லட் மாதிரி அல்லது எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம்.

Vacation -Virginia, Atlantic City & Sesame Place - Part 2


Virginia Beach அருகில் இருக்கும் Naticus, Norfolk என்ற இடத்தில், US Naval இருக்கின்றது. அதனால் இதனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று எண்ணம் இருந்தது….US Naval Cruiseயில் இரண்டு மணி நேரம் பயணம் தொடர்ந்தது…இந்த Cruiseயில் செல்லும் பொழுது Captain ஒவ்வொரு இடத்தினை பற்றியும், அங்கு நிற்க வைத்துள்ள கப்பலின் முழு விவரத்தினை பற்றியும் சொல்லி கொண்டே வந்தார்…


Hampton Roadயினை மையமாக கொண்டு அமைக்கபட்ட இந்த இடம் ஒரு வகையான Natural Harbour….இந்த Harbourயிற்கு வராத கப்பலே கிடையாதாம்…அவ்வளவு பெரியது…

நிறைய பெரிய பெரிய போர் கப்பல்கள், ஏற்றுமதி கப்பல்கள் என பல அணிவகுத்து நின்றன….பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது…ஒவ்வொரு கப்பலிலும் சுமார் 2000 பேர் வேலை செய்யும்  அளவிற்கு இருந்தன…


போன வருடம் கப்பலில் இருந்து Containerயினை ஏற்றவும் இறக்கும், புதிதாக Container Handling Crane, ஒன்றுக்கு இரண்டு மில்லியன் அமெரிக்கன் டாலிர் என்ற விலைக்கு வாங்கி இருக்கின்றாங்க…இதனால் 30% Handling Chargesயில் சேமிக்கின்றனர்..


இங்கே Naval Museum மற்றும் Warship Wisconsin - மிகவும் பெருமை வாய்ந்த போர்கப்பல் இருக்கின்றது…பல போர்களில் வெற்றியினை கண்டதால் அதனை Naval Museum அருகில் வைத்து இருக்கின்றாங்க….. Naval Museumமுடன் இதற்கும் Admission Ticket வாங்கி கொண்டால் உள்ளே சென்று பார்க்கலாம்….அக்‌ஷதாவிற்கு கப்பலின் உள்ளே செல்லும் பொழுது ரொம்ப சந்தோசம்…ஒவ்வொரு பகுதியாக பார்க்க மிகவும் பிரம்பிப்பாக இருந்தது…


மறுநாள் காலை Oceanic Drive செய்யலாம் என்பதால் Virginia Beach இருந்து Atlantic Cityயிற்கு கிளம்பினோம்…Virginiaவில் நிறைய Farms இருக்கின்றது…வழி எங்கும் மாக்காசோளம், பெர்ரிஸ், உருளை என்று நிறைய இருந்தன…அதே மாதிரி நிறைய இடங்களில் Farm Market இருந்தது….மிகவும் குறைந்த விலையில் காய்கறி மற்றும் பழங்கள் விற்கபட்டது…நாங்க ஒரு Potato Farmயில் நிறுத்தி உருளை செடிகளை பார்த்தோம்…அங்கேயே உருளை கிழங்குகளும் விற்பனை செய்யபட்டன்…10 பவுண்ட் உருளை கிழங்கு வெரும் 50 Cents தான்…


Delware – New Jersey Crossingயினை Cape Lewis – Cape Maye ,Oceanic Ferry Ride மூலமாக வந்தோம்….நாங்க New York – Vermontயிற்கு Fall சமயத்தில் Ferry Ride சென்று இருக்கின்றோம்…அக்‌ஷதாவிற்கு அது ரொம்ப பிடித்து இருந்து என்பதால் நேரம் ஆனாலும் சரி என்று இந்த Ferryயில் வந்தோம்….இந்த Ferryயில் சுமார் 100 கார்களினை ஏற்றி செல்லும் வசதி இருக்கின்றது…ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு நம்முடைய காருடன் கப்பலில் சென்று அடுத்த ஊரில் இறங்கி, ஊரினை சுற்றி பார்த்துவிட்டு திரும்பவும் இதே Ferryயில் திரும்பி வந்துவிடலாம்…


அங்கு இருந்து Atlantic Cityயிற்கு சென்றோம்… இதனை Las Vegas of the East  என்று சொல்லுவாங்க… முதலில் Las Vegas  தான் போகலாம் என்று ப்ளான் இருந்தது…ஆனா ஏற்கனவே நாங்க Minneapolisயில் இருக்கும் பொழுது அங்கு போய் இருக்கின்றோம்…கூடவே Eastயில் இருந்து Westயிற்கு போக குறைந்தது Flying Timeயே 7 – 8 மணி நேரம் ஆகும் என்பதால் ப்ளானினை கன்சல் செய்துவிட்டாச்சு….


இங்கு Las Vegas அளவிற்கு இருக்காது என்றாலும் Ocean ஒட்டி இருப்பதால் நன்றாகவே இருக்கும். இங்கு நிறைய Casinoஸ் இருக்கின்றது எனக்கு Trump Taj Mahalயில் தங்க வேண்டும் என்று ஆசை என்பதால் அங்கேயே ஹோட்டல் புக் செய்து கொண்டோம்……குழந்தைகள் கண்டிப்பாக Casinoயிற்கு வரகூடாது….அதனால் அக்‌ஷதாவினை இவரிடம் விட்டுவிட்டு நான் மட்டும் Casinoவில் விளையாடினேன்…


இங்கு Boardwalk ரொம்ப நல்லா இருந்தது…இந்த இடம் Night Lifeயில் மட்டும் மிகவும் சூப்பராக எங்கும் விளக்குகளின் அணிவகுப்பால் வெளிச்சமாக இருக்கும்…காலையில் எழுந்து பார்க்கும் பொழுது நேற்று இரவு பார்த்த இடமா இது என்பது போல இருக்கும்….


இதற்கு மறுநாள் அக்‌ஷதாவிற்காக Seaseme Place சென்றோம்…அவளுக்கும் மிகவும் சந்தோசம்…


சிப்போடேலே சிக்கன்(Chipotle Chicken)Chipotle – Mexican Grillயில் கிடைக்கும் சிக்கனை என்னுடைய வீட்டில் அதே செய்முறையில் நான் சமைத்தது.
சிக்கனை ஊறவைக்க : குறைந்தது 1 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ சிக்கன் (Boneless, Skinless Chicken Breast) – 2
§ Chipotle Peppers in Adobo Sauce – 4 Peppers
§ சீரக தூள் – 2 தே.கரண்டி
§ மிளகு – 10
§ சிவப்பு வெங்காயம்(Red Onion) – 1/2
§ பூண்டு – 4 பல்
§ எண்ணெய் – 2 மேஜை கரண்டி
§ உப்பு – தேவையான அளவு
செய்முறை :
v சிக்கனை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். வெங்காயாத்தினை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
v வெங்காயம் + சீரக தூள் + மிளகு + பூண்டு + Chipotle Peppers + எண்ணெய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
v இந்த விழுதினை சிக்கனுடன் சேர்த்து நன்றாக பிரட்டி 1 மணி நேரமாவது ஊறவிடவும்.
v ஒரு பெரிய அடிகணமான பனினை நன்றாக காயவிடவும். அதில் ஊறவைத்த சிக்கனை போட்டு கிரில் பண்ணுவது போல, அதிக தீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும்.

v சிக்கனை திருப்பிபோட்டு மேலும் வேகவிடவும்.

v சிக்கன் நன்றாக வெந்த பிறகு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி பரிமாறவும். சுவையான சிப்போடேலே சிக்கன் ரெடி.

கவனிக்க :
இந்த சிக்கனை சமைக்கும் பொழுது அதிக தீயில் வைத்து சமைக்கவும். அப்பொழுது தான் சுவையாக இருக்கும்.


Reposting it for my Friend.....

Vacation - Virginia Beach - Part 1

நாங்கள் Summer Vacationயிற்காக ஒரு வாரமாக வெளியில் சென்றதால் ப்ளாக் பக்கமே வரமுடியவில்லை…


இந்த முறை அக்‌ஷதாவிற்கு பிடித்தமான Beachயிற்கு போகலாம் என்று முடிவு செய்து இடத்தினையும் தேர்வு செய்யவே 1 வாரத்திற்கு மேலாகவிட்டது….கடைசியில் Virginia Beach போகலாம் என்று முடிவு செய்தோம்….Weekendயிற்கு மட்டும் எங்களுடைய நண்பர்கள் எங்களுடன் Beachயிற்கு வருவதாக Plan போட்டோம்…எங்களுக்கு சுமார் 12 மணி நேரம் Driving எடுக்கும் என்பதால் இடை இடையே பார்க்க வேண்டிய இடங்களையும் Listயில் சேர்த்து கொண்டோம். 

முதலில் Virginia Beachயிற்கு சென்றோம்…மிகவும் அருமையான அழகான Beach…ரொம்ப சுத்தமாக இருந்தது...இந்த இடத்தில் Best Sand Beach இருப்பதாக கூறினர்….

ஒவ்வொரு தெருவும் கடல்கள் சம்மந்தமான பெயர்களை கொண்டு இருந்தது…. Atlantic St, Pacific St, Arctic St, Mediterranean st, Whale St, என்பது போல பல இருந்தன….(Pratheepa, Myself & Manjula)


குழந்தைகள் அனைவரும் நன்றாக விளையாடினாங்க…அக்‌ஷதாவிற்கு Sand Castle Beachயில் கட்டவேண்டும் என்பதாலே, அவளே வீட்டில் இருக்கும் அவளுடைய Beach Kitயினை அவளுடைய Dora பாகில் வைத்து கொண்டாள்…அக்‌ஷதா, ஹ்ர்ஷிதா பாப்பா & லயா பாப்பா முன்று பேரும் சேர்த்து நல்லா Enjoy செய்தாங்க… சுமார் 3 மணி நேரம் ஆகியும் கூட ஒருவருக்கும் Beachயில் இருந்து வர ஆசையே இல்லை…

இரவு Dinnerயிற்கு Captain George Seafood என்ற resturantயிற்கு சாப்பிட சென்றோம்…அப்பாடா…எவ்வளவு கூட்டம்…சுமார் 200யிற்கும் மேலாக Parking Space இருந்தும் எங்களுக்கு Parking செய்ய இடம் கிடைக்கவே நேரம் ஆகிவிட்டது….Seafood Buffet என்பதால் வெரும் Seafoods மட்டுமே இருந்தன…Alaskan Snow Crab Legs, Shrimps, Fish, Mussels, Oysters என்று அனைத்துமே சுமார் 70வதுற்கும் மேலான உணவுகள் இருந்தன…


அனைத்து உணவுகளும் Helathy Cooking முறையில் செய்து இருந்தாங்க…ஒரு சில உணவுகள் மட்டுமே Deep Fried….மற்றபடி அனைத்துமே Steamed, Sauteed, Broiled, Baked என்பது போல இருந்தது…..அனைவருக்கும் ரொம்ப பிடித்தது Crab Legs…மற்றபடி ஒவ்வொரு உணவுமே அருமையாக சாப்பிட சாப்பிட இன்னும் சாப்பிட வேண்டும் போலவே இருந்தது…Crab Soup, Crab Imperial, அப்பறம் Crab புட்டு போன்று ஒன்று ஸ்பைசியாக இருந்து…இது அனைத்துமே எனக்கு ரொம்ப பிடித்து இருந்து…


இதே மாதிரி குழந்தைகள் விரும்பும் விதமாக Mac n Cheese, Baked Potatoes, Mashed Potatoes, Fries மற்றும் 50யிற்கும் மேலான Dessertயுடன் இருந்தது…இது அனைத்திற்குமே ஒரு நபருக்கு 40$( Including Tax & Serives) ஆகியது…கண்டிப்பாக யாராவது Virginia Beach போகலாம் என்று Plan இருந்தால் இதனையும் உங்க listயில் சேர்த்து கொள்ளுங்க…

மறுநாள் Sunday, காலையில் Traffic அதிகம் இருக்காது, என்பதால் Chespeake Bay Bridge & Tunnelயிற்கு காரில் செல்லாம் என்று முடிவு செய்தோம்…இந்த Bridge, one of the “ Seven Wonders of Modern Engineering” என்பதால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஆசை…ரொம்ப அருமையான காலை நேர ride என்பதால் நிறைய பெரிய பெரிய கப்பல்கள் சென்று கொண்டு இருந்தன…குழந்தைகள் அனைவருக்கும் ரொம்ப சந்தோசம்…


அங்கே National Wild Life Refugee செண்டரிற்கு சென்றால் குழந்தைகளுக்கு கவரும் விதமாக நிறைய இருக்கும்…ஆமை முட்டை இடு்ம் இடத்திற்கு நம்மை கூட்டு கொண்டு செல்வாங்க…குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும்..


சுமார் 10 மணிக்கு Dolphin Watchயிற்கு சென்றோம்…..போன வருடம் Bostonயில் Whale Watchingயிற்கு கப்பலில் சென்ற பொழுது சுமார் 3 மணி நேரம் ஆகியும் ஒரு Whaleயினையும் காட்டாமல் கடைசியில் 4 – 5 Whaleயினை காட்டிவிட்டு கூப்பிட்டு கொண்டு வந்ததில் நாங்க Sea Sickஆகியது தான் மிச்சம்…எங்கே அது மாதிரி ஆகிவிடுமே என்ற ஒருவித பயத்திலேயே சென்றோம்….


கப்பல் ஆரம்பித்த அடுத்த 10 நிமிடங்களிலேயே நாங்க 4 – 5 Dolphinயினை பார்த்துவிட்டோம்…தொடர்ந்து பார்க்கும் இடங்களில் எல்லாமே Dolphin மயமாக இருந்தது…அவ்வளவு Dolphins…எங்களுக்கு ரொம்ப சந்தோசம்…சுமார் 40யிற்கும் மேலாக Dolphinsயினை பார்த்து இருப்போம்…


மதியம் Virginia Aquariumயிற்கு சென்றோம்…ரொம்ப நல்லா 2 மணி நேரம் போச்சு… ஆமையினை தொட்டு பார்த்த அக்‌ஷதா குட்டி …


இங்கே Stringray ஒரு வகை மீனினை தண்ணீரில் அனைவருகும் தொட்டு பார்க்கும் படியாக விட்டு இருந்தாங்க…ஏற்கனவே Florida, Sea Worldயில் பார்க்கும் பொழுதே கூட அக்‌ஷதாவிற்கு பிடிக்கவில்லை..தண்ணீரில் கைவிட்டால் கையினை நன்றாக கழுவவேண்டுமெ என்பதும் இன்னொரு காரணம் அவளுக்கு…கூட இவ பயங்க Hygenic இருக்க வேண்டும் என்று நினைப்பா…… ஹர்ஷிதா பாப்பா நல்லா Enjoy செய்தாள்…

மாலை நேரத்தில் Boardwalk – Beachயில் நடந்து செல்லாம் என்று முடிவு செய்தோம்…அப்பறம் அங்கே Family cycle Ride ரொம்ப Famous என்பதால் நாங்க ஒரு வண்டியினை வாடகையிற்கு எடுத்து கொண்டோம்…குழந்தைகள் உட்கார்த்து கொள்ள சைகிள் முன்பு இடம் தனியாக இருக்கும்…ரொம்ப நல்லா இருந்தது…


இங்கே Neptune – King of the Seaயிற்கு மிகவும் பெரிய சிலை ஒன்று வைக்கபட்டு இருக்கின்றது…. இரவு நேரத்தில் Fireworks நடந்தது….இரண்டு நாட்கள் ரொம்ப நன்றாக கழிந்தது…..


Related Posts Plugin for WordPress, Blogger...