சௌ சௌ கட்லட் - Chow Chow Cutlets / Chayote Cutlets
Posted by
GEETHA ACHAL
at
Monday, September 26, 2011
Labels:
அவன் சமையல்(Oven Cooking),
கோதுமை-ராகி,
ஸ்நாக்ஸ்(Diet/ Non-diet Snacks)
சமைக்க தேவைப்படும்
நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
:
சௌ
சௌ – 1
·
கோதுமை
ரவை / ரவை – 2 கப்
·
உப்பு
– தேவையான அளவு
தாளித்து சேர்க்க
:
·
எண்ணெய்
– 1 மேஜை கரண்டி
·
கடுகு
+சீரகம் – தாளிக்க
·
உளுத்தம்பருப்பு
உடைத்தது – 1 தே.கரண்டி
·
தேங்காய்
துறுவல் – 1 மேஜை கரண்டி
·
கருவேப்பில்லை
– 5 இலை
செய்முறை :
·
சௌ
சௌயினை தோல் சீவி துறுவி கொள்ளவும். கோதுமை ரவை + துறுவிய சௌ சௌ தண்ணீருடன் + 1/2 கப்
தண்ணீர் + உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் மைக்ரோவேவில் வேகவைத்து கொள்ளவும்.
·
தாளிக்க
கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கலவையில் சேர்த்து கலக்கவும்.
·
அவனை
400Fயில் மூற்சூடு செய்யவும். அவனில் வைக்கும் ட்ரேயில் சிறிய சிறிய கட்லடுகளாக தட்டி
வைக்கவும் சுமார் 10 நிமிடங்கள் Broil Modeயில் வேகவிடவும்.
·
ஒரு
பக்கம் நன்றாக வெந்த பிறகு, ட்ரேயினை வெளியில் எடுத்து கட்லடுகளை திருப்பிவிட்டும்
சிறிது எண்ணெய் அதன் மீது ஸ்ப்ரே செய்து மேலும் 5 – 6 நிமிடங்கள் வேகவிடவும்.
·
சுவையான
சத்தான எளிதில் செய்ய கூடிய ஹெல்தியான கட்லட் ரெடி.
கவனிக்க:
சௌ சௌயினை துறுவிய பொழுது அத்துடன் வரும் தண்ணீரையும் சேர்த்து கொள்ளவும்.
சௌ சௌவினை போலவே பூசணிக்காய்
, சுரைக்காய் போன்றவற்றிலும் செய்யலாம்.
இதனை தோசை கல்லில் கூட
செய்யலாம்.
தலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Biryani
Posted by
GEETHA ACHAL
at
Sunday, September 25, 2011
Labels:
அசைவம்,
சாதம் வகைகள்,
பிரியாணி - Biryani,
ஹோட்டல் ஸ்டைல் - Hotel Style Cooking
பொதுவாக அனைத்து வகை பிரியாணியிலும்
வெங்காயம் + தக்காளியினை வெட்டி தான் சேர்ப்போம். ஆனால் இந்த பிரியாணியில் வெங்காயம் + தக்காளி + புதினா , கொத்தமல்லி என அனைத்தையுமே அரைத்து
தான் சேர்ப்போம்.
சிக்கன் / மட்டனை குறைந்தது 2 – 3 மணி நேரம் மசாலாவில் ஊறவைத்து செய்வதால்
கூடுதல் சுவையுடன் இருக்கும்.
இந்த பிரியாணியினை சீரக சம்பா அரிசியில் செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
மிதமான தீயில் ,ஒவ்வொரு பொருள் சேர்த்த
பிறகு நன்றாக வதக்கி செய்தால் கண்டிப்பாக இந்த பிரியாணி அருமையாக இருக்கும்.
நீங்களும் செய்து பார்த்துவிட்டு
உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி அனிஸ்...
சமைக்க தேவைப்படும்
நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
:
·
சிக்கன்
– 1/2 கிலோ
·
பஸ்மதி
அரிசி – 3 கப்
·
சீரகம்
தூள் – 1 மேஜை கரண்டி
·
தேங்காய்
பால் – 2 கப்
·
உப்பு
– தேவையான அளவு
தனி தனியாக அரைத்து
கொள்ள :
·
வெங்காயம்
– 1 பெரியது
·
தக்காளி
– 2 பெரியது
·
புதினா
+ கொத்தமல்லி – 1 கப் சுத்தம் செய்த இலைகள்
இஞ்சி பூண்டு
விழுது : (சுமார் 3 மேஜை கரண்டி)
·
இஞ்சி
– 1 துண்டு
·
பூண்டு
– 6 பல்
·
பட்டை
– 1
·
கிராம்பு
– 2
·
ஏலக்காய்
– 1
சிக்கனுடன் சேர்த்து
ஊறவைக்க :
·
அரைத்த
இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
·
மஞ்சள்
தூள் – 1 தே.கரண்டி
·
தனியா
தூள் – 1 தே.கரண்டி
·
மிளகாய்
தூள் – 1 தே.கரண்டி
·
தயிர்
– 1 கப்
·
எலுமிச்சை
சாறு – 1 மேஜை கரண்டி
·
உப்பு
– தேவையான அளவு
முதலில் தாளிக்க
:
·
எண்ணெய்
+ நெய் – சிறிதளவு
·
பட்டை,
கிராம்பு, ஏலக்காய் , பிரியாணி இலை
·
பச்சை
மிளகாய் – 4
செய்முறை :
·
சிக்கனை
நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதினை அரைத்து கொள்ளவும். சிக்கனுடன்
ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும்.
·
சிக்கனை
குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைத்தால் நன்றாக இருக்கும். ( சுமார் 2 – 3 மணி நேரம் ஊறவைக்கலாம்.)
·
வெங்காயம்
+ தக்காளி + புதினா கொத்தமல்லியினை தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
·
பாத்திரத்தில்
எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள
பொருட்களை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
·
இத்துடன்
வெங்காயம் விழுதினை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
·
வெங்காயம்
வதங்கியவுடன் அத்துடன் மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கிய பிறகு புதினா,
கொத்தமல்லி விழுதினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.
·
புதினா,
கொத்தமல்லி நன்றாக வதங்கி வாசனை மற்றும் கலர் மாறிய பிறகு, சீரக தூள் சேர்த்து மேலும்
1 நிமிடம் வதக்கவும்.
·
இத்துடன்
ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து 3 – 4 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.
·
அதன்
பிறகு, அரைத்து வைத்துள்ள தக்காளியினை சேர்த்த் தட்டு போட்டு மூடி நன்றாக வேகவிடவும்.
·
பாஸ்மதி
அரிசியினை கழுவி சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். (அதற்கு மேல் ஊறவைக்க தேவையில்லை.
)
·
சிக்கன்
வெந்த , எண்ணெய் பிரியும் பொழுது ஊறவைத்துள்ள அரிசியினை சேர்த்து கிளறிவிட்டு தட்டு
போட்டு மூடி 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.
(கவனிக்க : தண்ணீர் சேர்க்கவில்லை. சிக்கன் க்ரேவியிலே அரிசியினை சேர்க்கின்றோம்.)
·
2
– 3 நிமிடங்கள் கழித்து தேங்காய் பால் + 3 - 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு
, தட்டி போடு மூடி வேகவிடவும். (பிரஸர் குக்கரில் செய்வது என்றால், 1 விசில் வரும்
வரை வேகவிட்டால் போதும்.)
·
சுவையான
பிரியாணி ரெடி. இதனை க்ரேவி, தயிர் பச்சடி, முட்டையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
கவனிக்க :
அனைத்து பொருட்களை வதக்கும்
பொழுதும் மிதமான தீயில் (Medium Flame) வைத்தே சமைக்க வேண்டும்.
கொடுத்துள்ள அளவு சரியாக
இருக்கும்.
சிக்கனில் செய்வதினை விட
மட்டனில் செய்தால் சுவையாக இருக்கும்.
அரிசியினை நிறைய நேரம்
ஊறவைத்தால் சிக்கனுடன் சேர்த்து வறுக்கும் பொழுது உடைந்துவிடும் என்பதால் 10 நிமிடங்கள்
ஊறினால் போதும்.
வாழைக்காய் தேங்காய் வறுவல் - Vazhakkai Thenkai Varuval / Raw Banana Coconut Varuval
சமைக்க தேவைப்படும்
நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
:
·
வாழைக்காய்
– 1
·
வெங்காயம்
– 1
·
கருவேப்பில்லை
– 5 இலை
·
மஞ்சள்
தூள் – 1/4
·
உப்பு
– தேவையான அளவு
அரைத்து கொள்ள
:
·
தேங்காய்
– 2 துண்டுகள்
·
சோம்பு
– 1/4 தே.கரண்டி
·
சீரகம்
– 1/2 தே.கரண்டி
·
பூண்டு
– 4 பல்
·
காய்ந்த
மிளகாய் – 3
முதலில் தாளிக்க
:
·
எண்ணெய்
– 1 மேஜை கரண்டி
·
கடுகு,
உளுத்தம்பருப்பு – தாளிக்க
செய்முறை :
·
அரைக்க
கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டி மைய அரைத்து கொள்ளவும். வெங்காயம் + கருவேப்பில்லையினை
சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வாழைக்காயினை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
·
கடாயில்
எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் வெங்காயம்
+ கருவேப்பில்லையினை சேர்த்து வதக்கவும்.
·
இத்துடன்
அரைத்து வைத்துள்ள தேங்காய விழுது + மஞ்சள் தூள் + உப்பு சேர்க்கவும்.
·
அனைத்தும்
நன்றாக கிளறி 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.
·
நன்றாக
வதங்கியவுடன், வாழைக்காயினை சேர்த்து கிளறி மீதமான தீயில் தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
·
அடிக்கடி
கிளறிவிடாமல், 3 – 4 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறினால் போதும்.
·
சுவையான
எளிதில் செய்ய கூடிய வாழைக்காய் தேங்காய் வறுவல் ரெடி. இதனை கலந்த சாதம் வகைகளுடன்
சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
வெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney / Venkayam Pudina Chutney - Side Dish for Idly and Dosa
சமைக்க தேவைப்படும்
நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
:
·
வெங்காயம்
– 1 பெரியது
·
தக்காளி
– 1
·
புதினா
– 1 கைபிடி
·
கொத்தமல்லி
– சிறிதளவு
·
உப்பு
– தேவையான அளவு
முதலில் வறுத்து
அரைக்க :
·
எண்ணெய்
– 1 தே.கரண்டி
·
கடுகு
– தாளிக்க
·
உளுத்தம்பருப்பு
– 1 மேஜை கரண்டி
·
காய்ந்தமிளகாய்
– 3
·
தேங்காய்
– 2 – 3 துண்டு
·
புளி
– சிறிய நெல்லிக்காய் அளவு
கடைசியில் தாளிக்க
:
·
எண்ணெய்
– 1 தே.கரண்டி
·
கடுகு
+ பெருங்காயம் – தாளிக்க
·
கருவேப்பில்லை
– 4 இலை
செய்முறை :
·
வெங்காயம்
+ தக்காளியினை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். புதினா + கொத்தமல்லியினை சுத்தம்
செய்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தமபருப்பு + காய்ந்தமிளகாய்
சேர்த்து வறுத்து கொண்டு தனியாக வைக்கவும்.
·
அதே
கடாயில் வெங்காயம் + தக்காளியினை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியவுடன், கடைசியில்
புதினா + கொத்தமல்லி சேர்த்து மேலும் 1 நிமிடங்கள் வதக்கவும். இதனை சிறிது நேரம் ஆறவைத்து
கொள்ளவும்.
·
மிக்ஸியில்
முதலில் வறுத்த பொருட்கள் + தேங்காய் + புளியினை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
·
அரைத்த
கலவையுடன் வதக்கி வைத்துள்ள பொருட்களை + தேவையான அளவு உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து
கொரகொரவென அரைத்து கொள்ளவும். (மிகவும் மைய அரைக்க வேண்டாம்.)
·
கடைசியில்
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான சத்தான சட்னி
ரெடி.
கவனிக்க:
முதலில் வறுத்த பொருட்களை
மிக்ஸியில் போட்டு அரைத்த பிறகு வதக்கிய பொருட்களை சேர்த்து அரைக்கவும். அப்பொழுதும்
தான் சட்னி சுவையாக இருக்கும்.
கோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyal
கோலர்ட் க்ரீன்ஸில் அதில்
அளவு புரதம், விட்டமின்ஸ் K , A , C , E, B1 , B5 , கல்சியம்,
நார்சத்து, Omega -3 Fatty Acids மற்றும் நிறைய மினரல்ஸ் போன்றவை அதிக அளவில்
காணப்படுக்கின்றது.
சுமார் 100 கிராம் கீரையில் 30 – 40 கலோரிஸ் தான் காணப்படுக்கின்றது. டயட்டில்
இருப்பவர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
நார்சத்தில், இது நீரில் கரையாத நார்சத்து வகையினை சேர்ந்தது. அதனால் மலசிக்கல்
இல்லாமல் இருக்கும்.
அதே மாதிரி சக்கரை மற்றும்
கொலஸ்டிரால் அதிகம் இருப்போர் இதனை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது மிகவும் அவசியம்.
இந்த கீரை கொஞ்சம் கசப்பு தன்மையுடன் இருக்கும். (நம்ம ஊர் அகத்தி
கீரை மாதிரி இருக்கும்.)
சமைக்க தேவப்படும்
நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
:
கீரை
– 1 கட்டு
·
வெங்காயம்
– 1
·
பூண்டு
– 5
·
கடுகு,
உளுத்தம்பருப்பு – தாளிக்க
·
எண்ணெய்
– 1 மேஜை கரண்டி
·
உப்பு
– தேவையான அளவு
செய்முறை :
·
கீரையினை
நன்றாக கழுவி, சிறியதாக வெட்டி கொள்ளவும். வெங்காயம் + பூண்டினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பினை தாளித்து அத்துடன் பூண்டினை சேர்த்து
வதக்கவும்.
·
பூண்டு
வதங்கியவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
·
வெங்காயம்
வதங்கியவுடன், கீரை + தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.
·
சுவையான
சத்தான கீரை பொரியல் ரெடி.
குறிப்பு :
கீரை பொரியலில் கடைசியில் தேங்காய் துறுவல் சேர்த்தால சுவையாக இருக்கும்.
மைசூர் ரசம் - Mysore Rasam
அருசுவையில் இருந்து பார்த்து
செய்தது…ரொம்ப அருமையாக இருந்தது…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.
இந்த ரசத்தில் தேங்காய் துறுவலினை வறுத்து அரைத்து சேர்ப்பதால் கூடுதல்
சுவையுடன் இருக்கும்.
சமைக்க தேவைப்படும்
நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
:
தக்காளி
– 2
·
பூண்டு
– 6 பல் (தோலுடன்)
·
துவரம்
பருப்பு – 1/4 கப்
·
புளி
– சிறிய நெல்லிக்காய் அளவு
·
கொத்தமல்லி
- சிறிதளவு
சேர்க்க வேண்டிய
தூள் வகைகள் :
·
மஞ்சள்
தூள் – 1/2 தே.கரண்டி
·
பெருங்காயம்
– 1/2 தே.கரண்டி
·
உப்பு
– தேவையான அளவு
முதலில் தாளிக்க
:
·
எண்ணெய்
– 1 மேஜை கரண்டி
·
சீரகம்
– 1 தே.கரண்டி
·
கடுகு
– தாளிக்க
வறுத்து அரைத்து
கொள்ள :
·
சீரகம்
– 1 தே.கரண்டி
·
மிளகு
– 1 தே.கரண்டி
·
தனியா
– 1 மேஜை கரண்டி
·
காய்ந்த
மிளகாய் – 3
·
துவரம்
பருப்பு – 1 மேஜை கரண்டி
·
தேங்காய
துறுவல் – 1 மேஜை கரண்டி
செய்முறை :
·
துவரம்
பருப்பினை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் வேகவைத்து கொள்ளவும். வறுத்து
பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை அனைத்தும் ஒன்றாக சேர்த்து வறுத்து கொள்ளவும்.
·
இத்துடன்
சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.
·
தக்காளியினை
பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க
கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பிறகு பூண்டு + தக்காளியினை சேர்த்து 1 –
2 நிமிடங்கள் வதக்கவும்.
·
புளியினை
சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் + புளி தண்ணீர்
+ வேகவைத்த துவரம் பருப்பு + தூள் வகைகள் என அனைத்தும் ஒன்றாக சேர்த்து 2 – 3 நிமிடங்கள்
சிறிய தீயில் வேகவிடவும்.
·
கடைசியில்
அரைத்து வைத்துள்ள கலவை + கொத்தமல்லி சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வைக்கவும்.
கொதி வரும் பொழுது அடுப்பினை அனைத்துவிடவும்.
·
சுவையான
எளிதில் செய்ய கூடிய மைசூர் ரசம் ரெடி. இத்துடன் உருளை வருவல், கூட்டு , அப்பளம் சேர்த்து
சாப்பிட சுவையாக இருக்கும்.
கவனிக்க:
புளி கரைசலிற்கு பதிலாக
எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.
வறுத்து அரைக்க கொடுத்துள்ள
பொருட்களுடன் தண்ணிர் சேர்க்காமல் அரைத்து கொண்டால், 2 – 3 தடவை பயன்படுத்தலாம்.
பூண்டினை தோலுடன் சேர்த்து
நசுக்கினால் வசமாக நன்றாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)