Happy Diwali


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....

ஈஸி இட்லி பொடி / பொட்டுக்கடலை பொடி - Roasted Chana Dal Podi



மிகவும் எளிதில் செய்ய கூடிய இட்லி பொடி…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

இட்லி பொடி செய்ய தேவைப்படும் நேரம் : 2 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பொட்டுகடலை – 1 கப்
·         காய்ந்த மிளகாய் – 2 – 3
·         பூண்டு – 4 பல் தோலுடன்
·         உப்பு – சிறிதளவு

செய்முறை :
·         மிக்ஸியில் முதலில் பூண்டு + காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும்.


·         அத்துடன் பொட்டுகடலை + உப்பு சேர்த்து Pulse Modeயில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய பொடி ரெடி. இத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து கொண்டு இட்லி, தோசைக்கு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.


·         இதனை 2 வாரம் வரை வைத்து இருக்கலாம். நன்றாக இருக்கும். இட்லி , தோசைக்கு சூப்பர்ப் காம்பினேஷன்…சத்தும் கூட…குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க…

குறிப்பு :
பூண்டினை தோலுடன் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

காய்ந்த மிளகாயிற்கு பதிலாக மிளகாய் தூள் கூட பயன்படுத்தலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...