இன்ஸ்டண்ட் ஒட்ஸ் கோதுமை ரவா இட்லி - Instant Oats Wheat Rava Idli - Indian Oats Recipe / Idly Varieties


சுவையான சத்தான எளிதில் செய்ய கூடிய காலை நேர சிற்றுண்டி. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ஒட்ஸ் – 1 கப்
·        கோதுமை ரவை – 1/2 கப்
·        தயிர் – 1/2 கப்
·        உப்பு – தேவைக்கு
·        பேக்கிங் சோடா – 1/2 தே.கரண்டி

பொடியாக நறுக்கி கொள்ள :
·        பீன்ஸ் – 6
·        கராட் - பாதி
·        பச்சைமிளகாய் – 2 – 3
·        கருவேப்பில்லை, கொத்தமல்லி – சிறிதளவு

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – தேவைக்கு
·        கடுகு – 1/2 தே.கரண்டி
·        சீரகம் – 1/2 தே.கரண்டி
·        உளுத்தமபருப்பு – 1 தே.கரண்டி
·        முந்திரி – 5 (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)

செய்முறை :
கடாயில் ஒட்ஸினை போட்டு 2 – 3 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும். சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரவென பொடித்து கொள்ளவும்.


பீன்ஸினை , பச்சைமிளகாய் , கருவேப்பில்லை + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கராட்டினை துறுவி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பீன்ஸ் + கராட் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லையினை சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வதக்கவும்.


வதக்கிய பொருட்களுடன் கோதுமை ரவையினை சேர்த்து வறுத்து கொள்ளவும்.


பொடித்த ஒட்ஸ் + வதக்கிய பொருட்கள் + தேவையான அளவு உப்பு + தயிர் + 1/2 கப் தண்ணீர் + கொத்தமல்லி + பேக்கிங் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக கலந்து கொள்ளவும்.


மாவினை 5 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு, இட்லி தட்டில் ஊற்றி வேகவிடவும். (விரும்பினால் உடனேவும் மாவினை தட்டில் ஊற்றி வேகவிடலாம். )


சுவையான சத்தான ஒட்ஸ் ரவா இட்லியினை சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
இட்லி மாவு பதத்திற்கு கரைக்கும் பொழுது நிறைய தண்ணீர் ஊற்ற தேவையில்லை. அப்படி சேர்த்தால் இட்லி நன்றாக இருக்காது.

மாவினை இட்லி தட்டில் ஊற்றும் பொழுது கெட்டியாக தான் இருக்க வேண்டும்.

அவரவர் விரும்பிய காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.

25 comments:

Pranjali said...

Wow..Idlis are fabulous...they looks very delicious.
You have great collections of recipes in your blog.Happy to follow you dear.Do visit my blog in your free time.

foodydelight.com

savitha ramesh said...

kalakkal idli ponga....super....eat healthy.

மனசாட்சி™ said...

செய்து பார்ப்போம் - நன்றி

Lakshmi said...

மிகவும் ஆரோக்கியமான சத்துள்ள இட்லிக்கு நன்றி. படங்களும் செய்முறை விளக்கமும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்.

Vimitha Anand said...

Nethu daan rava idli try pannen... Next idu daan.. So healthy

Asiya Omar said...

சத்தான சூப்பர் இட்லி.அருமையான படம்.

Vardhini said...

Nice use of oats. Idlis look fabulous.

Vardhini
CooksJoy

ஸாதிகா said...

இட்லியைப்பார்க்கவே சூப்பராக உள்ளதே:)

Aruna Manikandan said...

Healthy and delicious idli :)

கோவை2தில்லி said...

நல்லதொரு ரெசிபி.

Thenammai Lakshmanan said...

ஹெல்த்தி இட்லி.. :0

jeyashrisuresh said...

Very healthy and nice breakfast.

Premalatha Aravindhan said...

wow healthy recipe,luks so soft...

Priya said...

Super healthy idly,naan adikadi seiven..

Sensible Vegetarian said...

Such a healthy and delicious Idli.

S.Menaga said...

ஆரோக்கியமான கலர்புல்லான சிற்றுண்டி,அருமை!!

Akila said...

Romba arumaya vanthu iruku... Clicks were awesome dear...

Jay said...

droooooooling healthy recipe..thanks for sharing
Tasty Appetite

மனோ சாமிநாதன் said...

மிகவும் சத்தான இட்லி! அவசியம் செய்து பார்த்து விட்டு சொல்லுகிறேன்!
நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்களை இங்கே அடிக்கடி பார்ப்பது மகிழ்வாக இருக்கிறது!!

GEETHA ACHAL said...

நன்றி பிரணாஞ்சலி...

நன்றி சவிதா..

நன்றி மனசாட்சி..

நன்றி லஷ்மி அம்மா..

நன்றி விமிதா..

நன்றி ஆசியா அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி வர்தினி..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி அருணா..

நன்றி ஆதி..

நன்றி தேன் அக்கா...

நன்றி ஜெய்ஸ்ரீ...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரேமலதா..

நன்றி ப்ரியா...

நன்றி Sensible...

நன்றி மேனகா..

நன்றி அகிலா..

நன்றி ஜெயந்தி..

நன்றி மனோ ஆன்டி...

Mahi said...

நல்ல ஐடியா! இட்லி அழகா இருக்கு. ரவா இட்லி போலவே சாஃப்ட்டா இருக்குமா கீதா? பேக்கிங் சோடாவுக்கு பதில் ஈனோ சேர்க்கலாமா?!

Jaleela Kamal said...

ரவா இட்லி பார்க்க மொரு மொரு வடை போல இருக்கு

Saraswathi Iyer said...

Looks delicious and healthy.

Related Posts Plugin for WordPress, Blogger...