கோவைக்காய் சட்னி - Kovaikkai Chutney / Tindora Chutney - Side Dish for Idly and Dosaகாலை நேர சிற்றூண்டிக்கு எளிதில் செய்ய கூடிய ஹெல்தியான சட்னி…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·        கோவைக்காய் – 100 கிராம் ( சுமார் 10 – 15 )
·        வெங்காயம் – 1
·        தக்காளி – 1
·        பச்சைமிளகாய் – 2 - 3
·        தேங்காய் துறுவல் – 1/4 கப்
·        கொத்தமல்லி – சிறிதளவு
·        புளி - சிறிதளவு
·        உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளிக்க:
·        எண்ணெய் – சிறிதளவு
·        கடுகு, சீரகம், உளுத்தமபருப்பு – தாளிக்க
·        கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
கோவைக்காயினை வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும். வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாயினை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.


கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து 4 – 5 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கி கொள்ளவும்.மிக்ஸியில் முதலில் தேங்காய் துறுவலினை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். அத்துடன் வதக்கிய பொருட்கள் + கொத்தமல்லி + உப்பு +புளி சேர்த்து கொரகொரவென அரைத்து எடுக்கவும்.


தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான சத்தான சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும்.


குறிப்பு :
விரும்பினால் தேங்காயினை தவிர்த்து கொள்ளலாம்.

அதற்கு பதிலாக சிறிது உளுத்தமப்ருப்பினை வறுத்து அரைத்து கொள்ளலாம்.

சட்னி அரைக்கும் பொழுது கண்டிப்பாக சிறிதளவு புளி சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

22 comments:

Lakshmi said...

நானும் எல்லா காய்களிலும் சட்னி செய்து விடுவேன். கோவைக்காய் சட்னி செய்முறையும் விளக்கப்படங்களும் நல்லா இருக்கு.

savitha ramesh said...

romba nalla irukku.

ஸாதிகா said...

அடேங்கப்ப்பா கோவைக்காயிலும் சட்னி பண்ணி அசத்திட்டீங்க கீதா ஆச்சல்

Padhu said...

Yummy chutney

Pranjali said...

hello geetha.....very delicious


foodydelight.com

S.Menaga said...

சட்னி நல்லாயிருக்கு கீதா!! நனும் இந்த் சட்னி செய்து இன்னும் டிராப்ட்லயே இருக்கு....

Lali said...

Healthy food Geetha! Usually we cook this vegetable as curry only. This is the first time came to know about preparing chutney from kovaikkaai. Thank you! Tomorrow's menu this will be only :)


Lali
http://karadipommai.blogspot.in/

Priya said...

SUPER chutney..attagasama irruku

Pappathi said...

கோவைக்காயிலும் சட்னி.. புதுமையா இருக்கு :)

RAKS KITCHEN said...

I have heard about this one, have to try, its a healthier choice :)

jeyashrisuresh said...

I recently made thogaiyal out of kovvakai, but chutney sounds nice and must taste yum for sure

Vimitha Anand said...

Made this long time back and loved it... Will try again

கோவை2தில்லி said...

கோவைக்காயில் சட்னி. நன்றாக இருக்குங்க. செய்து பார்க்க வேண்டும்.

Sensible Vegetarian said...

Looks so good, nice combo.

Priya dharshini said...

luv kovaikkai...i will try this version..

Pushpa said...

Yummy Chutney,looks so good with crispy dosa.

Jay said...

Mmmm...flavorful & yummy version
Tasty Appetite

புவனேஸ்வரி ராமநாதன் said...

கோவைக்காய் மிகுந்த சத்துள்ள காய். ஆனால் இதனை யாரும் அதிகம் சமையலில் சேர்ப்பதில்லை.
இவ்வாறு சட்னியாக செய்து சாப்பிடுவதன் மூலம் அதிகம் சேர்க்க வாய்ப்புண்டு. பயனுள்ள பகிர்விற்கு
நன்றி கீதா.

Asiya Omar said...

விதம் விதமாக சட்னி செய்வதில் கீதா உங்களுக்கு நிகர் நீங்களே!சூப்பர்.

arul said...

nice your blog is nicely designed

Sweety said...

hii.. Nice Post

Thanks for sharing

Sreevidhya said...

Will try that tomorrow geetha

Related Posts Plugin for WordPress, Blogger...