மீன் பிரியாணி - 2 / Fish Biryani - 2மிகவும் சுவையான மீன் பிரியாணி…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…. அஸ்மா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த பிரியாணி…மிகவும் சூப்பராக இருந்தது…நன்றி

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
பிரியாணி மீன் தேவையான பொருட்கள் :
·        மீன் துண்டுகள் – 6 - 8
·        முட்டை – 1
·        கடலைமாவு – 3 மேஜை கரண்டி
·        மிளகு தூள், சீரகம் தூள்– தலா 1 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
·        மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

பிரியாணி செய்ய :
·        பாஸ்மதி அரிசி – 3 கப்
·        தயிர் – 1 கப்
·        பால் – 1 கப்
·        சிக்கன் ஸ்டாக் – 2 கப்
·        அரைத்த தேங்காய் விழுது – 2 மேஜை கரண்டி
·        இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·        எலுமிச்சை – பாதி பழம்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 1 பெரியது + 1
·        தக்காளி – 2
·        பச்சைமிளகாய் – 5
·        கேரட் – 1 சிறியது
·        புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

முதலில் தாளிக்க :
·        எண்ணெய், நெய் – சிறிதளவு
·        பட்டை , கிராம்பு, ஏலக்காய்

செய்முறை :

மீன் துண்டுகளை சுத்தம் செய்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுது + மிளகு சீரகம் தூள் + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு + 1 தே.கரண்டி எலுமிச்சை சாறு + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மீன் துண்டுகள் மீது தடவி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.


பிறகு சிறிதளவு எண்ணெயில் தோசை கல்லில் போட்டு மீன் துண்டுகளை வறுத்து எடுக்கவும்.


ஒரு பத்திரத்தில் கடலை மாவு + உப்பு + முட்டை +சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கி கொள்ளவும்.


திரும்பவும் வறுத்த மீன் துண்டுகளை கலக்கி வைத்து இருக்கும் கடலைமாவு கலவையில் முக்கி எடுத்து மீண்டும் பொரிக்கவும். இப்பொழுது பிரியாணிக்கான மீன் துண்டுகள் ரெடி.


பெரிய வெங்காயத்தினை நீளமாக வெட்டி அவனில் 450Fயில் Broil Modeயில் வறுத்து கொள்ளவும். (அல்லது) எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.(அவன்செய்முறையினை காண இங்கே க்ளிக் செய்யவும்.)

வெங்காயம் + தக்காளியினை நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும். கேரட் , புதினா, கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.

பாஸ்மதி அரிசியினை நன்றாக கழுவி அத்துடன் 1 கப் பால் + 4 கப் தண்ணீர் சேர்த்து சுமார் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.


பிரியாணி செய்யும் பாத்திரத்தில் முதலில் நெய் + எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பட்டை+கிராம்பு + ஏலக்காய் சேர்த்து தாளித்த பிறகு வெங்காயம் + பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


பிறகு கேரட் + தக்காளி + புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.


இதன் பின்னர் தயிர் + அரைத்த தேங்காய் விழுது + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் + சிக்கன் ஸ்டாக் + தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.


5 – 6 நிமிடங்கள் கழித்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். இப்பொழுது 1 கப் அளவு குருமாவினை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். (கடைசியில் சேர்த்து கொள்வதற்காக…)


பாத்திரத்தில் இப்பொழுது அரிசி ஊற வைத்த தண்ணீர் (தண்ணீர் + பால் சேர்த்தது) எடுத்து ஊற்றி கொதிக்கவிடவும்.


நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அரிசியினை சேர்த்து முக்கால் பதம் மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.


சாதம் பதமாக வெந்தவுடன், உடையாமல் கிளறிவிடவும். பாதி சாதத்தினை தனியாக எடுத்துவிட்டு அதன் மீது தயார் செய்து வைத்துள்ள மீனை வைத்து அத்துடன் தனியாக எடுத்து வைத்த 1 கப் குருமாவினை பரவி விடவும்.


அதன் பிறகு மீதி சாதத்தினை அதன் மீது பரவி விட்டு, அவனில் பொரித்த வெங்காயம் + கொத்தமல்லியினை தூவி விடவும்.


கலர் சேர்க்க விரும்பினால் சிறிது தண்ணீரில் கலரினை கரைத்து சாத்தின் மீது ஊற்றிவிடவும். இதனை தட்டு போட்டு மூடி மிகவும் சிறிய தீயில் 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேகவிடவும்.


சுவையான மீன் பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

13 comments:

அஸ்மா said...

//அஸ்மா அவர்களின் குறிப்பினைப் பார்த்து செய்த பிரியாணி... மிகவும் சூப்பராக இருந்தது...நன்றி//

சூப்பர்னு சொன்னதுக்கு உங்களுக்கும் நன்றி :) எங்களுக்கு அனுப்பாமலே நல்லா ரசிச்சு சாப்பிட்டீர்களா கீதாச்சல்? :-) ஃபோட்டோக்கள், நான் எடுத்த ஃபோட்டோக்களைப் போலவே மசாலா கலரெல்லாம் ஒரே மாதிரி...!! :) அருமை!

என்ன மீனில் செய்தீங்கபா? வஞ்சிர மீன் மாதிரி தெரியுதே..?

Priya said...

Wow fish briyani attagasama irruku Geetha,wish to have a plate rite now.

savitha ramesh said...

Paakkave romba nalla irukku geetha.super ponga.

Shama Nagarajan said...

super biriyani..tempting

NIZAMUDEEN said...

வாசனையான சமையல் குறிப்பு!


எனது 100ஆவது பதிவு! சுஜாதாவிடம் சில கேள்விகள்!
தங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.

Rekha said...

looks very tempting and neat presentation:) happy to follow u
pls visit and join my space in ur free time:)
http://indiantastyfoodrecipes.blogspot.com

Jay said...

a tasty recipe for sure...so goood..:)
Tasty Appetite

iridiscent petals said...

very nice pictures and looks very yummy too...love ur space

திண்டுக்கல் தனபாலன் said...

(http://mahikitchen.blogspot.com/) தளம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை...

பிரியாணி - துணைவியார் குறித்துக் கொண்டார்கள்... நன்றி சகோ...

Abarna said...

Congrats. your Blog is being appreciated in AVAL VIKATAN this week :)way to go

சரயு said...

மதிப்பிற்கும் பிரியத்திற்கும் உரிய கீதாவிற்கு ஆழ் மனதிலிருந்து வணக்கங்கள்.
என் பெயர் சரயு. சென்னை வசிப்பிடம். உங்கள் வலைதளம் மிக மிக பிரமாதம். சமையல் கலை மீது உங்களுக்கு உள்ள அளவு கடந்த ஈடுபாட்டை உங்களின் ஒவ்வொரு சமையல் குறிப்பிலும் உணர முடிகிறது.
பொதுவாக சமையல் குறிப்பை படித்து, புகைப்படத்தை பார்த்தால் சமைக்கத் தோன்றலாம், சாப்பிட்ட நிறைவைத் தருமா?! உங்கள் செய்முறை பகிர்வுகள் அந்த உணர்வைத் தருகின்றன.
இணையத்தில் சமையலுக்கு உதவ எத்தனையோ பகுதிகள் இருக்கின்றன. ஆனால், என் சமையல் அறைக்கு எந்த குறிப்புகள் தேவைப்பட்டாலும், புதிய சமையலை முயற்சித்தாலும் உங்கள் வலைதள முகவரியை மட்டுமே தேடி ஓடி வருகிறேன். அது நேரத்தை மிச்சப்படுத்தி, நிறைவையும் தருகின்றது.
உங்கள் உதவியால் என் வீட்டில் என் கைப்பக்குவத்திற்கு மரியாதை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதற்காக என் மனதார்ந்த நன்றிகள். உங்கள் முயற்சியும் சேவையும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவை.
நன்றிகளும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களுமாக
திருமதி ஜி.சரயு

Amutha venkatesan said...

Hearty congratulations. I saw your blog in Aval Vikatan (valaipoovarasi).

Expectimg more receipes from your blog.

Anonymous said...

very nice

Related Posts Plugin for WordPress, Blogger...