பிஷ் டிக்கா - Fish Tikka / Oven baked Fishசமைக்க தேவைப்படும் நேரம்: 20 நிமிடங்கள்
ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        மீன் – 10 துண்டுகள் (முள் இல்லாமல்)
·        எண்ணெய் – சிறிதளவு
·        இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 மேஜை கரண்டி
·        தயிர் – 1/2 கப்
·        எலுமிச்சை சாறு – சிறிதளவு (கடைசியில் சேர்க்க)

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·        கரம்மசாலா தூள் – 1/4 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·        மீன்களை நன்றாக சுத்தம் செய்து அதில் இருந்து தண்ணீரினை பேப்பர் டவல் வைத்து நீக்கி விடவும்.

·        தயிரில் இருந்து தண்ணீரினை சிறிது நீக்கிவிடவும். (அதிகமான தண்ணீர் கூடாது)
·        தயிர் + தூள் வகைகள் + இஞ்சி பூண்டு பேஸ்டினை நன்றாக கலந்து கொள்ளவும்.

·        இதனை மீன்களுடன் சேர்த்து தடவிவிடவும்.

·        மீன் துண்டகளை Plastic Wrapயினை வைத்து மூடி ப்ரிஜில் வைக்கவும்.

·        அவனை முற்சூடு செய்து கொள்ளவும். மீன் துண்டுகளை அவனில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும். அதன் மீது சிறிது எண்ணெயினை Spray செய்து கொள்ளவும்.

·        ட்ரேயினை அவனில் 400F வைத்து சுமார் 10 – 15 நிமிடங்கள் வேகவிடவும்.

·        கடைசி 5 நிமிடங்கள் Broil Modeயில் வைக்கவும்.பரிமாறும் பொழுது எலுமிச்சை சாறினை மீன் துண்டுகள் மீது பிழிந்து கொள்ளவும். சுவையான எளிதில் செய்ய கூடிய பிஷ் டிக்கா ரெடி. இதனை சாலடுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க:
மீன் துண்டுகளில் இருந்து சிறிது தண்ணீர் வரும் என்பதால் ட்ரே மீது இன்னொரு ட்ரேயினை வைத்தால் நன்றாக இருக்கும்.


12 comments:

ஸாதிகா said...

வித்த்யாசமான டிக்காதான்

Priya said...

Slurp,mouthwatering here..super fish tikka.

Priyas Feast said...

Yummy and healthy fish fry..nalla pathivu

jayy said...

Hi Geetha akka, I'm a 24 year old girl who is in the initial phase of cooking. I try recipes from aval vikatan, youtube etc. But many of my cooking outcome were not so delicious as expected :( I came to know about your blog through Aval Vikatan. For a learner like me, you blog is a boon. Especially those pictures are very useful makes the learning very easy:) Thanks a lot. Continue the good work. - Jaya, Pondicherry.

jayy said...

Hi Geetha akka. I'm a 24 year old girl who is in the initial phase of cooking. I try recipes from youtube, aval vikatan etc. But many of my cooking outcome were not so good as expected :( After knowing about your blog from aval vikatan, i found it very helpful. Especially for learners like me, your step-by-step pictures, quick dishes and easy explanation are very helpful. I'm very happy now. Nammalum nalla samaikalam nu confidence vandhuduchu. Really, thanks a ton for your good work :) :) Please continue it till you can.. --Jaya, Pondicherry.

jayy said...

Just Loving your recipes :) :)

Saraswathi Tharagaram said...

Healthy and terrific tikkas..Will try it..Tried your Kadumpal recipe at Savithas house..love the texture and taste of it..

மனோ சாமிநாதன் said...

அருமையான மீன் டிக்கா! பார்க்கும்போதே பொன்னிற வறுவலாய் சாப்பிடத் தூண்டுகிறது!!

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர் டிக்கா...

S.Menaga said...

பார்க்கும்போதே சுவைக்க தோனுது...

asiyao said...

சூப்பராக இருக்கு.

Seetha said...

Nice Tikkas :)

Do visit my blog
seethaskitchen.blogspot.com

Happy Blogging!!

Related Posts Plugin for WordPress, Blogger...