கடும்பால் / சீம்பால் - Kadumbal / Kadumpal / Seembal /Sweet without cow lactating milk



Askhata Schoolயில் நான்கு மாதங்களுக்கு முன்பு Food Festival நடந்தது…அதில் ஒரு Dessert வைத்து இருந்தாங்க…சாப்பிடும் பொழுது நம்மூர் கடும்பால் மாதிரியே இருந்தது…இந்த ஸ்வீட் தான் முதலாக காலியாகிவிட்டது என்பதால் அதனை கொண்டு வந்த நபர் சீக்கீரமாகவே கிளம்பி போய்விட்டார்…அதன் பிறகு அந்த festivalயினை நடத்துபவரிடம் அந்த ஸ்வீட் செய்த நபரினை பற்றிய தகவல்கள் வாங்கி கொண்டேன்…

அவர்களை கண்டுபிடித்து அந்த ஸ்வீடினை பற்றி கேட்டேன்…அவங்க European…அவங்க ஊரிலும் இந்த கடும்பாலினை செய்வாங்களாம்…எனக்கு ஒரே ஆச்சரியம்...ஆனால் அவங்க நம்மாள மாதிரி Steam Cook செய்யாமல் Ovenயில் வைத்து Bake செய்வாங்களாம்…ஆனாலும் சுவையில் ஒரே மாதிரி தான் இருக்கின்றது…

அவங்க ஊரில் Govt., Pasturize செய்யாத பாலினை  விற்பனை செய்ய கூடாது என்று சொல்லி இருப்பதால் சிறிய சிறிய விற்பனையாட்களிடன் இருந்து தான் மக்கள் வாங்கி செய்வாங்களாம்…

அப்படி இல்லாதவங்க இந்த Recipeபடி செய்வாங்களாம்….அவங்க சொன்ன Recipeயினை நம்மூர் ஸ்டைலில் அம்மாவிடம் கேட்டு செய்தேன்…மிகவும் சூப்பராக அருமையான இருந்தது…..


நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். இதில் நான் முட்டை சேர்த்து செய்து இருக்கின்றேன்….நான்-வெஜ் சாப்பிடாதவங்க முட்டையிற்கு பதிலாக Agar-agar/ கடல் பாசியினை சேர்த்து செய்யலாம்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 40 – 50 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        முட்டை – 2
·        பால் – 2 கப் + 1/2 கப்
·        கண்டன்ஸ்டு மில்க் (Sweetened Condensed Milk) – 1 டின்

மேலே தூவ :
·        மிளகு – 8
·        ஏலக்காய் – 4

செய்முறை :
·        மிளகு + ஏலக்காயினை மிக்ஸியில் போட்டு ஒன்றும்பாதியுமாக பொடித்து கொள்ளவும்.

·        ஒரு பாத்திரத்தில் முட்டை + 1/2 கப் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

·        இத்துடன் Condensed Milk சேர்த்து கலக்கவும்.

·        பிறகு பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

·        பிரஸர் குக்கர் / இட்லி பானையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். கடும்பாலினை வேகவைக்க ஒரு அகலமான பாத்திரத்தினை எடுத்து கொண்டு அதில் கலந்து வைத்து இருக்கும் பாலினை ஊற்றவும். அதன் மேலே பொடித்து வைத்துள்ள ஏலக்காய் + மிளகுதூளினை தூவவும்.

·        இதனை அப்படியே அசைக்காமல் பிரஸர் குக்கர்/இட்லி பானையில் வைக்கவும்.

·        சுமார் 40 – 50 நிமிடங்கள் வேகவிடவும். (பிரஸர் குக்கர் என்றால் whistle போடாமல் வேகவிடவும்.)  (நன்றாக வெந்த பிறகு இதில் கடும்பாலிற்கு கீழே சிறிதளவு தண்ணீர் அடியில் இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும். )

·        சுவையான கடும்பால் ரெடி…

கவனிக்க:
முட்டையினை சேர்க்க விருப்பம் இல்லை என்றால் Agar-agar/ கடல் பாசியினை சேர்த்து கொள்ளவும்.

கண்டிப்பாக Fat-Free பாலினை பயன்படுத்த வேண்டாம்…


இதே கலவையினை Ovenயிலும் வைத்து Bake செய்யலாம். அவனில் என்றால் 400Fயில் சுமார் 30 நிமிடங்கள் கலந்து வைத்துள்ள கலவையினை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனை ஒரு ட்ரேயில் வைக்கவும். ட்ரேயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி Bake செய்யவும்.

Condensed Milkயினை 3/4 டின் + வெல்லம் 1/4 கப் என்று அளவிலும் சேர்த்து செய்யலாம்.



21 comments:

angelin said...

கீதா நலமா .
இந்த வகை டிசர்ட் நானும் சாப்பிட்டுருக்கேன் ..புட்டிங் மாதிரியுமில்லாம /வட்டிலாப்பம் மாதிரியுமில்லாம ஒரு புதிய டேஸ்ட் இருக்கும் .


அப்புறம் நான் உங்க ரெசிப்பி க்ரிட்ஸ் இட்லி செய்தேன் .விரைவில் பதிவிடும்போது உங்களுக்கு லிங்க் தரேன்

Krithi Karthi said...

Geetha, oven-il endral bain marie methodla seyyanuma.. illa just cake maadhiri bake pannalama... moist-a irukkuma??

savitha ramesh said...

Geetha. i am die hard fan of kadum paal.thanx for the recipe.will try it soon,before purattasi month .

ஸாதிகா said...

அட வித்தியாசமாக உள்ளதே.புட் பெஸ்டிவலையும் படம் எடுத்து பகிர்திருக்கக்கூடாதா?

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் இதுவரை செய்ததில்லை...

செய்து பார்ப்போம்... நன்றி...

எல் கே said...

கடல் பாசியும் சாப்பிட மாட்டேனே ?

Saraswathi Tharagaram said...

Super Geetha, kalakuringa..Unbelievable kadum paal with available ingredients..Will try it soonn..

Sangeetha Nambi said...

Oh, veetla kooda panalama ?? I dont know that... Thx for sharing...
http://recipe-excavator.blogspot.com

Priyas Feast said...

hi geetha...super recipe,thanks for hunting it..super ah vanthurukku

GEETHA ACHAL said...

நன்றி ஏஞ்சலின்...க்ரிட்ஸ் இட்லி செய்ததலில் மிகவும் மகிழ்ச்சி...

நன்றி கீர்த்தி...ஆமாம இதனை அவனில் பேக் செய்யும் பொழுது Bain Marie methodயிலேயே செய்ய வேண்டும்...இப்பொழுது தான் பதில் Update செய்தேன்...நன்றி...

இது Custard மாதிரி Juicyயாக இருக்கும்.

நன்றி சவிதா..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

நன்றி ஸாதிகா அக்கா..ஆமாம் போட்டோஸ் எடுத்தேன்..ஆனால் அந்த Memory card எங்கே இருக்கு என்று தான் தெரியவில்லை...கண்டிப்பாக தேடி கண்டுபிடித்துவிட்டு Update செய்கிறேன்...

GEETHA ACHAL said...

நன்றி தனபாலன்..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி கார்த்திக்...கடல்பாசியும் சாப்பிட மாட்டிங்கனா...கெட்டி தயிரினை சேர்த்து செய்து பாருங்க..ஆனால் original Taste கிடைக்குமா என்று தெரியவில்லை...ஆனாலும் நன்றாக தான் இருக்கும்.

நன்றி சரஸ்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி சங்கீதா...எனக்கு இதனை இப்பொழுது தான் தெரியும்...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...கண்டிப்பாக செய்து பாருங்க...நன்றாக இருக்கும்..

Abarna said...

hi geetha,
cooker a moodi idly madhri steam pannanuma, illa double boiler madhri thirandhe vekkanuma? pal pongi vidatha? pls clarify.

Premalatha Aravindhan said...

wow never tasted this yummy dish Geetha,luks too gud.

Priya said...

Intha shortcut seembal super..Nalla irruku geetha, seekarama seithu pakkuren.

sudha said...

i like the seempal verymuch.here u said condensed milk 1 tin.i just want to know how much oz tin?.please tell me

kanchana said...

Hi sis,
i tried most of your recipes,i want to know something,how many days can we kept this refrigerator.pls let me know plssssssssssssssssssssssssssssssss

GEETHA ACHAL said...

Thanks Kanchana...You can refrigerate it for 3 - 4 days...

kanchana said...

thanks sister,today i prepared this my hubby ,my daughter liked it very much.once again thanks

Sangeetha M said...

இது வண்டிகளில் வைத்து வில்லைகள் போட்டு விற்பார்களே அந்த சீம்பாலா?அளவு சொல்லுங்க கீதா.1/2 லிட்டர் பால் என்றால் எவ்வளவு கன்டஸ்டு மில்க்.கடல் பாசிஎவ்வளவு போடனும்.இனிப்பு சுவைக்கு என்ன சேர்க்கனும்.

Anonymous said...

அரை லிட்டர் பால் என்றால் மற்ற பொருட்கள் அளவு சொல்லுங்க கீதா.

Related Posts Plugin for WordPress, Blogger...