மைக்ரோவேவ் கார்ன்மாவு அல்வா - Microwave Corn Flour Halwa


இந்த அல்வாவினை மைக்ரோவேவில் செய்வதால் மிகவும் குறைந்த அளவு நெய் சேர்த்து கொண்டாலே போதும்…மிகவும் எளிதில் செய்ய கூடிய ஸ்வீட்…நன்றி ராஜி..

விநாயகர் சதூர்த்தி வாழ்த்துகள்.சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கார்ன் மாவு – 1 கப்
·        சக்கரை – 3 கப்
·        தண்ணீர் – 4 கப்
·        ஏலக்காய் தூள் – சிறிதளவு
·        முந்திரி – 5 பொடியாக வெட்டி வைக்கவும்
·        நெய் – 2 மேஜை கரண்டி
·        ஆரஞ்சு கலர் – சிறிதளவு

செய்முறை :
·        கார்ன்மாவு + சக்கரையினை சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        இத்துடன் தண்ணீர் + கலர் பவுடர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்.

·        மைக்ரோவேவில் 3 நிமிடங்கள் வைக்கவும். பாத்திரத்தினை வெளியில் எடுத்து நன்றாக கிளறி விடவும்.

·        பின்னர் நிமிடங்கள் வேகவிடவும். அதன் பிறகு திரும்பவும் வெளியில் எடுத்து கிளறிவிடவும்.

·        கடைசியில் 10 நிமிடங்கள் வைக்கவும். 4 நிமிடத்திற்கு ஒரு முறை வெளியில் எடுத்து கிளறிவிட்டு மீண்டும் மைக்ரோவேவில் வைக்கவும்.

·        முந்திரியினை மேஜை கரண்டி நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். ஏலக்காய் தூள்+ நெய் + முந்திரியினை அல்வாவில் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

·        இதனை நிமிடங்கள் வேகவிடவும். இப்பொழுது அல்வா ரெடி.இதனை அப்படியே சாப்பிடலாம். துண்டுகாளாக போட வேண்டும் என்றால் தட்டில் 1 மேஜை கரண்டி நெய் தடவி அல்வாவினை அதில் கொட்டி சமபடுத்தி சுமார் 30நிமிடங்கள் ஆறவிட்டு துண்டுகள் போடவும்.

·        சுவையான அல்வா ரெடி.
கவனிக்க:
அனைத்து பொருட்களையும் கலந்து மைக்ரோவேவில் முதலில் வைக்கவும் பொழுது கண்டிப்பாக 3- 4 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து நன்றாக கிளறிவிடவும். இல்லை என்றால் சிறிது கட்டி பட்டுவிடும்.

இதனை கடாயிலும் செய்யலாம். ஆனால் சிறிது நெய் கூடுதலாக தேவைப்படும்.

கொடுத்துள்ள அளவு செய்தால் சரியாக இருக்கும். கார்ன் மாவு : சக்கரை : தண்ணீரினை 1:3:4 என்ற அளவில் எடுத்து கொள்ளவும்.


12 comments:

ஸாதிகா said...

கார்ம் மாவு அல்வா சூப்பர்ப்

Lakshmi said...

செய்து பார்க்கதூண்டும் இனிப்பு.

சந்திர வம்சம் said...

செய்முறையில் 444444 நிமிடங்கள் என உள்ளது! உடன் திருத்தவும்.நன்றி!

காலம் வய்த்தால் பார்க்கவும்:

பத்மா வின் தாமரை மதுரை

ஹுஸைனம்மா said...

ரொம்ப நாள் ஆளைக் காணோமே எங்கே போயிட்டீங்க. வலைப் பூவரசிக்கு வாழ்த்துகள்.

இந்த அல்வா செய்முறையில், ஓவனில் வைக்க வேண்டிய நிமிடநேரத்தின் குறியீடு சில இடங்களில் தவறாக இருக்கீறது, சரி செய்யுங்கப்பா.

திண்டுக்கல் தனபாலன் said...

அட்டகாசமாக இருக்கு...

Vijayalakshmi Dharmaraj said...

superb halwa... lovely texture...
VIRUNTHU UNNA VAANGA

Priya said...

Happy vinayagar chathurthi wishes to you too..Love this glossy halwa.

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி லஷ்மி அம்மா..

நன்றி சந்திரா...மாற்றிவிட்டேன்...நன்றி...

நன்றி ஹுஸைனம்மா...மிகவும் நன்றி...மாற்றிவிட்டேன்...

GEETHA ACHAL said...

நன்றி தனபாலன்...

நன்றி விஜி...

Sangeetha Nambi said...

Its tempting me much... Inviting too....
http://recipe-excavator.blogspot.com

ChitraKrishna said...

Simple karachi halwa... Super

கவிநயா said...

yummy in the tummy ஆகும் முன்னேயே yummy to the eyes! :) நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...