டிபன் சாம்பார் - Tiffin Sambarஎளிதில் செய்ய கூடிய காலை நேர டிபன் சாம்பார்…இதில் நிறைய காய்கள் சேர்ப்பதால் உடலிற்கு மிகவும் நல்லது. இதனை இட்லி, தோசை, பொங்கலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்…..

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·        வெங்காயம் – 1
·        உருளைகிழங்கு – 1
·        பீன்ஸ் – 10
·        காரட் – 1
·        கருவேப்பில்லை – 5 இலை
·        கொத்தமல்லி – சிறிதளவு
·        புளி – சிறிதளவு

தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜைகரண்டி
·        கடுகு,சீரகம் – 1/4 தே.கரண்டி

வேக வைத்து கொள்ள :
·        துவரம் பருப்பு – 1/4 கப்
·        பாசிப்பருப்பு – 1/4 கப்
·        தக்காளி – 1

வறுத்து அரைத்து கொள்ள:
·        காய்ந்த மிளகாய் – 5
·        தனியா – 1மேஜை கரண்டி
·        துவரம் பருப்பு – 2 மேஜை கரண்டி
·        வெந்தயம் – 1/2 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
·        அரைத்த பொடி – 2 – 3 மேஜை கரண்டி
·        பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை :
முதலில் துவரம் பருப்பு +பாசிப்பருப்பு + தக்காளி + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் 5 – 6 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயாம் + உருளைகிழங்கு,பீன்ஸ் ,காரட் எல்லாவற்றினையும் நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

இத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கள் + கருவேப்பில்லை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

பிறகு புளியினை தண்ணீரில் கரைத்து கொள்ளவும். அதனை காய்களுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதி நன்றாக வந்தவுடன் அரைத்த பொடி + தூள் வகைகள் சேர்க்கவும்.

இத்துடன் வேகவைத்துள்ள பருப்பினை நன்றாக மசித்து இதில் சேர்த்து வேகவிடவும்.

நன்றாக வெந்தவுடன் கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும். சுவையான எளிதில் செய்ய கூடிய டிபன் சாம்பார் ரெடி.

குறிப்பு :
பாசிப்பருப்பினை தவிர்த்து துவரம் பருப்பினை மட்டும் சேர்த்து கொள்ளலாம்.

புளி பேஸ்ட் என்றால் 1/2 தே.கரண்டி பயன்படுத்தவும்.

கத்திரிக்காய், குடைமிளகாய் போன்ற காய்களை சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல பொடியினை சேர்த்து கொள்ளவும்.

22 comments:

Premalatha Aravindhan said...

wow geetha,really am hungry now...pls pass the plate:)

Lakshmi said...

படங்களும் செய்முறை விளக்கமும் தெளிவாகவும் சுலபமாகவும் இருக்கு. செய்து பாத்துட்டு சொல்ரேன்

மனசாட்சி™ said...

பிரிண்ட் எடுத்துட்டேன் - செஞ்சு பாத்துருவோம்ல

Latha said...

Hai Geetha Akka

Congrats ka Nanum Vikatan vasagar thaan, antha message patthathum romba santhosa pattan. unga tiffin sambar nan ennaki try panninen romba nalla erunthuchu. Yena mathiri samayal theriyathavangalukku neenga thaan GURU. Thank u very much akka, once again congrats akka keep going. Take care

அம்பாளடியாள் said...

நல்லதொரு சமையல் குறிப்பு .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .மேலும் தொடர வாழ்த்துக்கள் .

திண்டுக்கல் தனபாலன் said...

(படத்துடன்) விளக்கங்கள் அருமை... வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி...

சாருஸ்ரீராஜ் said...

mouth watering geetha yummy sambar with venpongal neatly presented

ChitraKrishna said...

Yet another wonderful recipe from you geetha... Super.

Vijiskitchencreations said...

welcome back again. Waiting your recipes. This looks very easy I will try soon. My kids luv sambaar.
thanks for sharing such a quick recipe. byw how is little one doing?சந்திர வம்சம் said...

வலைபூ அரசியாக தங்களின் பதிவினை 'அவள்விகடனில்' தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

சந்திர வம்சம் said...

பார்க்க:

பத்மா

சந்திர வம்சம் said...

தங்களின் பதிவினை பின் தொடர்கிறேன்.[பத்மா-சந்திரவம்சம்]

சுபத்ரா said...

Looks delicious Geetha akka !

Priyaram said...

கீதா, சாம்பார் வாசனை இங்க வருது.... சூப்பர் ரா இருக்கு...

Priya said...

Yummy tiffin sambar, love with anything.

devi said...

geetha mam very nice one

Shanavi said...

Geetha, migavum arumai dear..My fav sambar..

athira said...

அருமையாக இருக்கு.

jeyashrisuresh said...

Very nice and tempting sambar

அமுதா கிருஷ்ணா said...

parkave super ah irruku pa

Sathya Sabai said...

Hai amma,
i m living in singapore. I don't know cooking. I know about u r blok from avalvikatan. after that everyday I m making curry & sidedishes by u r book's help. Now a days my husband praise me that "u r expert in cooking". Definitely the praises goes to u. That's y I call u amma. Every girl learn cooking from her mother. I learn from u. Thank u so much amma.

GEETHA ACHAL said...

Thanks a lot sathya...Nice to see your message...So Happy and I am very lucky to have wonderful readers like you...

Related Posts Plugin for WordPress, Blogger...