கொடி வெப்புடு / ஆந்திரா சிக்கன் வறுவல் - Kodi Vepudu / Spicy Andhra Chicken Fry


இது மிகவும் பிரபலாமான ஆந்திர சமையல்… கொடி வெப்புடு என்பது சிக்கன் ப்ரை…

இந்த சிக்கன் மிகவும் சுவையாக இருப்பதற்கு காரணம் ஒவ்வொரு பொருட்களையும் தனி தனியாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கண்டிப்பாக ஒரு பொருள் சேர்த்து கலந்த பிறகு தான் அடுத்த பொருள் சேர்த்து கலக்க வேண்டும். அப்பொழுது தான் சுவையாக இருக்கும்.

இதில் மஞ்சள் தூள் சேர்க்க மாட்டாங்க..ஆனால் நான் எப்பொழுதும் மஞ்சள் தூள் சேர்ப்பேன்…உடம்புக்கு ரொம்ப நல்லது…

இந்த சிக்கனை கலந்த பிறகு சுமார் 3 – 4 மணி நேரம் கூட ஊறவைத்து கொண்டு செய்யாலாம்…


சிக்கன் மசாலாவுடன் ஊறவைக்க : குறைந்தது 10 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
 • சிக்கன் – 1/2 கிலோ
 • வெங்காயம் – 1 பெரியது
 • தக்காளி – 1
 • கருவேப்பில்லை – 10 – 15 இலை
 • இஞ்சி  பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
 • பச்சைமிளகாய் – 2 (விரும்பினால்)
 • எண்ணெய் – 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
 • மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
 • மிளகாய் தூள் – 1 + ½  தே.கரண்டி
 • கரம்மசாலா தூள் – 1/4 தே.கரண்டி
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை :
சிக்கனை சுத்தம் செய்து Medium size துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.

முதலில் சிக்கனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


பிறகு வெங்காயம் சேர்த்து திரும்பவும் நன்றாக கலந்து வைக்கவும்.


அடுத்து தக்காளி சேர்த்து பிசைந்து விடவும்.


அதன் பிறகு, மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.


கடைசியில் கருவேப்பில்லை + பச்சைமிளகாயினை சேர்த்து பிரட்டிவிடவும். இதனை அப்படியே சுமார் 10 நிமிடங்கள் ஊறவிடவும்.


கடாயில் ஊறவைத்த சிக்கனை அப்படியே போட்டு தட்டு போட்டு மூடி வேகவிடவும். (கவனிக்க : தண்ணீர்  சேர்க்க வேண்டாம்..அதில் இருந்து வரும் தண்ணீரே போதுமானது)


3 – 4 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறிவிடவும்.


நன்றாக வெந்து தண்ணீர் வற்றிய பிறகு கரம்மசாலா தூள் + எண்ணெய் 1 தே.கரண்டி சேர்த்து வறுத்து எடுக்கவும்.


சூப்பரான சுவையான சிக்கன் வெப்புடு ரெடி. இதனை கலந்த சாதம் , சாம்பார், ரசம் , சப்பாத்தி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

9 comments:

Asiya Omar said...

சூப்பர் யம்மி.

Participate in My First Event - Feast of Sacrifice Event
http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html


Saraswathi Tharagaram said...

Veppudu supera iruku...My H is a chicken lover.. sure will try this for him..

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் ஒரு பத்து நாட்கள் போகட்டும்... செய்திடுவோம்.... நன்றி சகோதரி...

Priya Satheesh said...

Delicious!!!!

Valarmathi Sanjeev said...

Wow.....chicken fry looks super yummy..looks tempting and delicious.

Priya said...

Yum yum, irresistible vepudu.;

S.Menaga said...

சூப்பர்...ரொம்ப நல்லாயிருக்கு....

Tamilarasi Sasikumar said...

super a eruku...love it...First timr here...Happy to follow you..:)

Ranjani Narayanan said...

அன்புள்ள திருமதி கீதா,

உங்களின் பதிவுகளை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

இணைப்பு இதோ:

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html

வருகை தருக, ப்ளீஸ்

Related Posts Plugin for WordPress, Blogger...