பாகற்காய் தொக்கு - Pavakkai Thokku / Bitter gourd Thokkuபாகற்காய் என்றாலே மிகவும் கசப்பாக இருக்கும்…நாங்க சாப்பிட மாட்டோம் என்று நிறைய பேர் சொல்லுவாங்க….இந்த மாதிரி தொக்கு செய்து பாருங்க… அப்பறம் பாகற்காயினை எப்பொழுதும் மறக்காமல் காய்கறி வாங்கும் பொழுது சேர்த்து கொள்வோம்…

என்னுடைய Friend மஞ்சுளாவிடம் பேசிய பொழுது அவங்க சொன்ன ரெஸிபி தான் இது ..இந்த தொக்கிற்கு கூடுதலாக எண்ணெய் சேர்த்து கொண்டால் 10 நாட்கள் வரை Fridgeயில் வைத்து சாப்பிடலாம்.

பாகற்காயில் அதிக அளவு விட்டமின்ஸ் , Iron, நார்சத்து இருக்கின்றது. இதில் சக்கரையின் அளவினை குறைக்க பெரிதும் உதவுக்கின்றது. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் கண்டிப்பாக சாப்பாட்டில் சேர்த்து கொள்ள கூடிய காய்….100 கிராம் பாகற்காயினை சமைத்த பிறகு சுமார் 25 – 30 கலோரில் தான் இருக்கின்றது.

கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
பாகற்காய் – 1/2 கிலோ
·        வெங்காயம் – 2 பெரியது
·        தக்காளி – 2 பெரியது

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

வறுத்து பொடித்து கொள்ள :
·        அரிசி – 1 மேஜை கரண்டி
·        துவரம் பருப்பு – 2 மேஜை கரண்டி
·        சீரகம் – 1 மேஜை கரண்டி

கரைத்து கொள்ள :
·        புளி – சிறிய எலுமிச்சை பழம் அளவு
·        தண்ணீர் – 3 கப்

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 4 மேஜை கரண்டி
·        கடுகு – 1/2 தே.கரண்டி
·        உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி

செய்முறை :
·        பாகற்காயினை விதைகள் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம்+தக்காளியினை நறுக்கி வைக்கவும். வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து பொடித்து கொள்ளவும். புளியினை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைக்கவும்.


·        கடாயில் முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றி தாளித்து கொள்ளவும். இத்துடன் பாகற்காயினை சேர்த்து சுமார் 3 – 4 நிமிடங்கள் வதக்கவும்.
·        பாகற்காய் வதங்கியவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


·        வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளி + தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.


·        அனைத்து நன்றாக வதங்கிய பிறகு புளி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். அனைத்து நன்றாக வரும் வரை கிளறிவிட்டு வேகவிடவும்.
·        கடைசியில் வறுத்து பொடித்த பொடியினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கிவிடவும்.


·        சுவையான பாகற்காய் தொக்கு ரெடி. சாதம் , ரசம் , இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
கடைசியில் பொடியினை சேர்க்கும் பொழுது வெல்லம் சிறிய துண்டு சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற அவசிய சமையல் குறிப்பு...

நன்றி...

Akila said...

Kelvi pattadhu illa... But want to try it surely...

Event: Dish name starts with P

Easy (EZ) Editorial Calendar said...

கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லறேன்...இன்னும் நிறைய எழுத என் பாராட்டுகள்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

eswari sekar said...

nanrga ullathu

Aruna Manikandan said...

Healthy and delicious thokku :)

Premalatha Aravindhan said...

wow very thokku recipe,luks gr8!

Priya said...

Cant wait to try this fabulous thokku, definitely fingerlicking.

இமா said...

வைத்திருந்து சாப்பிடலாம் என்கிறீங்க. கட்டாயம் ட்ரை பண்ணுவேன்.

Jaleela Kamal said...

மிக அருமையான குறீப்பு

Priyajanish said...

Akka nan seithu parthen akka Superaa irunthuchu thank you...

kutty said...

super taste...

kutty said...

super taste...

Related Posts Plugin for WordPress, Blogger...