ஸ்டஃப்டு எண்ணெய் கத்திரிக்காய் - Stuffed ennai kathirikkai /Stuffed Brinjal recipeமிகவும் சுவையான ஸ்டஃப்டு எண்ணெய் கத்திரிக்காய்…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்…நன்றிஆசியா அக்கா

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·        குட்டி கத்திரிக்காய் – 1/2 கிலோ
·        வெங்காயம் – 1
·        தக்காளி – 1
·        இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேஜை கரண்டி
·        கரம் மசாலா – 1/4 தே.கரண்டி
·        கொத்தமல்லி ,கருவேப்பில்லை – சிறிதளவு
·        உப்பு – தேவைக்கு

வறுத்து அரைக்க :
·        மிளகாய் வற்றல் – 5
·        தனியா – 2 தே.கரண்டி
·        சோம்பு – 1 தே.கரண்டி
·        சீரகம் – 1 தே.கரண்டி
·        மிளகு – 1/2 தே.கரண்டி
·        வெந்தயம் – 1/4 தே.கரண்டி
·        கடுகு – 1/4 தே.கரண்டி
·        எள் – 2 தே.கரண்டி
·        வேர்க்கடலை – 2 தே.கரண்டி
·        தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·        முந்திரி – 4

தாளிக்க :
·        நல்லெண்ணெய் – 4 மேஜை கரண்டி
·        கடுகு – 1 தே.கரண்டி
·        உளுத்தம்பருப்பு – 1 தே.கரண்டி
·        கருவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை:
·        வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக தனி தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்.


·        வறுத்த பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.


·        வெங்காயம் + தக்காளியினை ஒன்றும் பாதியுமாக அரைத்து வைக்கவும்.


·        கத்திரிக்காயினை காம்பு பக்கமாக நறுக்கி கொண்டு அதில் நாம் வறுத்து அரைத்த பொருட்களை ஸ்டஃப் செய்யவும்.


·        குக்கரில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளிக்கவும்.


·        இத்துடன் இஞ்சி பூண்டு விழுது + கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு, ஸ்டஃப்டு செய்து வைத்து இருக்கும் கத்திரிக்காயினை சேர்க்கவும்.


·        2 – 3 நிமிடங்கள் அப்படியே கத்திரிக்காயினை வேகவிடவும் பிறகு இத்துடன் அரைத்து வைத்து இருக்கும் வெங்காயம் + தக்காளி விழுதினை சேர்க்கவும்.·        சுமார் 4 – 5 நிமிடங்கள் அனைத்து நன்றாக கிளறிவிட்டு வேகவிடவும்.


·        தேவையான அளவு உப்பு + 1 கப் அளவிற்கு புளி தண்ணீர் கரைத்து இதில் ஊற்றவும். குக்கரினை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும்.


·        சுவையான ஸ்டஃப்டு எண்ணெய் கத்திரிக்காய் ரெடி.கடைசியில் கொத்தமல்லி சிறிதளவு சேர்க்கவும்.  இதனை பிரியாணி, கலந்த சாதம், தயிர் சாதம்,சப்பாத்தி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


 குறிப்பு :
அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல மசாலாவிற்கு கூட்டு கொள்ளவும்.

11 comments:

Tamilarasi Sasikumar said...

looks yum...

இமா said...

அடையாளம் செய்து வைக்கிறேன். நிச்சயம் எப்போவாவது செய்து பார்ப்பேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்ப்... செய்து பார்க்க வேண்டும்... நன்றி...

Easy (EZ) Editorial Calendar said...

சிலருக்கு கத்தரிக்கா ஒத்துக்காதே!!!!!!

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Lakshmi said...

ஸ்ட்ஃப்ட் எண்ணைக்கத்தரிக்காய் செய்முறையும் படங்களும் சிறப்பு. உடனே செய்து பார்க்கனும்னுதோனுது

Manickam sattanathan said...

எனாகு மிக மிக பிடித்த வகை இது, வெறும் சாதத்துடன் கொஞ்சம் நல்ல எண்ணெய் விட்டு இதனை கலந்து சாப்பிட்டால் ஆஹா.....சுவையோ சுவை . மற்ற வகைகளை இதன் காலில் கட்டித்தான் அடிக்க வேண்டும்.

Manickam sattanathan said...

எனாகு மிக மிக பிடித்த வகை இது, வெறும் சாதத்துடன் கொஞ்சம் நல்ல எண்ணெய் விட்டு இதனை கலந்து சாப்பிட்டால் ஆஹா.....சுவையோ சுவை . மற்ற வகைகளை இதன் காலில் கட்டித்தான் அடிக்க வேண்டும்.

ஹுஸைனம்மா said...

ஆஹா, இன்னிக்கு இதுதான் செஞ்சேன் மதியத்திற்கு. மசாலா வறுத்து அரைப்பது கிடயாது, வீட்டில் இருக்கும் கறிமசாலா போடுவேன். மற்றப்டி எல்லாம் இதேதான்.

ஆமாம், கத்தரிக்காய்தான் வெறும் சட்டியில் போட்டாலே சீக்கிரம் வெந்துடுமே, அப்புறம் ஏன் குக்கரில் வைக்கணும்? கூழாகி விடுமேப்பா?

Priya said...

Mouthwatering here, attagasama irruku ennai kathirikkai, tempting.

Asiya Omar said...

சூப்பராக செய்திருக்கீங்க..மிக்க நன்றி கீதாஆச்சல்.என் குறிப்புக்களையும் செய்து பார்த்து பகிர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி.

GEETHA ACHAL said...

அனைவருக்கும் மிகவும் நன்றி...

ஹுஸைனம்மா ரொம்ப நன்றி..கத்திரிக்காய் சீக்கிரமாக தான் வெந்துவிடும். ஆனால் குக்கரில் செய்தால் அடிக்கடி கிளறிவிட வேண்டாம். கிளறிவிடாமல் இருந்தால் உடையாமல் நன்றாக வரும்...என்னுடைய படத்தினை பார்த்துவிட்டு சொல்லாதிங்க ஏனா உடைந்துவிட்டது...

ஆசியா அக்கா செய்யும் பொழுது மிகவும் சூப்பராக வந்து இருந்தது...நான் கொஞ்சம் ஒழுங்காக கிளறாமல் உடைந்துவிட்டது..

கண்டிப்பாக கூழாகி விடாது..செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...