கினோவா ரோமா பீன்ஸ் புலாவ் - Quinoa Roma Beans Pulaoரோமா பீன்ஸ் மிகவும் சுவையான பீன்ஸ். இதில் மிகவும் அதிக அளவு நார்சத்து , Protein , Calcium மற்றும் Iron சத்துகள் நிறைந்து உள்ளன. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இது போன்ற பருப்பு வகைகளை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

கினோவாவிலும் நார்சத்து மற்றும் Minerals இருக்கின்றது. நமக்கு WHOLE GRAIN ஆக கினோவா கிடைப்பதால் உடலிற்கு மிகவும் நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கினோவா – 2 கப்
·        ரோமா பீன்ஸ் – 1/2 கப்
·        எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி

நறுக்கி கொள்ள  :
·        வெங்காயம் – 1
·        தக்காளி – 1
·        பூண்டு – 4 பல்
·        இஞ்சி – சிறிய துண்டு
·        கொத்தமல்லி – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க:
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        சோம்பு தூள் – 1/2 தே.கரண்டி

செய்முறை :
வெங்காயம் + தக்காளியினை நறுக்கி கொள்ளவும். பூண்டு + இஞ்சியினை பொடியாக வெட்டி வைக்கவும்.

பிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளித்து பிறகு பூண்டு + வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி + இஞ்சி சேர்த்து வதக்கவும்.


இத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.


வதக்கிய பொருட்களுடன்  2 கப் தண்ணீர் + ரோமா பீன்ஸ் + கினோவா சேர்த்து கொள்ளவும்.குக்கரினை மூடி போட்டு 1 விசில் வரும் வரை வேகவிடவும். பிரஸர் அடங்கியதும் எலுமிச்சை சாறு + கொத்தமல்லி  சேர்த்து கிளறிவிடவும்.


சுவையான சத்தான புலாவ் ரெடி. இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
1 கப் தண்ணீர் + 1 கப் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

எப்பொழுதும் 1 கப் கினோவாவிற்கு 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 1 விசில் வரும் வரை வேகவிட வேண்டும்.

11 comments:

Sangeetha Nambi said...

Real healthy one...
http://recipe-excavator.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்...! சூப்பரான புலாவ்...!

நன்றி...

Nandini said...

This pulao's packed with proteins! Looks delicious!

Kanchana Radhakrishnan said...

nice recipe.

priya satheesh said...

Very healthy...Never tried recipe with quinoa....will try!!

Asiya Omar said...

Healthy recipe.

Friends Participate in Healthy Food for Healthy Kids - Wraps and Rolls.
http://www.asiyama.blogspot.com/2012/11/healthy-food-for-healthy-kids-event.html

Priya said...

Wat a nutritious,super filling one pot meal,loving this quinoa pulao.

Saraswathi Tharagaram said...

Really a tasty dish with Quinao..They goes well with Roma beans..

Vijiskitchencreations said...

very helathy recipe. I will try soon. Geetha.

Shama Nagarajan said...

delicious and inviting...

usha said...

I tried this came out very tasty. I loved it.In my cooker one whistle was not enough , that's the only set back i had.
The taste was superb, everyone in my family loved it.
Thankyou for showing us such a healthy dish

Related Posts Plugin for WordPress, Blogger...