ரசகுல்லா - Rasgulla / Diwali Sweets / Paneer Recipesசமைக்க தேவைப்படும் நேரம் : 2 மணி நேரம்
தேவையான பொருட்கள்  :
·        பால் – 1 லிட்டர்
·        எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி

சக்கரை சிரப் செய்ய :
·        சக்கரை – 2 கப்
·        தண்ணீர் – 4 கப்
·        ஏலக்காய் – 1 (பொடித்தது)

செய்முறை :
·        ஒரு அகலமான பாத்திரத்தில் பாலினை ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு மிதமான தீயில் வைக்கவும்.


·        பால் நன்றாக கொதித்த பிறகு,மிதமான தீயில் இருக்கும் பொழுது எலுமிச்சை சாறு பிழிந்து கிளறிவிடவும்.


·        கண்டிப்பாக கிளறிவிட்டு கொண்டே இருக்கவும். இப்பொழுது பால் திரிந்து, பன்னீர் வர ஆரம்பிக்கும். இப்பொழுது பன்னீர் ரெடி.


·        ஒரு துணியில் பன்னீரினை வடிகட்டி கொள்ளவும். பன்னீரினை தண்ணீரில் நன்றாக அலசி கொள்ளவும். ( இப்படி அலசி கொள்வதால் , எலுமிச்சை சாறின் புளிப்பு தன்மை நீங்கி விடும்.)


·        தண்ணீர் நன்றாக வடிய விடவும். (சுமார் 1 மணி நேரம் தொங்கவிட்டால தண்ணீர் அனைத்தும் வடிந்து இருக்கும்.)

·        இப்பொழுது பன்னீர் ரெடி. இதனை தட்டில் போட்டு சுமார் 4 – 5 நிமிடங்கள் நன்றாக பிசைந்து கொள்ளவும்.


·        பிசைந்த பன்னீரினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·        சக்கரை  + தண்ணீர் + ஏலக்காய் சேர்த்து பிரஸர் குக்கரில் போட்டு கொதிக்கவிடவும்.


·        நன்றாக தண்ணீர் கொதிக்கும் பொழுது உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்க்கவும். பிரஸர் குக்கர் மூடியினை முடி 3 விசில் வரும் வரை வேகவிடவும்.


·        பிரஸர் அடங்கியதும் திறந்து பார்த்தால் சுவையான ரசகுல்லா ரெடி.


கவனிக்க:
அகலமான பிரஸர் பன் பயன்படுத்தினால் மிகவும் நல்லது. ரசகுல்லா உருண்டைகள் தண்ணீரில் போட்டவுடன் இரண்டு பங்காக ஆகிவிடும்.

எலுமிச்சை சாறுக்கு பதிலாக Vinegar கூட பயன்படுத்தலாம்.

பால் திரிந்த பிறகு Ice Cubes சேர்த்தால் பன்னீர் மிகவும் Soft ஆக இருக்கும்.

பால் திரிந்த பிறகு இருக்கும் தண்ணீர் உடலிற்கு மிகவும் நல்லது. அதனை சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது அல்லது பேக்கிங் அல்லது சூப் செய்யும் பொழுது போன்றவையிற்கு பயன்படுத்தலாம்.

11 comments:

Saraswathi Tharagaram said...

Diwali kalakattudhu Geetha..Super recipe and my hubby fav..

Dish in 30 minutes event with Giveaway ~ sweets

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... பலமுறை முயற்சித்தும் இது போல் வரவில்லை... வீட்டில்
செய்முறை குறிப்பை குறித்துக் கொண்டார்கள்... பார்க்கலாம் இந்த முறை...!

நன்றி...

Megala said...

I tried and felt the good taste of Rasagulla :)

Ramya Krishnamurthy said...

Hi!nice recipe.Shall we follow each other?will you support me in this world?

S.Menaga said...

One of my fav sweet,prepared it very well!!

Priya said...

SUper spongy rasagullas, azhaga irruku.

RAKS KITCHEN said...

Deepavali vandhuduche! Looks very tempting geetha

கவிநயா said...

ஒவ்வொரு stage-ம் படத்துடன் தந்திருப்பதால் மிகவும் உதவியாக இருக்கிறது :) சுலபமாகக் கூடத் தெரிகிறது. சீக்கிரம் செய்து பார்க்க வேண்டும். மிக்க நன்றி கீதா.

Asiya Omar said...

சூப்பர் ரச்குல்லா.

Healthy Food for Healthy Kids Series- Wraps and Rolls.
http://www.asiyama.blogspot.com/2012/11/healthy-food-for-healthy-kids-event.html

Pradeepa Rineesh said...

very nice to see... i am going to try today itself... thanks for posting

Pradeepa Rineesh said...

Nice to see... today itself i am going to try, thanks for posting

Related Posts Plugin for WordPress, Blogger...