பிரவுன் ரைஸ் உப்புமா - Brown Rice Upma - Easy Breakfastஎளிதில் செய்ய கூடிய காலை நேர சத்தான டிபன்…நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

ஊறவைத்து கொள்ள : 1 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பிரவுன் ரைஸ் – 2 கப்
·        வெங்காயம் – 1
·        இஞ்சி – சிறிய துண்டு
·        உப்பு - தேவைக்கு

ரவையாக உடைக்கும் பொழுது சேர்த்து கொள்ள :
·        சீரகம் – 1 தே.கரண்டி
·        கடலைப்பருப்பு – 2 மேஜை கரண்டி

தாளிக்க:
·        எண்ணெய் – சிறிதளவு
·        கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க
·        காய்ந்த மிளகாய் – 2
·        கருவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை :
·        பிரவுன் அரிசியினை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.


·        நன்றாக அரிசியினை கழுவிய பிறகு, காய்ந்த துணியில் அரிசியினை தண்ணீர்  இல்லாமல் 1/2 மணி நேரம் காயவிடவும்.


·        பிரவுன் ரைஸ் + சீரகம் + கடலைப்பருப்பு சேர்த்து மிக்ஸியில் அரிசியினை ஒன்றும்பாதியுமாக Pulse Modeயில் அரைத்து கொள்ளவும்.


·        குக்கரில் முதலில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.


·        அத்துடன் வெங்காயம் + இஞ்சி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

·        வெங்காயம் வதங்கியதும் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அரைத்த அரிசியினை சேர்த்து வேகவிடவும்.


·        சுவையான சத்தான பிரவுன் ரைஸ் உப்புமா ரெடி. இதனை சாம்பார், சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

கவனிக்க :
பிரஸர் குக்கர் என்றால் 1 விசில் வரும் வரை வேகவிடவும்.

அரைத்த அரிசியினை Air tight Container யில் 2 - 3 வாரம் வரை வைத்து கொள்ளலாம்.

9 comments:

Manickam sattanathan said...

ஐயோ சாமீ.... இதற்க்கு வேறு ஒரு பெயரும் உண்டு... அதை இங்கு சொன்னால் மாதர் குல திலகங்கள் என்னை உண்டு இல்லை என ஆக்கிவிடுவார்கள். வேண்டாம்...... இந்த அரிசி உப்புமாவுக்கு இப்படியும் ஆங்கிலத்தில் ஒரு பெயர்?
இரவு நேரத்தில் , மழை காலங்களில் செய்யப்படும் உப்புமா இது. இரவில் சூடாக கத்தரிக்காய் கொஸ்துடன் தின்னுவிட்டு ஒரு டம்ளர் சூடாக பில்டர் காபி குடித்தால் போதும் சிவனே...

Priya said...

Superaa irruku intha healthy upma, thanks for sharing Geetha.

Kitchen Queen said...

healthy upma.

Lakshmi said...

ப்ரௌன் ரைஸ் உப்மா செய்முறை விளக்கமும் படங்களும் ருசியா இருக்கு. சத்தான காலை நேர சிற்றுண்டியும் கூட

Kanchana Radhakrishnan said...

சூப்பரா இருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... அருமை...
செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

Vidhya said...

very healthy upma

www.iyercooks.com

Chitra said...

Healthy upma. I have tried only idlies.. will try this.. I tried ambur briyani using vegetables after seeing urs. It was very nice . planning to post in my blog too. Thanks :)

Sangeetha Nambi said...

Real healthy upma...
http://recipe-excavator.blogspot.com

Related Posts Plugin for WordPress, Blogger...