மீன் பிரியாணி - 2 / Fish Biryani - 2மிகவும் சுவையான மீன் பிரியாணி…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…. அஸ்மா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த பிரியாணி…மிகவும் சூப்பராக இருந்தது…நன்றி

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
பிரியாணி மீன் தேவையான பொருட்கள் :
·        மீன் துண்டுகள் – 6 - 8
·        முட்டை – 1
·        கடலைமாவு – 3 மேஜை கரண்டி
·        மிளகு தூள், சீரகம் தூள்– தலா 1 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
·        மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

பிரியாணி செய்ய :
·        பாஸ்மதி அரிசி – 3 கப்
·        தயிர் – 1 கப்
·        பால் – 1 கப்
·        சிக்கன் ஸ்டாக் – 2 கப்
·        அரைத்த தேங்காய் விழுது – 2 மேஜை கரண்டி
·        இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·        எலுமிச்சை – பாதி பழம்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 1 பெரியது + 1
·        தக்காளி – 2
·        பச்சைமிளகாய் – 5
·        கேரட் – 1 சிறியது
·        புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

முதலில் தாளிக்க :
·        எண்ணெய், நெய் – சிறிதளவு
·        பட்டை , கிராம்பு, ஏலக்காய்

செய்முறை :

மீன் துண்டுகளை சுத்தம் செய்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுது + மிளகு சீரகம் தூள் + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு + 1 தே.கரண்டி எலுமிச்சை சாறு + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மீன் துண்டுகள் மீது தடவி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.


பிறகு சிறிதளவு எண்ணெயில் தோசை கல்லில் போட்டு மீன் துண்டுகளை வறுத்து எடுக்கவும்.


ஒரு பத்திரத்தில் கடலை மாவு + உப்பு + முட்டை +சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கி கொள்ளவும்.


திரும்பவும் வறுத்த மீன் துண்டுகளை கலக்கி வைத்து இருக்கும் கடலைமாவு கலவையில் முக்கி எடுத்து மீண்டும் பொரிக்கவும். இப்பொழுது பிரியாணிக்கான மீன் துண்டுகள் ரெடி.


பெரிய வெங்காயத்தினை நீளமாக வெட்டி அவனில் 450Fயில் Broil Modeயில் வறுத்து கொள்ளவும். (அல்லது) எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.(அவன்செய்முறையினை காண இங்கே க்ளிக் செய்யவும்.)

வெங்காயம் + தக்காளியினை நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும். கேரட் , புதினா, கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.

பாஸ்மதி அரிசியினை நன்றாக கழுவி அத்துடன் 1 கப் பால் + 4 கப் தண்ணீர் சேர்த்து சுமார் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.


பிரியாணி செய்யும் பாத்திரத்தில் முதலில் நெய் + எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பட்டை+கிராம்பு + ஏலக்காய் சேர்த்து தாளித்த பிறகு வெங்காயம் + பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


பிறகு கேரட் + தக்காளி + புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.


இதன் பின்னர் தயிர் + அரைத்த தேங்காய் விழுது + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் + சிக்கன் ஸ்டாக் + தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.


5 – 6 நிமிடங்கள் கழித்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். இப்பொழுது 1 கப் அளவு குருமாவினை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். (கடைசியில் சேர்த்து கொள்வதற்காக…)


பாத்திரத்தில் இப்பொழுது அரிசி ஊற வைத்த தண்ணீர் (தண்ணீர் + பால் சேர்த்தது) எடுத்து ஊற்றி கொதிக்கவிடவும்.


நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அரிசியினை சேர்த்து முக்கால் பதம் மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.


சாதம் பதமாக வெந்தவுடன், உடையாமல் கிளறிவிடவும். பாதி சாதத்தினை தனியாக எடுத்துவிட்டு அதன் மீது தயார் செய்து வைத்துள்ள மீனை வைத்து அத்துடன் தனியாக எடுத்து வைத்த 1 கப் குருமாவினை பரவி விடவும்.


அதன் பிறகு மீதி சாதத்தினை அதன் மீது பரவி விட்டு, அவனில் பொரித்த வெங்காயம் + கொத்தமல்லியினை தூவி விடவும்.


கலர் சேர்க்க விரும்பினால் சிறிது தண்ணீரில் கலரினை கரைத்து சாத்தின் மீது ஊற்றிவிடவும். இதனை தட்டு போட்டு மூடி மிகவும் சிறிய தீயில் 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேகவிடவும்.


சுவையான மீன் பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...