பண்டா எக்ஸ்ப்ரஸ் ப்லக் பெப்பர் சிக்கன் - Panda Express Black Pepper ChickenPanda Expressயில் கிடைக்கும் Black Pepper chicken இது. இதனை Saladஆக அல்லது Fried Riceயுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

இதில் செலரியின் சுவை நன்றாக இருக்கும். எப்பொழுதும் செலரியினை Blue cheese அல்லது Ranchயுடன் தான் சாப்பிடுவேன்..ஆனால் இதில் செலரியினை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்… நன்றி மைதிலி…

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·        சிக்கன்  (Boneless Skinless Chicken Breast ) – 2
·        செலரி (Celery ) – 1
·        வெங்காயம் – 1 பெரியது
·        மிளகு – 2 மேஜை கரண்டி (கொரகொரப்பாக பொடித்தது)
·        உப்பு – தேவையான அளவு
·        எண்ணெய் – சிறிதளவு
  
சிக்கனுடன் கலந்து கொள்ள :
·        சோயா சாஸ் – 1 மேஜை கரண்டி  + 1 மேஜை கரண்டி
·        இஞ்சி – 1 சிறிய துண்டு
·        சில்லி வினிகர் – 1 தே.கரண்டி + 1 தே.கரண்டி
·        கார்ன் மாவு – 2 மேஜை கரண்டி

செய்முறை :
·        சிக்கனை சிறிய சிறிய நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெங்காயம் + செலரியினை அதே மாதிரி நீளமான மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். 


·        சிக்கனுடன்  1 மேஜை கரண்டி சோயா சாஸ் + பொடியாக நறுக்கிய இஞ்சி + 1 தே.கரண்டி வினிகர் + கார்ன் மாவு + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து சுமார் 5 – 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.


·        கடாயினை நன்றாக சூடுபடுத்து கொள்ளவும். அதில் 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி ஊறவைத்துள்ள சிக்கனை போட்டு வேகவிடவும். (கவனிக்க : High Flameயில் வைத்து தான் சிக்கனை வேகவிட வேண்டும். சிக்கனை தட்டு போட்டு மூடி வேக வைக்க வேண்டாம். )


·        சிக்கன் நன்றாக வெந்த பிறகு தனியாக எடுத்து வைத்து அதே கடாயில் மேலும் 1 மேஜைகரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் + செலரியினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும். ( கவனிக்க : காய்கள் Crunchyயாக இருக்க வேண்டும். இதனையும் High Flameயில் வைத்தே சமைக்கவும். )·        இத்துடன் வேகவைத்துள்ள சிக்கனை சேர்த்து திரும்பவும் மீதும் உள்ள 1 மேஜை கரண்டி சோயா சாஸ் + சில்லி வினிகர் + கொரகொரப்பாக பொடித்த மிளகு தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறிவிடவும்.


·        சுவையான எளிதில் செய்ய கூடிய ப்ளாக் பெப்பர் சிக்கன் ரெடி. இதனை Fried Rice அல்லது Saladயுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


கவனிக்க :
·        அனைத்து பொருட்களையும் High Flameயில் வைத்து தான் சமைக்க வேண்டும்.

·        பொதுவாக இதற்கு Ginger Soy Sauce தான் பயன்படுத்துவாங்க…அதற்கு பதில் Soya Sauce + பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை பயன்படுத்து கொள்ளலாம்.

·        அதே மாதிரி Chili Vinegar யிற்கு பதிலாக Vinegarயுடன் பொடியாக நறுக்கிய Jalapeño Peppersயினை பயன்படுத்தலாம். 2 comments:

Priya said...

Naan kuda celerya mayonnaise kuda than saapiduven, but with fried rice this chicken dish will go awesomena, seekarama samachiduren.

Shama Nagarajan said...

super tempting and inviting

Ongoing events:Fast Food - Poha .
Know your dairy - Milk Events
in my blog.

Related Posts Plugin for WordPress, Blogger...