சவுத்வெஸ்ட் சிக்கன் சூப் - Southwest Chicken Soup - Healthy Soup Recipeஇந்த சூப் பார்த்தற்கு ரொம்ப  சிம்பிளாக இருந்தாலும் மிகவும் சுவையான சத்தான சூப்.


இந்த சூப்பின் சிறப்பே, இதில் குடைமிளகாயினை நெருப்பில் சூட்டு பிறகு அதனை சேர்த்து கொள்வது தான். இந்த சூப் தண்ணிர் மாதிரி இல்லாமல் கொஞ்சம் Thick Consistencyயில் தான் இருக்கும். விரும்பினால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

இதனை spoonயிற்கு பதிலாக Tortilla Chipsயில் எடுத்து கூட சாப்பிடுவாங்க...சிக்கன் சாப்பிடாதவர்கள், சிக்கனுக்கு பதிலாக நிறைய Beans வகையினை சேர்த்து கொள்ளவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள் -  1 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
·        குடைமிளகாய் – சிவப்பு& பச்சை (Bell Peppers)
·        ஆலிவ் எண்ணெய் – 1 தே.கரண்டி

வெட்டி கொள்ள :
·        வெங்காயம் – 1
·        பூண்டு – 2 பல் (நசுக்கி கொள்ளவும்)
·        செலரி – 1 (1  கப் அளவிற்கு எடுத்து கொள்ளவும்)
·        தக்காளி – 2

பருப்பு வகைகள்:
·        Pinto Beans, Kidney Beans , Romano Beans, chick Peas – 2 கப்
(எந்த வகை பீன்ஸினையும் சேர்த்து கொள்ளலாம்.

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        சீரக தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·        வெங்காயம் + தக்காளி + செலரியினை வெட்டிகொள்ளவும்.  பூண்டினை நசுக்கி கொள்ளவும். பருப்பினை ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். (உப்பு இல்லாத Canned Beansயினையும் பயன்படுத்து கொள்ளவும். )


·        பத்திரத்தில் ஆலிவ் ஆயில் 1 தே.கரண்டி ஊற்றி பூண்டினை சேர்த்து வதக்கிய பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        வெங்காயம் வதங்கிய பிறகு செலரியினை சேர்த்து வதக்கவும்.

·        அதன் பிறகு தக்காளி + தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.


·        இத்துடன் வேகவைத்த பருப்பினை சேர்த்து கொள்ளவும்.


·        பிறகு சிக்கன் ஸ்டாக்  2 கப் + சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.


·        இதற்கிடையில், குடைமிளகாயினை அடுப்பில் வைத்து சுட்டு கொள்ளவும்.


·        ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போட்டு 30 sec கழித்து எடுத்து விட்டு சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு, Paper Towelயினை Wet செய்து கொண்டு, சுட்ட தோலினை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.


·        நன்றாக கொதிக்கும் பொழுது சிக்கனை சேர்த்து கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள சிவப்பு +பச்சை குடைமிளகாயினையும் சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.


·        சுமார் 10 – 15 நிமிடங்கள் வேகவிடவும். விரும்பினால் Tex-Mex Cheese சேர்த்து கொள்ளவும்.


·        சுவையான ஹெல்தியான சூப் ரெடி. இதனை Tortilla Chips, Crackers போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
இதனை Slow Cooking மாதிரி சுமார் 1 மணி நேரம் வரை குறைந்த தீயில்  வேகவைத்தால் சூப்பராக இருக்கும்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல பருப்பு வகையினை சேர்த்து கொள்ளவும்.

கண்டிப்பாக Bellpeppersயினை சூட்டு செய்தால் தான் சுவையாக இருக்கும்.


10 comments:

கோவை நேரம் said...

சூப்..அப்படின்னு சொல்றீங்க...பொரியல் மாதிரி இருக்கு..
படங்கள் அருமை..

Savitha Ganesan said...

Pictures romba clear a vandhirukku pa.super soup.Day light has made lot of changes.

Vimitha Anand said...

Romba healthy soup geetha... Romba naal aala kaanom... hope u r doing good and everything is fine

priya satheesh said...

Healthy n yummy yummy... Love to taste this!

ஸாதிகா said...

வித்தியாசமான சூப்தான்.

Chitra said...

Nice. Hope u enjoyed a lot :)

Jaleela said...http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_5444.html

http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_5444.html

Mahi said...

நான் கூட சவுத் வெஸ்ட் சாஸ் ஏதும் சேர்த்துருப்பீங்களோன்னு நினைச்சேன் கீதா! :) சுட்ட குடைமிளகாய் நல்ல வாசனையா இருக்கும்னு நினைக்கிறேன். தெளிவான படங்களுடன் குறிப்பிற்கு நன்றி!

Saraswathi Tharagaram said...

wow very healthy soup rich and colorful dear.

Asiya Omar said...

Looks yumm..

Related Posts Plugin for WordPress, Blogger...