ஆந்திரா கொடி கூரா - Andhra Kodi Kura - Chicken Curry


எப்பொழுதும் போல சிக்கன் ஒரே மாதிரி செய்து போர் அடித்துவிட்டதா… இந்த மாதிரி சிக்கனை கொஞ்சம் ஸ்பைசியாக செய்து பாருங்க… மிகவும் சுவையாக இருக்கும்.

என்னுடைய தோழி திருமதி.சவிதா,  இந்த க்ரேவி ரொம்ப அருமையாக இருக்கும் செய்து பாருங்க என்று சொன்னாங்க…அதே மாதிரியே மிகவும் சூப்பராக இருந்தது……

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/2 கிலோ
·        வெங்காயம் – 2
·        தக்காளி – 1
·        இஞ்சி பூண்டு – 1 மேஜை கரண்டி நசுக்கியது
·        கொத்தமல்லி – சிறிதளவு (கடைசியில் சேர்க்க)

சிக்கனுடன் ஊறவைக்க :
·        தயிர் – 2 மேஜை கரண்டி
·        மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைத்து கொள்ள :
·        பட்டை – 1 துண்டு
·        கிராம்பு – 3
·        கருவேப்பிலை இலை – 10 – 15 இலைகள்

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        சோம்பு – 1 தே.கரண்டி
·        கருவேப்பில்லை – சிறிதளவு

குழம்பில் சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        சீரக தூள் – 1 தே.கரண்டி
·        மிளகு தூள் – 1 மேஜை கரண்டி
·        உப்பு - தேவைக்கு

செய்முறை :
·        வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்து கொள்ளவும்.


·        சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து குறைந்தது 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.


·        வெங்காயம் + தக்காளியினை வெட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


·        வெங்காயம் வதக்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.


·        அதன் பிறகு, இஞ்சி பூண்டு நசுக்கியது சேர்த்து கொள்ளவும். (விரும்பினால் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.)


·        இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.


·        இத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        அதன் பிறகு வறுத்து அரைத்த தூளினை சேர்த்து கிளறிவிடவும். இத்துடன் குழம்பிற்கு தேவையான அளவு (சுமார் 1 + 1/2 கப்) தண்ணீர் சேர்த்து கொள்ளவும். உப்பின் அளவினை பார்த்து கொள்ளவும்.·        சும்மர் 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான ஆந்திரா சிக்கன் கொடி கூரா ரெடி.


குறிப்பு :
விரும்பினால் முந்திரி சிறிதினை வறுத்து அதனை பாலுடன் மிக்ஸியில் மைய அரைத்து இந்த சிக்கனில் கடைசியில் ஊற்றி  3 – 4 நிமிடங்கள் வேகவிடலாம். சுவை அருமையாக இருக்கும்.

தண்ணீரின் அளவினை  குறைந்து இதனை குழம்பு மாதிரி இல்லாமல் Dryஆகவும் செய்யலாம்.

கண்டிப்பாக கருவேப்பிலை சேர்த்து செய்தால் தான் சுவையாக இருக்கும்.


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன்... வித்தியாசமான சிக்கன் கறி... நன்றி...

Hema said...

There is nothing fragrant compared to the freshly ground spices.. and andra means spicy and no doubt the chicken gravy is a bit spicy.. I am also trying this .. I just have to add the ground masala!

Tamilarasi Sasikumar said...

Looks Delicious...

Priya Suresh said...

Andhra style chicken dishes ellame yennoda favourite,supera irruku.

கீத மஞ்சரி said...

மிகவும் எளிமையான முறையில் அசத்தலான சிக்கன் கறி. பகிர்வுக்கு நன்றி கீதா.

Jaleela Kamal said...

பார்க்கவே சூப்பராக இருக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...