முட்டை குழம்பு - Muttai Kulambu - Egg Kulambu


சமைக்க தேவைப்படும் நேரம் : 12 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        முட்டை – 5
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 1 பெரியது
·        பச்சை மிளகாய் - 2

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

அரைத்து கொள்ள :
·        தேங்காய் – 2 துண்டுகள்

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        பட்டை – சிறிய துண்டு
·        சோம்பு – 1/2 தே.கரண்டி

கடைசியில் சேர்க்க :
·        கருவேப்பில்லை – 5 இலை
·        கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·        வெங்காயம் + தக்காளியினை நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறிக்கி கொள்ளவும். தேங்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.


·        வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளி சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·        பிறகு இத்துடன் கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கொள்ளவும்.


·        இத்துடன் 2   - 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.


·        அரைத்த தேங்காய் விழுதினை இதில் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும். உப்பின் அளவினை பார்த்து சேர்த்து கொள்ளவும்.


·        ஒரு கொதி வந்தவுடன், முட்டையினை ஒவ்வொன்றாக உடைத்து தனி தனியாக ஒவ்வொரு ஒரத்திலும் ஊற்றிவிடவும். (கவனிக்க : கடாயில், ஒரே இடத்தில் இரண்டு முட்டைகளை ஊற்ற கூடாது. தனி தனி இடத்தில் ஊற்றி கொள்ளவும். )·        சுமார் 10 நிமிடங்கள் மிதமான தீயில் கடாயினை தட்டு போட்டு மூடி வேகவிடவும். (குறிப்பு : விரும்பினால், கடைசியில் முட்டைகளை திருப்பிவிட்டு மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடலாம். )


·        கடைசியில் கொத்தமல்லி + கருவேப்பில்லை தூவி பறிமாறவும். சுவையான எளிதில் செய்ய கூடிய முட்டை குழம்பு ரெடி.


கவனிக்க :
ஒரு  கிண்ணத்தில் முட்டையினை உடைத்து ஊற்றி அதனை குழம்பில் ஊற்றுவது மிகவும் ஈஸியாக இருக்கும்.

முட்டையின் மஞ்சள் கருவினை நீக்கி வெரும் வெள்ளை கருவினை வைத்தும் குழம்பு செய்யலாம். அப்படி மஞ்சள் கருவினை நீக்கினால், குழப்பினை 5 – 6 நிமிடங்கள் வேகவிட்டால் போதும்.

தேங்காய்  விழுதினை சேர்க்காமல் செய்தாலும் நன்றாக இருக்கும்.

தேங்காயினை அரைக்கும் பொழுது அத்துடன் சிறிது கசகசா சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


4 comments:

Tamilarasi Sasikumar said...

Looks delicious... my fav dish...

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் குறிப்பை எழுதும் போது, "கால் மணி நேரத்தில் முடிந்து விடுமா...?" என்று கேட்டார்கள்...!

நன்றி சகோதரி...

Priya Suresh said...

Chappathi and mutta kuzhambu, my fav combo..makes me hungry.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக இருக்கு தோசைக்கு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...