அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு - Arachu Vitta Chicken Kulambu / Chicken Gravy


இந்த க்ரேவியில் அனைத்து பொருட்களையும் அரைத்து சேர்ப்பதால் மிகவும் சுவையாக வித்தியசமாக இருக்கும்.

தேங்காயினை  சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். கொடுத்துள்ள அளவினை விட அதிகம் சேர்க்க வேண்டாம். சேர்த்தால் குருமா மாதிரி இருக்கும். சுவையிலும் வித்தியாசம் இருக்கும்.

சாதம், சப்பாத்தி, பூரி, தோசை போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/2 கிலோ
·        இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
·        எண்ணெய் - சிறிதளவு

நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 2
·        தக்காளி – 1 பெரியது
·        தேங்காய் – 1 துண்டு

வறுத்து அரைக்க :
·        தனியா – 2 மேஜை கரண்டி
·        காய்ந்த மிளகாய் – 5 - 6
·        சோம்பு – 1 தே.கரண்டி
·        சீரகம் – 1 தே.கரண்டி
·        மிளகு – 1 தே.கரண்டி
·        பட்டை - 1, கிராம்பு - 3, ஏலக்காய் – 2

சிக்கனுடன் ஊறவைத்து கொள்ள :
·        தயிர் – 2 மேஜை கரண்டி
·        மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – 1 தே.கரண்டி

கடைசியில் தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        சோம்பு – 1 தே.கரண்டி
·        கருவேப்பில்லை – 10 இலை

செய்முறை :
·        சிக்கனை துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை நீளமாக நறுக்கி வைக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அனைத்தும் ஒன்றாக சேர்த்து வறுத்து கொண்டு அதனை சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
·        சிக்கனை ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.


·        குக்கரில்  1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பிறகு, வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        வெங்காயம் வதங்கியவுடன், ஊறவைத்துள்ள சிக்கன் + தக்காளி சேர்த்து வதக்கவும்.


·        தேங்காயினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். சிக்கனுடன் அரைத்த தேங்காய் + 1/2 கப் தண்ணீர் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.


·        அதனுடன் பொடித்த பொடியில் 2 மேஜை கரண்டி அளவு + தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். (கவனிக்க : அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல பொடியின் அளவினை சேர்த்து கொள்ளவும். )


·        குக்கரினை மூடி 3 விசில் வரும் வரை வேகவிடவும்.·        கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து குழம்பில் சேர்க்கவும். சுவையான சிக்கன் குழம்பு ரெடி.கவனிக்க:
கண்டிப்பாக நிறைய தண்ணீர் சேர்க்க வேண்டாம். தண்ணீரின் அளவு அதிமாக இருந்தால் குழம்பு Thick Consistencyயில் இருக்காது.

தேங்காய் அதிகம் சேர்க்க கூடாது. அப்படி சேர்த்தால் குருமா மாதிரி ஆகிவிடும்.

கடைசியில் சோம்பு + கருவேப்பில்லை தாளித்தால் போதும்.

பொடித்த பொடியிலே பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாம் சேர்த்ததால் தனியாக தாளிக்க பயன்படுத்த வேண்டாம்.

Boneless Chicken இல்லாமால் , குழம்பிற்கு எலும்புடன் (Bone-In chicken) இருக்கும் சிக்கன் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

5 comments:

Anonymous said...

Really nice...:-))

Priya Anandakumar said...

Super Geetha romba nallairrukku, I too love the freshly prepared masala, gives unique flavor,wonderful aroma and taste.
Delicious and yummy chicken for sunday lunch...

திண்டுக்கல் தனபாலன் said...

சாம்பார் ஆனாலும் சரி... சிக்கன் குழம்பு ஆனாலும் சரி... அரைத்து விட்டால் அதன் சுவையே தனி தான்...

நன்றி...

hemalata said...

Delicious chicken curry, looks so inviting.

S.Menaga said...

குழம்பு சூப்பரா கமகமக்குது...

Related Posts Plugin for WordPress, Blogger...