ப்ரோக்கோலி துவரம் பருப்பு உசிலி - Broccoli Toor Dal usili - Healthy Side Dish
Broccoliயில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. இதில் விட்டமின்ஸ் (Vitamins A , c & K)  இருக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

இதில் அதிக அளவு Folic acid இருப்பதால், கர்பிணி பெண்கள் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது. ப்ரோக்கோலி  Birth Defect Fighter, இதனை சாப்பிடுவதால் குழந்தைகள் குறையில்லாமல் ஹெல்தியாக பிறக்கும்.

இத்துடன் பருப்பினை சேர்த்து செய்வதால் இது மிகவும் ஹெல்தியான உணவு.

பருப்பினை ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 12 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ப்ரோக்கோலி – 2 கப் நறுக்கியது
·        கருவேப்பிலை – 5 இலை
·        எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        கடுகு - தாளிக்க

அரைத்து கொள்ள :
·        துவரம் பருப்பு – 1 கப் ஊறவைத்தது
·        காய்ந்த மிளகாய் - 2

நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 1
·        பூண்டு – 6 பல்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே,கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
  
செய்முறை :
·        ப்ரோக்கோலியினை சிறிய சிறிய பூக்களாக வெட்டி கொள்ளவும். துவரம்பருப்பினை  தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். வெங்காயம் + பூண்டினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

·        ஊறவைத்த துவரம்பருப்பினை தண்ணீர் வடித்து அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.·        கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டினை சேர்த்து வதக்கவும்.


·        பூண்டு சிறிது வதங்கியதும் வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.


·        இத்துடன் அரைத்து வைத்துள்ள துவரம்பருப்பு + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து நன்றாக  3 – 4 நிமிடங்கள் வதக்கவும்.
·        அதன்பிறகு ப்ரோக்கோலியினை சேர்த்து தட்டு போட்டு மூடி வேகவிட்டவும். (2 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறிவிடவும்.)·        சுவையான சத்தான உணவு ரெடி. குழம்பு, ரசம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இதனை அப்படியே குழந்தைகளுக்கு சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து கலந்து கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.


குறிப்பு :
துவரம்பருப்பில் செய்வதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.

இதில் ப்ரோக்கோலி சேர்க்காமல் செய்தால் நன்றாக இருக்கும். அப்படியே துவரம்பருப்பு புட்டு மாதிரி இருக்கும்.

விரும்பினால் கடைசியில் சிறிது தேங்காய் துறுவல் சேர்த்து கொள்ளலாம்.


துவரம்பருப்புடனே காய்ந்த மிளகாய் சேர்த்து அரைப்பதால் தனியாக தூள் சேர்க்க வேண்டாம். அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல மிளகாயினை சேர்த்து கொள்ளவும். 

8 comments:

Veena Theagarajan said...

interesting combo

Shama Nagarajan said...

semma combo..yummy

திண்டுக்கல் தனபாலன் said...

சத்துள்ள சமையல் குறிப்பு... நன்றி...

சங்கவி said...

Super... but pasikathu ippa

Vimitha Anand said...

Healthy dish Geetha

Mahi said...

வெங்காயம் சேர்த்து பருப்பு உசிலி இதுவரை செய்ததில்லை. ப்ரோக்கலி உசிலி செய்வேன், அடுத்த முறை இந்த ரெசிப்பிய செய்துபார்க்கிறேன்! :)

Priya Suresh said...

Omg, wat a beautiful,healthy usili..love to make some soon.

Saras said...

Healthy and delicious combo..

Related Posts Plugin for WordPress, Blogger...