சிக்கன் டம்ப்ளிங் சூப் - Chicken & Dumpling Soup - Healthy Soup


Canadaவில் இந்த சூப் மிகவும் பிரபலம். மிகவும் ஹெல்தியான  Comforting உணவு இது.

இதில் சிக்கனை எலும்புடன் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். சிக்கனை Directஆக சூப்பில் சேர்க்காமல், முதல் அதனை 2 தே.கரண்டி ஆலிவ் எண்ணெயில் அதனை வறுத்து எடுத்து பிறகு சேர்த்தால் கூடுதால் சுவையுடன் இருக்கும்.

Dumplingsயினை ஒவ்வொருவரும் விதவிதமாக செய்வாங்க… Butter சேர்த்து செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். நான் மைதா + கார்ன்மீல் வைத்து செய்து இருக்கின்றேன். (கண்டிப்பாக கார்ன்மீல் சேர்த்தால் தான் நன்றாக இருக்கும். )

விரும்பினால் Dumplings செய்வதற்கு பதிலாக Biscuit Mix / Biscuit Dough வைத்து கூட செய்யலாம்.

அவரவர் விருப்பததிற்கு ஏற்றாற் போல காய்கள் சேர்த்து கொள்ளவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/2 கிலோ (தோல் + எலும்புடன்)
·        சிக்கன் ஸ்டாக் – 3 கப்
·        மிளகுதூள் , உப்பு – தேவையான அளவு
·        ஓரோகனோ லீவ்ஸ்( Dry Oregano Leaves) – 1 தே.கரண்டி
·        ஆலிவ் ஆயில் – 2 மேஜை கரண்டி

நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 1 பெரிய வெங்காயம்
·        பூண்டு – 5 பல்
·        Celery Sticks -  2 கப் நறுக்கியது
·        காரட் – 1 கப் நறுக்கியது

Dumplings செய்ய :
·        மைதா மாவு – 1 + 1/2 கப்
·        மஞ்சள் கார்ன்மீல் – 1/2 கப்
·        பேக்கிங் பவுடர் – 1 மேஜை கரண்டி
·        உப்பு – தேவையான அளவு (சுமார் 1 தே.கரண்டிக்கும் குறைவாக)
·        பால் – 1 + 1/2  கப்

செய்முறை :
·        வெங்காயம்  + செலரியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி வைக்கவும்.

·        பனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் + பூண்டு சேர்த்து வதக்கவும்.


·        வெங்காயம் சிறிது வதங்கியதும் செலரி சேர்த்து வதக்கவும்.


·        இத்துடன் Oregano + தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.


·        சிக்கன் ஸ்டாக் + சிக்கன் சேர்த்து சிக்கன் வேகும் வரை (சுமார் 15 நிமிடங்கள் ) தட்டு போட்டு மூடி வேகவிடவும்.


·        சிக்கன் வெந்த பிறகு, அதனை தனியாக வெளியே எடுத்து சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும்.


·        அதன்பிறகு, அதன் தோல் பகுதி + எலும்பினை நீக்கி சதை பகுதி மட்டும் எடுத்து வைக்கவும்.


·        எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் + காரட் + மிளகு தூள் + தேவையான அளவு உப்பு + 2 கப் தண்ணீர் சேர்த்து மிகவும் குறைந்த தீயில் வேகவிடவும்.


Dumplings செய்ய  :  
·        மைதா மாவு + கார்ன்மீல் + பேக்கிங் பவுடர் + உப்பு சேர்த்து தனியாக கலந்து வைக்கவும்.

·        பாலினை ஒரு பவுலில் ஊற்றி கொள்ளவும்.


·        இத்துடன் கலந்து வைத்துள்ள Dry Ingredients யினை சேர்த்து கரண்டியினால் கலந்து கொள்ளவும்.


·        இந்த மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது தளர்வாகவோ இருக்க கூடாது. (கவனிக்க : கொடுத்துள்ள அளவின் படி செய்தால் மாவு சரியான பத்ததில் இருக்கும். ) இப்பொழுது Dumplings செய்ய மாவு ரெடி. (இதனை அக்‌ஷ்தா தான் எனக்கு கலந்து கொடுத்தாள்…)


·        பிறகு, சூப் இருக்கும் பாத்திரத்தில் இந்த மாவினை கரண்டியினால் எடுத்து Scoop செய்து சூப்பில் போடவும். (கவனிக்க : அப்படியே Spoonயினால் எடுத்து போடவும். கையில் உருட்ட வேண்டாம்)


·        இதனை அப்படியே தட்டு போட்டு மூடி சுமார் 20 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். (Dumplingsயினை கிளறிவிடவோ அல்லது திருப்பிவிடவோ கூடாது. அப்படி செய்தால் அதனுடனைய Softness மாறிவிடும். )·        இப்பொழுது சுவையான சிக்கன் டம்ப்ளிங் சூப் ரெடி.


3 comments:

Priya Anandakumar said...

Very healthy and delicious soup, I love chicken soup, like the way you added dumplings to it...

Mahi said...

வித்யாசமா இருக்கு கீதா! டம்ப்ளிங்-என்றதும், தனியே ஸ்டீம் பன்ணி போட்டிருப்பீங்க என்று நினைச்சுட்டே படிச்சேன். இன்ட்ரஸ்டிங்! :)

Saratha said...

Very nice.

Related Posts Plugin for WordPress, Blogger...